‛டாஸ்மாக்' கடைகள் திறப்பு: இயல்பு நிலைக்கு திரும்பிய தமிழகம்?

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (81) | |
Advertisement
சென்னை : தமிழகத்தில் ஐந்து வாரங்களுக்கு பின், நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட் டதால், 'குடி'மகன்கள் உற்சாகம் அடைந்தனர். மதுவை அளவுக்கு அதிகமாக குடித்து, போதையேறிய பின், 'கிறுகிறுத்து' போன பலர், பொது இடங்களில் செய்த அடாவடி செயல்கள், தமிழகம், 'இயல்பு நிலை'க்கு திரும்பி விட்டது போன்ற சூழ்நிலையை உருவாக்கின.கொரோனா பரவலை கட்டுப்படுத்த, மே 10ம் தேதி முதல் முழு

சென்னை : தமிழகத்தில் ஐந்து வாரங்களுக்கு பின், நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட் டதால், 'குடி'மகன்கள் உற்சாகம் அடைந்தனர். மதுவை அளவுக்கு அதிகமாக குடித்து, போதையேறிய பின், 'கிறுகிறுத்து' போன பலர், பொது இடங்களில் செய்த அடாவடி செயல்கள், தமிழகம், 'இயல்பு நிலை'க்கு திரும்பி விட்டது போன்ற சூழ்நிலையை உருவாக்கின.latest tamil newsகொரோனா பரவலை கட்டுப்படுத்த, மே 10ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால், அன்று முதல் மதுக்கடைகளும் மூடப்பட்டன. தற்போது ஊரடங்கானது, சில தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும், கொரோனா பரவல் அதிகம் இல்லாத சென்னை உட்பட, 27 மாவட்டங்களில், நேற்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகளை திறக்க அரசு அனுமதி வழங்கியது. அதன்படி, வைரஸ் பரவல் அதிகமுள்ள கோவை, சேலம் உட்பட, 11 மாவட்டங்களில் 1,650 மது கடைகள் தவிர்த்து, மற்ற மாவட்டங்களில் இருக்கும், 3,600க்கும் மேற்பட்ட கடைகள், நேற்று காலை, 10:00 மணிக்கு திறக்கப்பட்டன.

‛குடி'மகன்கள் ஒரே சமயத்தில் கூட்டமாக வருவதை தடுக்க, சவுக்கு கட்டைகளால் ஆன தடுப்புகளும், சமூக இடைவெளி விட்டு நிற்க, கடைகளுக்கு வெளியில், 6 அடி இடைவெளியில் வட்டங்களும் வரையப்பட்டிருந்தன. பல கடைகள் முன், காலை 6:00 மணி முதலே 'குடி'மகன்கள் குவிய துவங்கினர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்ததால், அவர்கள், கொரோனா வழிகாட்டுதலை பின்பற்றி, முக கவசம் அணிந்து வரிசையில் காத்திருந்தனர்.


latest tamil news
ஒவ்வொரு கடைக்கு வெளியிலும் தலா ஒரு ஊழியர் நின்றபடி, ‛குடி'மகன்கள் கைகளை சுத்தும் செய்து கொள்ள கிருமிநாசினி வழங்கியதுடன், முகக் கவசம் அணிந்திருப்பதையும் உறுதி செய்தனர்.பின், 10:00 மணிக்கு கடைகளை திறந்ததும், மது வகைகளை வாங்க கடைகளில் உள்ள கவுன்டர்களுக்கு செல்ல அனுமதித்தனர். ஒருவருக்கு, அதிகபட்சமாக நான்கு ‛குவார்ட்டர்'கள் அல்லது இரண்டு 'ஹாப்' பாட்டில்கள் விற்கப்பட்டன.

கூட்டம் அதிகம் இருந்த கடைகளில் டோக்கன்கள் வழங்கப்பட்டு, அதற்கு ஏற்ப வரிசையில் செல்ல அனுமதித்தனர். நேற்று, பல கடைகளில் வழக்கமான அளவிற்கே, மது வகைகள் விற்பனையாகின. மாலை, 5:00 மணிக்கு மதுக்கடைகள் மூடப்பட்டன. நீண்ட நாட்களுக்கு பின் மதுவை கண்ட சிலர், அதற்கு பூ, பொட்டு வைத்து, கும்பிடாத குறை தான். மதுரையில் கரைவேட்டி கட்டிய உடன்பிறப்பு ஒருவர், மது பாட்டிலை வாங்கி, அதை கும்பிட்டு விட்டு, போதையேற்றும் செயல் நடந்தது.


latest tamil newsபல இடங்களில் குடிமகன்கள், 'கிறுகிறு'த்து போய், நடுரோட்டில் ரகளை, போக்குவரத்துக்கு இடையூறு, மதுக்கடை வாசலிலேயே அலங்கோலமாக மல்லாந்து கிடந்த செயல்களும் அரங்கேறின. இவற்றை எல்லாம் பார்த்த பொதுமக்களில் பலர், 'தமிழகம் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டது' போன்ற சூழ்நிலை காணப்படுகிறதே என, அங்கலாய்த்தனர்.


'டுவிட்டரில்' மீண்டும் ‛டாஸ்மாக்' முதலிடம்தமிழகத்தில், முழு ஊரடங்கை அமல்படுத்துவதற்கு முந்தைய, மே 8, 9ம் தேதிகளில் ‛குடி'மகன்கள் அதிகளவில் மது வகைகளை வாங்கி குவித்தனர்.இதனால், இரு நாட்களில் மட்டும் 854 கோடி ரூபாய்க்கு மது வகைகள் விற்பனையாகின. இதுதொடர்பாக, பலரும் கருத்துக்களை பதிவிட்டதால், அம்மாதம் 10ம் தேதி டாஸ்மாக் குறித்த பதிவுகள், டுவிட்டர் சமூக வலைதளத்தில் முதலிடம் பிடித்தன.இந்நிலையில், வைரஸ் பரவல் அதிகம் உள்ள சூழலில் மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு தெரிவித்து, பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டபடி இருந்தனர். இதனால், நேற்று காலை மீண்டும், டுவிட்டர் சமூக வலைதளத்தில் டாஸ்மாக் குறித்த பதிவுகள் முதலிடத்தில் இருந்தன.

Advertisement
வாசகர் கருத்து (81)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
NARAYANAN.V - coimbatore,இந்தியா
16-ஜூன்-202105:20:38 IST Report Abuse
NARAYANAN.V முற்காலத்தில் கோயில்கள் இல்லாத ஊரில் மக்கள் குடியிருக்க வேண்டாம் என்று முன்னோர்கள் சொன்னார்கள்.இப்போது அரசு டாஸ்மாக் கடையில்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்று இனி அறிவித்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றும் இல்லை.அரசியல்வாதிகளைப்பொறுத்தமட்டில் இன்னும் சொல்லப்போனால் ஆட்சியாளர்களைப் பொறுத்தமட்டில் இயல்பு வாழ்க்கை என்பது படங்களில் சித்தரிக்கப்பட்டுள்ள காட்சிகளே அன்றி வேறெதுவும் இல்லை.
Rate this:
Cancel
Akash - Herndon,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-202101:07:39 IST Report Abuse
Akash Great job...all essential services should be ed....
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
15-ஜூன்-202123:58:54 IST Report Abuse
Mohan நீங்கள் மலரின்மகளா இல்லை கனியின்மகளா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X