பொது செய்தி

தமிழ்நாடு

சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு முக்கியத்துவம் தருமா தமிழக அரசு

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
மாறிவரும் காலசூழ்நிலைக்கேற்ப, புவி வெப்பமயமாதலை எதிர்கொள்ள சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.குஜராத், மகாராஷ்டிரா, கேரளாவை ஒப்பிடும் போது சூரிய மின்சக்தி திட்டங்களுக்கும், அது தொடர்பான முயற்சிகளுக்கும் தமிழகத்தில் அரசும், மின்வாரிய அதிகாரிகளும் போதிய முக்கியத்துவம் தருவது இல்லை.குறிப்பாக கடந்த
சூரிய மின்சக்தி திட்டங்கள், முக்கியத்துவம்,தமிழக அரசு

மாறிவரும் காலசூழ்நிலைக்கேற்ப, புவி வெப்பமயமாதலை எதிர்கொள்ள சூரிய மின்சக்தி திட்டங்களுக்கு தமிழக அரசு முக்கியத்துவம் தர வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.குஜராத், மகாராஷ்டிரா, கேரளாவை ஒப்பிடும் போது சூரிய மின்சக்தி திட்டங்களுக்கும், அது தொடர்பான முயற்சிகளுக்கும் தமிழகத்தில் அரசும், மின்வாரிய அதிகாரிகளும் போதிய முக்கியத்துவம் தருவது இல்லை.குறிப்பாக கடந்த ஆட்சியில் சூரிய மின்சக்தி சரியாக ஊக்குவிக்கப்படவில்லை.

தமிழக மின்சார வாரியத்தின் (டான்ஜெட்கோ) சில அதிகாரிகளின் முடிவுகளால் சூரியமின் சக்தி பயன்படுத்துவதில் பெரும் தடைகளை சந்திக்க வேண்டியதாயிற்று.சூரிய சூடு நீர், மின் சக்தியினை பயன்படுத்துவதால் தொழிற்சாலைகளின் எரிபொருள் செலவு மிகவும் குறைந்து லாபகரமாக இயங்க வாய்ப்புள்ளது. எச்.டி., எனப்படும் உயர் அழுத்த சூரிய மின் கூரை திட்டத்திற்கு மின் வாரியம் கடந்த 2 வருடத்தில் அடிக்கடி தடை விதித்தது. இதனால் தொழிற்சாலைகளில் சூரிய மின்சக்தி திட்டங்கள்அமைக்க முடியாமல் போனது. பின்பு அது தமிழக மின்சார ஒழுங்குமுறை வாரியத்தின் மூலமாக தவறு என்று நிரூபிக்கபட்டது.எனினும் உயர் மின் அழுத்த தொழிற்சாலைகளில் சூரிய மின் கூரைகள் நிறுவுவதற்கான விண்ணப்பங்களை மின்சார ஒழுங்கு முறை வாரியத்தின் அறிவுரைக்கு எதிராக 3 மாதங்களாக நிறுத்தி வைத்துள்ளது மின் வாரியம்.
என்ன செய்ய வேண்டும்கேரளத்தில் சூரியமின்சக்தி உபயோகிப்பாளருக்கு 1000 கிலோவாட் வரை, லாபகரமான நெட் மீட்டர் முறையை அமல்படுத்தி வெற்றிகரமாக செயல்படுத்தி வருகின்றனர். ஆனால் இங்கும் அமலில் இருந்த நெட் மீட்டர் முறை ஓராண்டாக நீக்கப்பட்டுள்ளது. புதிதாக நிறுவும் சூரிய மின் திட்டங்களை அந்தந்த மாவட்ட மின்சார வாரிய அதிகாரியிடம் அனுமதி பெற்று, 1000 கிலோவாட் வரை நெட் மீட்டர் முறையை பயன்படுத்த அனுமதிக்க வேண்டும். 500 கிலோவாட் மற்றும் அதன் கீழ் உள்ள திட்டங்களுக்கு மற்ற மாநிலங்களை போல பாதுகாப்பு சான்றிதழ் தேவையில்லை என்று அறிவிக்க வேண்டும்.


latest tamil news


மத்திய அரசு 3 வருடங்களுக்கு முன்பு அறிவித்த, 30 சதவீத மானியத்துடன் வீடுகளில் மின் கூரை அமைக்கும் திட்டத்தை பல மாநிலங்கள் ஏற்றுக்கொண்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் அது இன்னமும் நடைமுறைக்கு கொண்டு வரப்படவில்லை.இது போன்ற தடைகளை புதிய அரசு உடைத்து எறிந்து சூரிய மின் சக்தியின் மூலம் தமிழகத்தில் அதிக அளவில் தொழில் வளர்ச்சி ஏற்பட வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.

