சிராக் பஸ்வானுக்கு எதிராக 5 எம்.பி.,க்கள் போர்க்கொடி

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (2+ 3)
Share
Advertisement
புதுடில்லி :லோக் ஜன சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வா னுக்கு எதிராக, அக்கட்சியை சேர்ந்த ஐந்து எம்.பி.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். அக்கட்சியின் பார்லிமென்ட் தலைவர் பதவி யில் இருந்து சிராக் பஸ்வானை நீக்கிவிட்டு, அவரது உறவினர் பசுபதி குமார் பராசை தலைவராக தேர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர்கள் கடிதம் அளித்து உள்ளனர். சட்ட சபை
சிராக் பஸ்வான், 5 எம்.பி.,க்கள் , போர்க்கொடி

புதுடில்லி :லோக் ஜன சக்தி கட்சி தலைவர் சிராக் பஸ்வா னுக்கு எதிராக, அக்கட்சியை சேர்ந்த ஐந்து எம்.பி.,க்கள் போர்க்கொடி துாக்கியுள்ளனர். அக்கட்சியின் பார்லிமென்ட் தலைவர் பதவி யில் இருந்து சிராக் பஸ்வானை நீக்கிவிட்டு, அவரது உறவினர் பசுபதி குமார் பராசை தலைவராக தேர்வு செய்துள்ளனர். இது தொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் அவர்கள் கடிதம் அளித்து உள்ளனர்.


சட்ட சபை தேர்தல்



பீஹார் சட்டசபை தேர்தல் கடந்த ஆண்டு நடந்தது. இதற்கு முன்னதாக லோக் ஜன சக்தி தலைவர் ராம்விலாஸ் பஸ்வான், கடந்த ஆண்டு அக்டோபரில் காலமானார்.இதையடுத்து, அவரது மகன் சிராக் பஸ்வான், கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். மத்தியில், பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் லோக் ஜன சக்தி இடம் பெற்று இருந்தது. ஆனால், பீஹார் சட்டசபை தேர்தலில் லோக் ஜன சக்தி தனித்து போட்டியிடும் என, சிராக் பஸ்வான் அறிவித்தார். அந்த தேர்தலில், ஒரே ஒரு இடத்தில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது.
தனித்து போட்டி என்ற சிராக் பஸ்வானின் முடிவு, அவரது கட்சிக்கு மட்டுமல்லாமல், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்திற்கும் பின்னடைவை ஏற்படுத்தியது.பீஹார் சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட தொகுதியில், லோக் ஜன சக்தி வேட்பாளர்களை சிராக் பஸ்வான் களம் இறக்கினார்.

இதனால் ஓட்டுகள் பிரிந்தன. எனவே, பா.ஜ., மற்றும் ராஷ்ட்ரீய ஜனதா தளத்திற்கு அடுத்தபடியாக, மூன்றாவது இடத்தையே ஐக்கிய ஜனதா தளத்தால் பிடிக்க முடிந்தது. சிராக் பஸ்வானின் கடுமையான நடவடிக்கைகளால், கட்சித் தலைவர்கள் அதிருப்தியில் இருந்ததாக கூறப்படுகிறது. அவரது தந்தையின் இளைய சகோதரரும், லோக்சபா எம்.பி.,யுமான பசுபதி குமார் பராஸ் உடன், சிராக் பஸ்வானுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டது.


வெளிப்படை



இருவருக்கும் இடையே இருந்து வந்த பனிப் போர், தற்போது வெளிப்படையாக வெடித்துள்ளது.சிராக் பஸ்வான், பசுபதி குமார் உட்பட லோக் ஜன சக்திக்கு, லோக்சபாவில் ஆறு எம்.பி.,க்கள் உள்ளனர். இதில் பசுபதி குமார் உட்பட ஐந்து பேர், சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். எம்.பி.,க்கள் ஐந்து பேர், சபாநாயகர் ஓம் பிர்லாவை நேற்று டில்லியில் சந்தித்தனர். லோக் ஜன சக்தி பார்லிமென்ட் தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வானை நீக்கி விட்டு, பசுபதி குமார் பராசை தேர்வு செய்துள்ளதாகவும், இதற்கு ஒப்புதல் அளிக்கும்படியும் சபாநாயகரிடம் கடிதம் அளித்தனர்.

இது குறித்து, பசுபதி குமார் பராஸ் கூறியதாவது:லோக்சபாவில் எங்கள் கட்சி சார்பில் ஆறு எம்.பி.,க்கள் உள்ளனர். கட்சியை காப்பாற்றும் நோக்கத்தில் ஐந்து பேர், தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர். சிராக் பஸ்வான் என் சகோதரரின் மகன்; கட்சியின் தேசிய தலைவராகவும் உள்ளார். அதில் எங்களுக்கு மாற்று கருத்து இல்லை.நான் தே.ஜ., கூட்டணிக்கு ஆதரவு அளிக்கிறேன். நிதிஷ் குமார் சிறந்த தலைவர். மாநில வளர்ச்சிக்காக அவர் உழைக்கிறார்.இவ்வாறு அவர் கூறினார்.மத்திய அமைச்சரவையில் பசுபதி குமாருக்கு அமைச்சர் பதவி வாங்கித் தர, நிதிஷ் உறுதி அளித்திருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரசியல் சதுரங்கத்தில் காட்சிகள் மாறியிருப்பதாக, அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, சிராக் பஸ்வான் நேற்று டில்லியில் பசுபதி குமார் பராசை சந்தித்து பேசினார்.


'வினை விதைத்தவன் வினை அறுப்பான்!'



ஐக்கிய ஜனதா தள தேசிய தலைவர் ஆர்.சி.பி.சிங் நேற்று கூறியதாவது:தே.ஜ., கூட்டணியில் இடம் பெற்றிருந்த லோக் ஜன சக்தி, பீஹார் சட்டசபை தேர்தலில் தனித்து போட்டியிட்டது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. சிராக் பஸ்வானின் இந்த முடிவால், அக்கட்சி தலைவர்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர். வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்ற பழமொழிக்கு ஏற்ப, முன் செய்த தவறுக்கு சிராக் இன்றைக்கு சொந்த கட்சியினரால் தனித்து விடப்பட்டுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (2+ 3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Abdul Aleem - chennai,ஐக்கிய அரபு நாடுகள்
15-ஜூன்-202111:11:47 IST Report Abuse
Abdul Aleem முதலில் அவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு அப்புறம் போர் கோடி தூக்கட்டும் இவர்கள் உண்மையான அரசியல் வாதியாக இருந்த இத செய்யட்டும் எல்லாம் பணம் பதவி செய்ற வேல
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
15-ஜூன்-202101:51:21 IST Report Abuse
அன்பு போனமுறை சட்டசபை தேர்தலின்போது விளையாண்டது பிஜேபி. அதற்கு இந்த முறை நிதானமாக நிதிஷ் பதிலடி கொடுத்துள்ளார். இதெல்லாம் அரசியல் சூதாட்டம் தான். கிடைக்கும் சமயத்தில் பக்கத்தில் உள்ளவன் காலை வாருவது தான் அரசியல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X