உ.பி., சட்டசபை தேர்தலால் பா.ஜ.,வுக்கு தலைவலி : சிறிய கட்சிகள் நெருக்கடி

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சியில் பங்கு கேட்டு, பா.ஜ.,வுக்கு அழுத்தம் கொடுக்க துவங்கி உள்ளன.தேர்தலை கருத்தில் வைத்து, வரும் வாரங்களில், மத்திய அமைச்சரவையை விஸ்தரிக்க, பா.ஜ., தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில்,
BJP, UP election, Yogi Adityanath

உத்தர பிரதேசத்தில் அடுத்தாண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள நிலையில், பா.ஜ., கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகள் மத்தியிலும், மாநிலத்திலும், ஆட்சியில் பங்கு கேட்டு, பா.ஜ.,வுக்கு அழுத்தம் கொடுக்க துவங்கி உள்ளன.

தேர்தலை கருத்தில் வைத்து, வரும் வாரங்களில், மத்திய அமைச்சரவையை விஸ்தரிக்க, பா.ஜ., தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஒன்பது மாதங்களுக்கும் குறைவான அவகாசமே உள்ளது.உ.பி.,யில், பல்வேறு சிறிய உள்ளூர் கட்சிகளுடன், பா.ஜ., கூட்டணி அமைத்து, 2017 சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றது.


கோரிக்கை


அதில் அனுப்பிரியா தலைமையிலான அப்னா தளம் மற்றும் டாக்டர் நிஷாத் தலைமையிலான, நிஷாத் எனப்படும், நிர்பால் இந்திய சோஷித் ஹமாரா ஆம் தளம் ஆகிய கட்சிகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அப்னா தளம், 2017 சட்டசபை தேர்தல் மற்றும் 2019 லோக்சபா தேர்தல்களில் பா.ஜ.,வுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது. இக்கட்சிக்கு ஒன்பது எம்.எல்.ஏ.,க்களும், இரண்டு லோக்சபா எம்.பி.,க்களும் உள்ளனர். அப்னா தளம் கட்சிக்கு, குர்மி இன மக்களின் ஆதரவு உள்ளது. உ.பி., மக்கள் தொகையில், 9 சதவீதத்தினர், குர்மி இனத்தைச் சேர்ந்தவர்கள்.மிர்ஸாபூர், வாரணாசி, சந்தவுலி, பிரயாக்ராஜ் மாவட்டங்களில் குர்மி இனத்தைச் சேர்ந்த, 18 சதவீதம் பேர் வசிக்கின்றனர்.

நிஷாத் கட்சி, 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ., வுடன் கைகோர்த்தது. இக்கட்சிக்கு, உ.பி., சட்டசபையில் ஒரு எம்.எல்.ஏ., உள்ளார். மாவு, அஸம்கர், வாரணாசி, பிரயாக்ராஜ் ஆகிய மாவட்ட மக்கள் தொகையில் 14 சதவீதம் பேர், நிஷாத் இனத்தை சேர்ந்தவர்கள். கங்கை மற்றும் யமுனை ஆற்றங்கரையில் உள்ள கிராமங்களில், இக்கட்சிக்கு மிகுந்த செல்வாக்கு உள்ளது.இந்த இரு கட்சிகளும், உள்ளூரை சேர்ந்த சிறிய கட்சிகள் என்றாலும், சட்டசபை தேர்தலில் ஆட்சியாளர்களை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இவ்விரு கட்சிகளுக்கும், மத்திய, மாநில அமைச்சரவையில் பதவிகள் வழங்கப்படும் என, பா.ஜ., தலைமை கடந்த தேர்தல்களின் போது வாக்குறுதி அளித்து இருந்தது; ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.சட்டசபை தேர்தல் நெருங்குவதை அடுத்து, இந்த இரு கட்சித் தலைவர்களும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, சமீபத்தில் சந்தித்து பேசினர். அப்போது மத்திய, மாநில அமைச்சரவையில் பங்கு கேட்டு, அவர்கள் கோரிக்கை வைத்ததாக கூறப்படுகிறது.


18 சதவீதம்


வரும் வாரங்களில், மத்திய அமைச்சரவை விஸ்தரிப்பு தொடர்பான அறிவிப்பு வர வாய்ப்புஇருப்பதாக கூறப்படுகிறது.இவை தவிர, உ.பி.,யை சேர்ந்த, எஸ்.பி.எஸ்.பி., எனப்படும், சுஹல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி, கடந்த 2017 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வுடன் கூட்டணி அமைத்தது. இக்கட்சி தலைவர் ஓம் பிரகாஷ் ராஜ்பர், யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பதவி வகித்து வந்தார்.

தன் கட்சியை பலவீனமாக்க பா.ஜ., முயற்சிப்பதாக குற்றம்சாட்டி, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கடந்த 2019 லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணியில் இவர் இடம் பெறவில்லை. அடுத்த ஆண்டு நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில், கூட்டணி அமைப்பது குறித்து, ஓம் பிரகாஷ் ராஜ்பர் முயற்சித்து வருகிறார். இவரை, பா.ஜ., கூட்டணியில் இணைத்துக் கொள்ள முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது.

கிழக்கு உ.பி.,யின், காஸிபூர், பாலியா, வாரணாசி ஆகிய மாவட்டங்களில் ராஜ்பர் இனத்தை சேர்ந்தவர்கள், 18 சதவீதமாக இருப்பதால், இங்கு, 70 சட்டசபை தொகுதிகளின் வெற்றியை, இந்த சமுதாய மக்கள் நிர்ணயிக்கின்றனர். ஆளும் கட்சி மீது ஏற்கனவே பல்வேறு விமர்சனங்கள் இருப்பதால், வெற்றியை எளிதாக்க, இது போன்ற ஜாதி ரீதியாக பலம் வாய்ந்த சிறிய கட்சிகளை கூட்டணிக்குள் இணைத்துக் கொள்ள, பா.ஜ., முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது.

- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஜூன்-202120:25:32 IST Report Abuse
Pugazh V இந்த செய்தி பாஜகவின் கேவலமான நிலையைக் காட்டுகிறது. 1. மந்திரி பதவி தருவதாக பொய்சொல்லி ஏமாற்றியது. 2. பாஜகவிற்கு உ.பி.யில் அப்படி ஒன்றும் பெரிய மெஜாரிட்டி புண்ணாக்கு ஏதுமில்லை.
Rate this:
Cancel
R MANIVANNAN - chennai,இந்தியா
15-ஜூன்-202113:55:59 IST Report Abuse
R MANIVANNAN தனியாக நின்று பலத்தை காட்டலாமே
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஜூன்-202113:52:55 IST Report Abuse
Pugazh V அப்னா தள், நிஷாத் இவ்விரு கட்சிகளுக்கும், மத்திய, மாநில அமைச்சரவையில் பதவிகள் வழங்கப்படும் என, பா.ஜ., தலைமை கடந்த தேர்தல்களின் போது வாக்குறுதி அளித்து இருந்தது ஆனால், அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அடப்பாவமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X