பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 14, 2021
Share
Advertisement
ஜூன் 15, 1944மலேஷியாவில், 1944, ஜூன் 15ம் தேதி பிறந்தவர் வாசுதேவன். அங்குள்ள தமிழர் இசைக்குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்; நாடகங்களிலும் நடித்தார். இதனால், நடிப்பதற்கு வாய்ப்பு தேடி சென்னை வந்தார். மலேஷிய தமிழர்கள் கூட்டாக தயாரித்த, ரத்தப் பேய் படத்தில் நடித்தார்.அதன் பின், இளையராஜாவின், 'பாவலர் பிரதர்ஸ்' இசைக்குழுவில் சேர்ந்து, மேடை கச்சேரிகளில் பாடினார்.


இதே நாளில் அன்று


ஜூன் 15, 1944



மலேஷியாவில், 1944, ஜூன் 15ம் தேதி பிறந்தவர் வாசுதேவன். அங்குள்ள தமிழர் இசைக்குழு ஒன்றில் முக்கிய பாடகராக விளங்கினார்; நாடகங்களிலும் நடித்தார். இதனால், நடிப்பதற்கு வாய்ப்பு தேடி சென்னை வந்தார். மலேஷிய தமிழர்கள் கூட்டாக தயாரித்த, ரத்தப் பேய் படத்தில் நடித்தார்.அதன் பின், இளையராஜாவின், 'பாவலர் பிரதர்ஸ்' இசைக்குழுவில் சேர்ந்து, மேடை கச்சேரிகளில் பாடினார். பொல்லாத உலகில் ஒரு போராட்டம் என்ற படத்தில், 'பாலு விக்கிற பத்தம்மா...' என்ற பாடல் மூலம், சினிமாவில் பாடகராக அறிமுகமானார். 16 வயதினிலே படத்தில் இடம்பெற்ற,
'ஆட்டுக்குட்டி முட்டையிட்டு...' என்ற பாடல் மூலம் பிரபல பாடகராக உயர்ந்தார். 8,000த்துக்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார்.வில்லன், குணச்சித்திரம் என, 85 படங்களில் நடித்துள்ளார். சாமந்திப் பூ உட்பட, நான்கு படங்களுக்கு இசை அமைத்துள்ளார். நீ சிரித்தால் தீபாவளி என்ற படத்தை இயக்கினார். 2011, பிப்., 20ம் தேதி, தன் 66வது வயதில் காலமானார்.
பாடகர் மலேஷியா வாசுதேவன் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X