குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி போட்டி: கெஜ்ரிவால்

Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
ஆமதாபாத்: குஜராத்தில் வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.குஜராத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது பா.ஜ.,வின் விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்நிலையில், ஆமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான
AamAadmi, AAP, Kejriwal, Gujarat, Assembly Election, ஆம்ஆத்மி, அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத், சட்டசபை தேர்தல்

ஆமதாபாத்: குஜராத்தில் வரும் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம்ஆத்மி கட்சி போட்டியிடும் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு தற்போது பா.ஜ.,வின் விஜய் ரூபானி முதல்வராக உள்ளார். இந்நிலையில், ஆமதாபாத்தில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம் கூறியதாவது: குஜராத் சட்டசபை தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடும். டில்லியில் மின்சாரம் இலவசம் என்றால் குஜராத்திலும் ஏன் அது சாத்தியப்படாது என இங்குள்ள மக்கள் நினைக்கின்றனர்.


latest tamil news


இதேபோல குஜராத்தில் மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகளின் நிலையும் கடந்த 70 ஆண்டுகளில் எவ்வித முன்னேற்றமும் அடையவில்லை. ஆனால், தற்போது மாற்றங்கள் நிகழும். டில்லியின் மாதிரி திட்டம் குஜராத்துக்குக் கொண்டுவரப்படாது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு பிரச்னைகள் உள்ளன, அதற்கேற்ப தீர்வுகளும் உள்ளன. குஜராத்துக்கான திட்டத்தை குஜராத் மக்களே தீர்மானிப்பார்கள். குஜராத் மக்களுக்கு பா.ஜ., மற்றும் காங்கிரசுக்கான மாற்றாக ஆம் ஆத்மி இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
15-ஜூன்-202114:29:37 IST Report Abuse
pradeesh parthasarathy பிஜேபி யின் பி டீம் கெஜ்ரிவால் ... ஒவாய்சி இனி அடுத்த c டீம் எப்போ யாருடன் கூட்டணி ....
Rate this:
Cancel
Paraman - Madras,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-202109:14:31 IST Report Abuse
Paraman டெல்லியில் மக்கள் சேவை செய்து கிழிச்சுட்டாரு இப்போ குஜராத்
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
15-ஜூன்-202104:50:58 IST Report Abuse
Elango காங்கிரஸ் ஓட்டுகளை பிரிக்க அஸென்மென்ட??? மற்றபடி எவ்வளவு வெற்றி கிடைக்கும் என்பது சந்தேகமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X