தடுப்பூசி அரசியல்... தடுக்காத அதிகாரிகள்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021
Advertisement
கொரோனா ஊரடங்கில், தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் கூட, வெளியே செல்வதை தவிர்த்திருந்த மித்ரா, ''ஹலோ அக்கா... இப்பதான், கூப்பிடணும்னு நினைச்சேன்; அதுக்குள்ள நீங்களே கூப்பிட்டுட்டீங்க,'' என்ற மித்ரா, நலம் விசாரித்தாள்.''என்ன விசேஷம் மித்து?'' ஆரம்பித்தாள் சித்ரா.''கலெக்டர், கார்ப்ரேஷன் கமிஷனர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி., இப்படி, முக்கியமான ஆபீசர்களை
 தடுப்பூசி அரசியல்... தடுக்காத அதிகாரிகள்

கொரோனா ஊரடங்கில், தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும் கூட, வெளியே செல்வதை தவிர்த்திருந்த மித்ரா, ''ஹலோ அக்கா... இப்பதான், கூப்பிடணும்னு நினைச்சேன்; அதுக்குள்ள நீங்களே கூப்பிட்டுட்டீங்க,'' என்ற மித்ரா, நலம் விசாரித்தாள்.

''என்ன விசேஷம் மித்து?'' ஆரம்பித்தாள் சித்ரா.

''கலெக்டர், கார்ப்ரேஷன் கமிஷனர், போலீஸ் கமிஷனர், எஸ்.பி., இப்படி, முக்கியமான ஆபீசர்களை 'டிரான்ஸ்பர்' பண்ணிட்டாங்க. அதிலும், எஸ்.பி., ரொம்ப ஸ்டிரிக்டாம். எல்லோரும் ரொம்ப கரெக்டா வேலை செய்யணும். கட்டப் பஞ்சாயத்து, அரசியல் செல்வாக்கு, சரக்கு விற்பனைன்னு எதுக்கும் இடம் கொடுக்கக்கூடாது,'''

'மக்கள் தரும் கம்ப்ளையண்ட்ைஸ கரெக்டா என்கொயரி பண்ணி, 'கேஸ்' போடணும். அப்படியெல்லாம் வேல பார்க்க முடியாதுன்னு நினைச்சீங்கன்னா, 'டிரான்ஸ்பர்' வாங்கிட்டு கூட போயிடுங்கன்னு முகத்துக்கு நேராவே சொல்லிட்டாராங்க்கா,''

''அதோடில்லாம, அப்படி கரைவேட்டிங்க தலையீடு இருந்தா, ஒற்றர் படையினர் கண்டிப்பா தகவல் சொல்லணும்னு ஆர்டர் போட்டுட்டாராங்க்கா...''

''கரெக்ட்தானே மித்து என்ற சித்ரா, ''டிரான்ஸ்பர் லிஸ்ட் ரெடியா இருக்குதாம்...'', என புதிர் போட்டாள்.

''என்ன லிஸ்ட்டுக்கா?''

''மித்து, பல வருஷமா ஒரே ஸ்டேஷன்ல வேலை பார்த்து, 'கல்லா' கட்டி பழகின பல பேரு, வேற ஸ்டேஷனுக்கு டிரான்ஸ்பர்ல போனாங்க. அவங்க திரும்பவும் வேல பாத்த இடத்துக்கே வர்றதுக்கு, 'ட்ரை' பண்றாங்களாம். இதனால, டிரான்ஸ்பர் பெட்டிஷன்ஸ் டீட்டெய்லா என்கொயரி பண்ணி தான், 'ஆர்டர்' போடுவார்ன்னு நினைக்கறேன்,''

''இதேபோல, சிட்டிக்கு கமிஷனரும், ஸ்டிரிக்டா இருந்தாங்கன்னா, ஒட்டுமொத்த மாவட்டமும் 'கிளீன்' ஆகிடும்,'' என்றாள் சித்ரா.

''அக்கா, புது ஆபீசர் போலி சி.எஸ்.ஆர்., விஷயத்தையும், கவனிச்சாங்கன்னா பரவாயில்ல,'' என்றாள் மித்ரா.''நீ எதை சொல்ற மித்து...''

''கே.வி.ஆர்., நகர் போலீஸ் ஸ்டேஷன்ல, குறுநில மன்னர் ஒருத்தரும், சில போலீசாரும் கூட்டணி அமைச்சு, 'மிஸ்ஸிங் பெட்டிஷன்' தொடர்பான ஒரு புகார்ல, போலியா சி.எஸ்.ஆர்., ரெடி பண்ணியிருக்காங்க. இந்த விஷயம் 'லீக்' ஆனதால, கமிஷனர் ஆபீஸ்ல இருந்து 'என்கொயரி' பண்ணியிருக்காங்க. ஆனா, புதுசா வந்தவருக்கு, இந்த விஷயம் தெரியாததால, விவகாரத்தை அப்படியே ஊத்தி மூடிட்டாங்க,'' என்றாள் மித்ரா.