சூரியமின்சக்திக்கு ஏன் முக்கியத்துவம்

புவி வெப்பமடைதலால் ஏற்படும் அழிவில் இருந்து நம்மை பாதுகாக்க சூரியமின்சக்திக்கு முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்பதே இயற்கை ஆர்வலர்கள் கருத்து.இது குறித்து மதுரை காமராஜர் பல்கலைக்கழக சூரிய ஆற்றல் துறை ஓய்வு பெற்ற ரீடர் முனைவர் பழனியப்பன் கூறியதாவது:பூமி வெப்பமடைவதால் 2018ல் உலகில் 315 இயற்கை பேரிடர்கள் உண்டானது. இந்த பேரிடர்களால் 7 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு ரூபாய் 9 கோடியே 68 லட்சத்து 400 கோடி பணம் விரையம் ஆனது.

எரிபொருள்களான நிலக்கரி, கச்சா எண்ணை தீமைகள் பலவற்றை ஏற்படுத்தினாலும் ஒரு காலக்கட்டத்தில் அவை தீர்ந்து போகக் கூடிய அபாயம் உள்ளது.சூரிய ஆற்றலால் உண்டாகக்கூடிய மின்சாரம், சுடு நீர், சுடு காற்று போன்ற பலவித ஆற்றல்களை நாம் உபயோகிக்கும் பொழுது பூமி வெப்பமாவதை குறைக்கமுடியும். நிலக்கரியால் இயங்கும் அனல் மின் நிலையங்கள் மூலம் உற்பத்தி செய்யப்படும் 2 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்கும் போது 1.7 கிலோ கரியமில வாய்வு வெளியேறுகிறது. அதேசமயம் 2 கிலோவாட் சூரிய மின் கூரை மூலம் ஒரு ஆண்டில் சராசரியாக 3000 கிலோ வாட் மின்சாரம் தயாரிப்பது, 2550 கிலோ கரியமில வாயு வெளியீட்டை தவிர்ப்பது நடக்கிறது.

புவிவெப்ப அபாயத்திலிருந்து விரைவாக பலன் கிடைக்கும் சூரிய கருவிகளை நிறுவுவது அவசியம். தனி மரங்களை விட சூரிய கருவிகள் 100 மடங்கு அதிக வேகத்தில் புவி வெப்பமடைவதை தடுக்கும் ஆற்றல் உள்ளது என்று ஒரு ஆராய்ச்சி கூறுகிறது. எனவே வீட்டுக்கு ஒரு மரம் வளர்ப்போம் என்ற கூற்றை போல் வீடுகளிலும் தொழிற்சாலைகளிலும் சூரிய கருவிகளை நிறுவுவது காலத்தின் கட்டாயம் என்றார்.நமது நிருபர்

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூன்-202117:09:38 IST Report Abuse
மதுமிதா உதய சூரியன் என்று சொல்லிப் பாருங்கள் ஒருவேளை ஏற்கலாம்.
Rate this:
Cancel
மூல பத்திரம் - ரோம், ,இத்தாலி
15-ஜூன்-202111:35:24 IST Report Abuse
மூல பத்திரம் நான் 12 வருடங்களாக சூரிய மின் திட்டத்தில் பணியாற்றுகிறேன் இந்திய முழுவதும் பயணிக்கிறேன். இதில் developper கம்பெனிகள் தமிழ்நாட்டில் திட்டங்களை நிறுவ அவ்வளவாக ஆர்வம் காட்டுவதில்லை. ஆர்டர் கிடைத்தால் எடுத்து செய்பவர்கள் உண்டு ஆனால் குஜராத், கர்நாடக,டெலிங்கானா மாநிலங்களை அதிகம் தேர்ந்தெடுக்கின்றனர்
Rate this:
Cancel
hariharan - chennai,இந்தியா
15-ஜூன்-202110:27:45 IST Report Abuse
hariharan இத்துடன் மோட்டார் இருசக்கர வாகனங்களை மின்சார வாகனங்களாக மாற்ற அனுமதி தர வேண்டும். இன்று டெல்லி போன்ற மாநிலங்களில் அந்த அனுமதி அளிக்கப்படுகிறது. மின்சார ஆட்டோ மற்றும் கனரக வாகனங்கள் விற்பனைக்கும் அனுமதி அளிக்க வேண்டும். பெட்ரோல் டீசல் விலை குறைப்பதை விட இதை செய்தாலே தமிழ் நாட்டில் மாசு குறையும் பொருளாதாரம் வளரும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X