பொது செய்தி

தமிழ்நாடு

குப்பைக் கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு: வருவாய் துறையினர் 'சர்வே'

Added : ஜூன் 14, 2021
Share
Advertisement
அன்னுார்:அன்னுார் அருகே,குப்பனுார் ஊராட்சியில் உள்ள ஆத்திக்குட்டை பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம், அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் 'சர்வே' பணியில் ஈடுபட்டனர்.அன்னுார் அருகே குப்பனுார் ஊராட்சி, ஆத்திக்குட்டையில் குப்பை கிடங்கு அமைக்க, சர்வே செய்யும் பணியில் நேற்று அதிகாரிகள் ஈடுபட்டனர்.ஆத்திக்குட்டையில்,
 குப்பைக் கிடங்கு அமைக்க மக்கள் எதிர்ப்பு: வருவாய் துறையினர் 'சர்வே'

அன்னுார்:அன்னுார் அருகே,குப்பனுார் ஊராட்சியில் உள்ள ஆத்திக்குட்டை பகுதியில் குப்பைக்கிடங்கு அமைக்க, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதேசமயம், அதிகாரிகள் நேற்று அப்பகுதியில் 'சர்வே' பணியில் ஈடுபட்டனர்.அன்னுார் அருகே குப்பனுார் ஊராட்சி, ஆத்திக்குட்டையில் குப்பை கிடங்கு அமைக்க, சர்வே செய்யும் பணியில் நேற்று அதிகாரிகள் ஈடுபட்டனர்.ஆத்திக்குட்டையில், குப்பை கிடங்கு அமைக்க, பொது மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அன்னுார் பேரூராட்சியில், 15 வார்டுகளில், 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். இங்கு தினமும் 12 டன் குப்பை சேகரிக்கப்படுகிறது. சேகரிக்கப்படும் குப்பை, அன்னுார் குளத்தின் ஒரு பகுதியில் கொட்டப்பட்டு, மக்கும் குப்பை, மக்காத குப்பை என, பிரிக்கப்படுகிறது.குளத்தில் குப்பை கொட்ட பொதுப்பணித்துறை எதிர்ப்பு தெரிவித்துள்ளது. விரைவில் அத்திக்கடவு திட்டத்தில், பவானி ஆற்று நீர் குளத்தில் நிரப்பப்பட உள்ளதால் குளத்தில் குப்பை கொட்ட தடை விதித்துள்ளது.4 ஏக்கர் நிலம்ஐந்து ஆண்டுகளுக்கு முன், அன்னுார் பேரூராட்சியில், காக்காபாளையத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த 4 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது. அருகிலுள்ள விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததாலும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதாலும், திட்டம் முடங்கியது.
இந்நிலையில், நேற்று குப்பனுார் ஊராட்சி, ஆத்திக்குட்டையில், பெருமாள் ஆண்டவர் கோவில் அடிவாரத்தில், தாலுகா அலுவலக சர்வேயர் கண்ணன், கிராம நிர்வாக அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அதிகாரிகள், சர்வே பணியில் ஈடுபட்டனர்.மக்கள் எதிர்ப்புஇதுகுறித்து ஆத்திக்குட்டை கிராம மக்கள் கூறியதாவது:இங்கு 500 குடும்பங்கள் வசிக்கின்றன. இங்கு தொழிற்சாலைகள் கிடையாது. இப்பகுதியில் பெரும்பாலானவர்கள் விவசாயம், ஆடு, மாடு மேய்த்தல் ஆகிய பணிகளை செய்து வருகின்றனர். இங்கு தினமும் டன் கணக்கில் குப்பை கொட்டினால், இப்பகுதி மாசுபடும். நிலத்தடி நீர் கெடும். இயற்கை சூழ்ந்த இந்த பகுதி குப்பைமயமாகிவிடும். ஆடு, மாடு மேய்க்கும் தொழிலும், விவசாயமும் பாதிக்கப்படும்.
பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பையை பேரூராட்சியில் ஏதாவது ஒரு இடத்தில் கொட்டி, மக்கும் குப்பை, மக்காத குப்பையாக பிரிக்கலாம். குப்பைகளை, 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இங்கு கொண்டு வருவது தேவையில்லை. இங்கு குப்பை கிடங்கு அமைக்கக் கூடாது. இதை வலியுறுத்தி, பேரூராட்சி மற்றும் கோவை கலெக்டர் அலுவலகத்தில், மனு கொடுத்துள்ளோம்இவ்வாறு, கிராம மக்கள் தெரிவித்தனர்.
பேரூராட்சியில் தினமும் சேகரிக்கப்படும், 12 டன் குப்பைகளை, மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரிக்க, எங்கு இடம் தேர்வு செய்தாலும், அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதால் பேரூராட்சி நிர்வாகம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X