பொது செய்தி

தமிழ்நாடு

அரசுப்பள்ளிக்கு பாடப் புத்தகங்கள் வந்தாச்சு!துரிதமாக வினியோகிக்க ஏற்பாடு

Added : ஜூன் 14, 2021
Share
Advertisement
பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள, 72 அரசு தொடக்கப் பள்ளி மற்றும்நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தேவையான, முதல் பருவத்தேர்வுக்கான இலவச பாடப்புத்தகங்கள் நேற்று வந்தன.மாணவர் சேர்க்கை மற்றும் பாட புத்தகங்கள் வழங்கும் பணிக்காக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், நேற்று முதல் பள்ளிக்கு வர வேண்டும் என, தமிழக அரசு
 அரசுப்பள்ளிக்கு பாடப் புத்தகங்கள்  வந்தாச்சு!துரிதமாக வினியோகிக்க ஏற்பாடு

பெ.நா.பாளையம்:பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில் உள்ள, 72 அரசு தொடக்கப் பள்ளி மற்றும்நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு தேவையான, முதல் பருவத்தேர்வுக்கான இலவச பாடப்புத்தகங்கள் நேற்று வந்தன.மாணவர் சேர்க்கை மற்றும் பாட புத்தகங்கள் வழங்கும் பணிக்காக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள், நேற்று முதல் பள்ளிக்கு வர வேண்டும் என, தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான பணிகளுக்காக, ஊரடங்கு விதிமுறைகளிலும் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிகளில் முதல்கட்ட நிர்வாக பணிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனவும், விண்ணப்பங்கள் வழங்குவது, புதிய வகுப்பு மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை பெறுவது போன்ற அடிப்படை பணிகளை மேற்கொள்ளவும், உத்தரவிடப்பட்டிருந்தது.பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்தில், ஊராட்சி மற்றும் பேரூராட்சி பகுதிகளில், 72 அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், 8 ஆயிரத்து, 333 மாணவ, மாணவியர் பயில்கின்றனர்.இவர்களுக்கு தேவையான இலவச பாடப் புத்தகங்கள், தருவிக்கப்பட்டு, இருப்பு வைக்கப்பட்டுள்ளன.இதுகுறித்து, பெரியநாயக்கன்பாளையம் வட்டார கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது: நரசிம்மநாயக்கன்பாளையத்தில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில், பெரியநாயக்கன்பாளையம் வட்டாரத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலைப் பள்ளி, தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கான அனைத்து புத்தகங்களும் பெறப்பட்டு, இருப்பில் வைக்கப்பட்டுள்ளன.இங்கு, 1 முதல், 7ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு தேவையான முதல் பருவத்தேர்வு காண, அனைத்து புத்தகங்களும் உள்ளன.எட்டாம் வகுப்பு மாணவ, மாணவியருக்கு, 3 பருவத் தேர்வுகளுக்கான புத்தகங்களும் வந்துவிட்டன. இவை அனைத்தும் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களிடம், அரசு உத்தரவுப்படி, உரிய நேரத்தில் ஒப்படைக்கப்பட்டு, மாணவ மாணவியருக்கு வழங்கப்படும்.மேலும், தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி இறுதி வகுப்பில் தேர்ச்சி பெற்ற, அனைவருக்கும் மாற்றுச் சான்றிதழ் வழங்க, நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து, அந்தந்த வகுப்பு மாணவர்களின் பெற்றோருக்கு, 'வாட்ஸ்ஆப்' வாயிலாக, தகவல் தெரிவிக்கப்படும். இதையடுத்து, அரசு உத்தரவின்படி, முதல் வகுப்பு மாணவர் சேர்க்கை மற்றும் பிற வகுப்பு மாணவர்கள் சேர்க்கை துவக்கப்படும்.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X