அரசியல் செய்தி

தமிழ்நாடு

'கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்'

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
சென்னை :'கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால், எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:அரசு தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கைகளால், கொரோனா என்ற பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகிற சங்கிலியை, முதலில் உடைத்தாக
கட்டுப்பாடுகள், மீறல்,   ஊரடங்கு, தளர்வுகள் நீக்கம்

சென்னை :'கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால், எந்த நேரத்திலும் இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும்' என, முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு:

அரசு தொடர்ச்சியாக எடுத்த நடவடிக்கைகளால், கொரோனா என்ற பெருந்தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்திருக்கிறது. ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு பரவுகிற சங்கிலியை, முதலில் உடைத்தாக வேண்டும். அதற்காகவே மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த முழு ஊரடங்கை அறிவித்தோம்.

ஊரடங்கு கட்டுப்பாட்டை மக்கள் முறையாகவும், முழுமையாகவும் கடைபிடித்ததால் தான், இந்த அளவுக்கு கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. எனவே, விதிமுறைகளை பின்பற்றி நடந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் நன்றி.அதே எச்சரிக்கை உணர்வோடு, மக்கள் தொடர்ந்து இருக்க வேண்டும். கொரோனா கட்டுக்குள் வந்து விட்டது என்று தான் சொன்னேனே தவிர, முழுமையாக அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்று சொல்லவில்லை. மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

அரசு, மக்களுடைய நெருக்கடியை உணர்ந்திருப்பதால், கொரோனா குறைந்து வரும் மாவட்டங்களில், சில தளர்வுகளை கொடுத்திருக்கிறோம்: சில கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறோம். அதற்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தளர்வுகள் கொடுத்து விட்டனர் என்று அவசியம் இல்லாமல், வெளியில் நடமாடக் கூடாது. ஒவ்வொருவரும் சுயகட்டுப்பாடுகளை விதித்து கொள்ள வேண்டும். டீக்கடைகளில் கூட்டம் கூடுவதை, மக்கள் தவிர்க்க வேண்டும். தனி மனித இடைவெளியை கடைப்பிடித்தாக வேண்டும். முடிதிருத்தும் நிலையங்களிலும், கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க வேண்டும்.போலி மது, கள்ள மது போன்ற தீமைகள், தமிழகத்தை சீரழித்து விடக் கூடாது என்பதில், இந்த அரசு கவனமாக உள்ளது. 'டாஸ்மாக்' கடைகள், முழுமையான கட்டுப்பாடுகளை பின்பற்றி இயங்கும்.

கொரோனா கால கட்டுப்பாடுகள் மீறப்படுமானால், எந்த நேரத்திலும், இந்த தளர்வுகள் திரும்ப பெறப்படும். கட்டுப்பாட்டை மீறுகிறவர்கள், தங்களுக்கு மட்டுமல்ல, இந்த நாட்டுக்கும் தீமை செய்பவர்கள் என்பதை உணர வேண்டும்.காவல் துறை கண்காணிப்பு இல்லாமலே, கட்டுப்பாட்டோடு நடந்து கொள்கிற மக்களாக, மக்கள் மாற வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம்.

பொது போக்குவரத்து சேவை, விரைவில் இயங்க வேண்டும். பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட வேண்டும். அதற்கு, மக்கள் துணை அவசியம். தொற்றுப் பரவலை தகர்க்கும் வல்லமை, மக்களுக்கு உண்டு. மக்கள் சக்தியே உயர்ந்தது என்பதை விரைவில் நிரூபிப்போம்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nizamudin - trichy,இந்தியா
16-ஜூன்-202116:01:55 IST Report Abuse
nizamudin மக்களின் முதல்வர் என்று ஸ்டாலின் அவர்களை அழைக்கலாம்
Rate this:
Cancel
Nellai tamilan - Tirunelveli,இந்தியா
15-ஜூன்-202113:19:51 IST Report Abuse
Nellai tamilan இவரே கதவை தொறந்து வைப்பாராம் ஆனா யாருமே வெளில வரக்கூடாதாம். இதுக்கு பெயர் நிர்வாகத் திறமையாம். கஷ்ட காலம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-ஜூன்-202112:56:35 IST Report Abuse
RajanRajan கட்டுப்பாடுகளை மீறினால் ஊரடங்கு தளர்வுகள் நீக்கப்படும்' எங்கே தில் இருந்தால் இன்னும் ஒரு வருசத்துக்கு தளர்வுகளை நீக்கி தான் பாரேன். என்னவாகும்னு பார்க்கலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X