''அதிகாரிதான் கண்டுபிடிச்சு திருத்தணும்,'' என்ற சித்ரா, ''கட்சி பங்ஷனுக்கு, ஸ்வீட் வாங்குறதுக்காக, ரேஷன் கடைல வசூல் பண்ணாங்களாம்...'' என அடுத்த மேட்டருக்கு தாவினாள்.

''அப்படியா... அது எங்கீங்க்கா?,''

''அங்கேரிபாளையத்துல ஆளுங்கட்சி சார்பில, 100 மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, காய்கறின்னு நலத்திட்ட உதவி வழங்கினாங்க. இதில, மக்களுக்கு 'ஸ்வீட்' கொடுக்கோணும்னு சொல்லி, பக்கத்தில இருக்கற ரேஷன் கடைக்கு போய், 'உபி'ஸ் மூனாயிரம் கேட்டிருக்காங்க,'''

'கொடுக்க முடியாதுன்னு, ரேஷன் கடை ஊழியரு சொல்ல, வழக்கம் போல மிரட்டி பாத்திருக்காங்க. விஷயம் தெரிஞ்சு அங்க வந்த 'செக்ரட்ரி', பிரச்னை பெரிசாகாம பாத்துக்கிட்டாராம்,'' என்றாள் சித்ரா.

''அக்கா, ரேஷன் கடைல மட்டுமில்ல, எல்லா பக்கமும், சூரிய கட்சிக்காரங்க, 'டாமினேஷன்' பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. இப்படித்தான், பல்லடத்துக்கு பக்கத்தில, வடுகபாளையத்துல, முனிசிபாலிடி சார்பா, 'மெடிக்கல் கேம்ப்' நடத்தினாங்க...''

''இதையெல்லாம், யாரை கேட்டு நடத்துறீங்க. முன்னாடியே சொல்ல வேண்டாமா? நீங்க கூப்பிட்டதும் வர்றதுக்கு, ஜனங்க என்ன ஆடுமாடான்னு சகட்டுமேனிக்கு, ஆளுங்கட்சியை சேர்ந்த சிலர், ஆபீசர்கள வறுத்தெடுத்திட்டாங்களாம்,''

''என்ன பண்றதுடி, புள்ள பூச்சிக்கெல்லாம் கொடுக்கு முளைக்கும்னு யாரு கண்டாங்க,'' என சிரித்த சித்ரா, ''இப்படித்தான், எங்க ஊர்ல பிரச்னை பண்ண வேலுசாமி, வெங்டேஷ்னு ரெண்டு பேரை, கட்சிய விட்டே துாக்கிட்டதா, கேள்விப்பட்டேன்,'' என்ற சொன்னவள், ''மித்து ஒரு நிமிஷம், செகண்ட் கால் வருது. பேசிட்டு லைன்ல வர்றேன்'' என்றாள்.

ஒரு நிமிடம் கழித்து லைனில் வந்த சித்ராவிடம், ''அக்கா, கலெக் ஷன், கமிஷன், கரெப்ஷன்ல, ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிக்காரங்களுக்கு துளியும் வித்தியாசமில்ல,''

''எப்படி சொல்ற மித்து''

''ஒரு வார்டுல, மோட்டார் வைச்சு தண்ணிய திருட்டுத்தனமா எடுத்திருக்காங்க. இத கையும், களவுமா பிடிச்சு, ஆபீசர்கிட்ட கம்ப்ளைன்ட் பண்ணியிருக்காரு பம்ப் ஆபரேட்டரு. ஆனா, ஆபரேட்டர் தான், சரியா தண்ணி திறந்து விடலைன்னு சொல்லி, அவர வேற இடத்துக்கு மாத்திட்டாங்களாம். இதுக்கு இலை கட்சியின் 'மாஜி' கவுன்சிலர் ஒருத்தர் தான் காரணமாம்,'' என்றாள் மித்ரா.

''பழி ஒருபுறம்; பாவம் ஒரு புறம்ன்னு சொல்லு,'' என்ற சித்ரா, ''ஒரு நிமிஷம் மித்து, கதவை யாரோ தட்றாங்க; பாத்துட்டு வர்றேன்'' என சொல்லி கதவை திறந்தாள், ''அக்கா…இங்க, '58வது' தெருவில, 'ஆனந்தன்'னு ஒருத்தர பாக்கணும்,'' என கூரியர் பையன் கூற, ''நேரா போய் ரைட்டில் திரும்புப்பா,'' எனக்கூறி கதவை அடைத்து, பேச்சை தொடர்ந்தாள்.

