சிராக் பஸ்வானுக்கு எதிராக 5 எம்.பி.க்கள் போர்க்கொடி: இரண்டாக உடைகிறது லோக் ஜனசக்தி கட்சி

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
பாட்டா: பீஹாரின் பிரதான எதிர்க்கட்சியான ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வானுக்கு எதிராக 5 எம்.பி.,க்கள் போர்க்கொடி தூக்கியதால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.இக்கட்சியை 2000ம் ஆண்டு ராம்விலாஸ் பஸ்வான் துவக்கினார். மத்தியில் பா.ஜ. தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்தார். கடந்த 2020 அக்டோபரில் உடல்நலக்குறைவால்
 சிராக் பஸ்வான் , 5 எம்.பி.க்கள், போர்க்கொடி,  கட்சிஉடைகிறது

பாட்டா: பீஹாரின் பிரதான எதிர்க்கட்சியான ராம்விலாஸ் பஸ்வானின் லோக்ஜனசக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வானுக்கு எதிராக 5 எம்.பி.,க்கள் போர்க்கொடி தூக்கியதால் கட்சியில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இக்கட்சியை 2000ம் ஆண்டு ராம்விலாஸ் பஸ்வான் துவக்கினார். மத்தியில் பா.ஜ. தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்தார். கடந்த 2020 அக்டோபரில் உடல்நலக்குறைவால் காலமானார்.


latest tamil news



இக்கட்சி தலைவராக ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் உள்ளார். இக்கட்சிக்கு பார்லி லோக்சபாவில் 6 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 5 எம்.பி.,க்கள் திடீரென சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். இன்று லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து பசுபதிகுமார் பரஸை , பார்லிமென்ட் குழு தலைவராக்க வேண்டும் என வலியுறுத்தி கடிதம் கொடுத்தனர்.
இதையடுத்து சிராக் பஸ்வானுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. லோக்ஜனசக்தி கட்சி இரண்டாக உடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SUBBU - MADURAI,இந்தியா
14-ஜூன்-202121:51:43 IST Report Abuse
SUBBU மோடிக்கு எதிராகவும் நிதீஷ்க்கு எதிராகவும் தனியாக நின்று ஓட்டுகளை பிரித்ததற்கு தண்டனையை அனுபவித்துதானே ஆகணும்.அணுபவி ராஜா அணுபவி
Rate this:
Cancel
14-ஜூன்-202120:34:07 IST Report Abuse
kulandhai Kannan தந்தையின் முயற்சியால் பாலிவுட்டில் தோல்வி அடைந்து, வாரிசு அரசியல் நடத்திவரும் சிராக் பாஸ்வான் போன்றவர்கள், ஜனநாயகத்திற்குக் கேடானவர்கள்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
14-ஜூன்-202119:43:52 IST Report Abuse
A.George Alphonse அரசியலில் குழந்தை என்றும், சிறுபிள் ளையின் வெள்ளாமை வீடுவந்து சேராது. இதுவே உதாரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X