'நாட்டில் சீரழிந்த நிலங்களை சீரமைக்க திட்டம்: ஐ.நா., கூட்டத்தில் மோடி பேச்சு

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி : ''நாட்டில் சீரழிந்த நிலங்களை, 2030ம் ஆண்டுக்குள் சீரமைக்கவும், வளரும் நாடுகளில் சீரழிந்த நிலங்களை மறுசீரமைப்பு செய்ய உதவவும், மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார். பாலைவனமாக்கல், நிலங்கள் சீரழிதல் மற்றும் வறட்சி குறித்து, ஐ.நா., உயர்நிலை கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி
   ஐ.நா.,  கூட்டம், பிரதமர் மோடி, பேச்சு

புதுடில்லி : ''நாட்டில் சீரழிந்த நிலங்களை, 2030ம் ஆண்டுக்குள் சீரமைக்கவும், வளரும் நாடுகளில் சீரழிந்த நிலங்களை மறுசீரமைப்பு செய்ய உதவவும், மத்திய அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது,'' என, பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.

பாலைவனமாக்கல், நிலங்கள் சீரழிதல் மற்றும் வறட்சி குறித்து, ஐ.நா., உயர்நிலை கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.


latest tamil news
அப்போது அவர் பேசியதாவது:

நிலங்கள் சீரழிவது, உலகின் மூன்றில் இரண்டு பங்கை பாதிக்கிறது. இதை கவனிக்காமல் கடந்து சென்றால், சமூகத்தின் அடிப்படை கட்டமைப்பு, பொருளாதாரம், உணவு பாதுகாப்பு, சுகாதாரம், வாழ்க்கை தரம் ஆகியவை அடியோடு அழிந்துவிடும்.
எனவே, நிலங்கள் அழிக்கப்படுவதையும், அதன் வளங்கள் சுரண்டப்படுவதையும் நாம் உடனடியாக தடுத்தாக வேண்டும். இதை நாம் அனைவரும் ஒன்றிணைந்து சாதிக்க வேண்டும்.

நிலங்கள் அழிக்கப்படுவது குறித்து சர்வதேச சமூகத்தின் முறையிடுவது பற்றி இந்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செய்து வருகின்றன.கடந்த, 10 ஆண்டுகளில், 30 லட்சம் ஹெக்டேர் வனப்பகுதிகள் இந்தியாவில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக நாட்டின் மொத்த பரப்பளவில் வனப்பகுதியில் பங்கு, நான்கில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது.

நிலங்கள் அழிக்கப்படுவதை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொண்டு வருகிறது.வரும், 2030க்குள், சீரழிந்த, 2.6 கோடி ஹெக்டேர் நிலங்களை மீட்டு மறுசீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன. மேலும், வளரும் நாடுகளில் சீரழிந்த நிலங்களை மீட்டெடுக்கவும், அவர்களுக்கு உதவவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.இவ்வாறு அவர் பேசினார்.


அமைச்சர்களுடன் ஆலோசனை

கடந்த இரண்டு ஆண்டுகளில் மத்திய அரசு செயல்படுத்திய திட்டங்கள், எடுத்த நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்து, மத்திய அமைச்சர்களுடன் கடந்த ஒரு வாரமாக பிரதமர் நரேந்திர மோடி நேரடியாக பேசி வருகிறார்.
பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் நடக்கும் இந்த சந்திப்புகளில், பா.ஜ., தலைவர் ஜே.பி.நட்டாவும் பங்கேற்கிறார். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, ரவி சங்கர் பிரசாத் ஆகியோர் பிரதமரை சந்தித்து பேசினர்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajan - erode,இந்தியா
15-ஜூன்-202110:41:05 IST Report Abuse
rajan நிலங்கள் சீரழிதல் மற்றும் வறட்சி குறித்து, ஐ.நா., உயர்நிலை கூட்டத்தில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். நிலங்களில் குழாய் பாதிப்பும் எட்டு வழி சாலையும் அமைக்க மோடி உத்தரவு
Rate this:
Cancel
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-202109:28:49 IST Report Abuse
Raj தாடி மிக நீளம். மிகுந்த மனஅழுத்ததில் இருக்கிறார் போல.
Rate this:
Cancel
sndjj -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-202109:22:15 IST Report Abuse
sndjj real-estate and NRI gentle man and it professional and govt officials and politicians money to be scrutinized the welfare of the nation, thereby the farming land will not go to this people, and they can be used for farming.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X