''சரி மித்து. அதை விடு, 'செகண்ட் டோஸ்' தடுப்பூசி போடோணும். மருந்து தட்டுப்பாடில்லாம கிடைக்குதா?'' என்றாள் சித்ரா.''ம்...ஹூம். தடுப்பூசி எங்கேயும் கிடைக்க மாட்டேங்குது. கோழிப்பண்ணை ஊர்ல அதிகாலை நாலு மணிக்கெல்லாம் தடுப்பூசி போடற இடத்துக்கு போற ஒரு கும்பல், டோக்கனை வாங்கி, 2 ஆயிரம் ரூபாய்க்கு வித்துடறாங்களாம்.'ஹெல்த் டிபார்ட்மென்ட்'ல இருக்க சில கருப்பு ஆடுங்க, சேல்ஸ் பண்றதாவும் பேசிக்கிறாங்க்கா''

''இதே மாதிரிதான்டி, கார்ப்பரேஷன்ல இருக்கற 'குழல் ஊதும்' ஆபீசரு, தன்னோட இன்புளுயன்ஸ யூஸ் பண்ணி, மூனு கம்பெனிக்கு மருந்தை தாரை வார்த்த விஷயம் தெரிஞ்சிடுச்சு. பயந்து போன அந்த ஆபீசரு, தன் மேல இருக்க தப்பை மறைக்க கீழ்மட்டத்துல இருக்கறவங்க மேல ஆக்ஷன் எடுத்திட்டாரு. அவருக்கு ஆளுங்கட்சி சப்போர்ட் இருக்கறதால, தப்பிச்சுட்டாரு,'' என்றாள் சித்ரா.

''எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், இதுபோன்ற ஆபீசர் மேல நடவடிக்கையே எடுக்கறதில்லே. அதனால, அவங்க அப்படித்தான் பண்றாங்க,'' சொன்ன மித்ரா, ''சி.எம்., இங்க வந்தப்ப, 'கேம்ப்' போட்டிருந்த ஆபீசரு தான், இன்னைக்கு கலெக்டராவே வந்திருக்காரு,'' என, கலெக்டர் ஆபீஸ் மேட்டருக்கு தாவினாள்.'

'என்னடி, புதுசா எதையோ சொல்றே,''

''புது கலெக்டர், இதுக்கு முன்னாடி இ.பி., டிபார்ட்மென்ட்ல, இணை இயக்குனரா இருந்திருக்காரு. திருப்பூருக்கு சி.எம்., வர்றதுக்கு ரெண்டு நாள் முன்னாடியே அவரு வந்து, 'இன்ஸ்பெக்ஷன்' பண்ணிட்டு போயிருக்காரு. அடடே…அவரே நமக்கு கலெக்டரா வருவார்ன்னு தெரியலையேன்னு, இ.பி.,க்காரங்க 'ஷாக்' ஆயிட்டாங்களாம்''

''இதுல என்ன ஒரு முக்கியமா விஷயம்னா, பழைய கலெக்டரு, அதிகாரிகள விட, சமூக வலைதள குழுக்கள தான் ரொம்ப நம்பினாரு. இதனால, பல சமூக வலைதள குழுவுல இருக்கறவங்க, ஏதோ, மாவட்டத்தையே தங்களோட தலைமேல துாக்கி வச்சிருக்கிற மாதிரி, பதிவுகளை போட்டுகிட்டே இருந்தாங்க,''

''கலெக்டரு டிரான்ஸ்பர் ஆனதுல, அவங்களுக்கு தான் பெரிய இழப்பு,'' என்றாள் மித்ரா.

''மாற்றம் ஒன்றே மாறாதது'' என்ற சித்ரா, ''மித்து, திருமுருகநாதர் கோவில் கொண்ட ஸ்டேஷனில், உள்ள ஒரு சிலர், வசூலில் மன்னர்களா இருக்காங்களாம். அதிலும், இந்த 'லாக்-டவுனில்' எங்காவது கடை ஷட்டர் கொஞ்சம் திறந்திருந்தாலும் உடனே போய், ஆயிரம் 'வரி' போடறாங்களாம்...''

''இதெல்லாம், ஆபீசருக்கு தெரியறதில்லை போல. இதனால, வியாபாரிகள் ஒன்னா சேர்ந்து ரோட்டோரம் இருக்கிற 'முனியப்பன்' கோவிலில் பூஜை செய்து, பெட்டிஷன் கொடுக்க போறாங்களாம்,'' என ஒரு மேட்டரை சொன்னாள்.

அதைக்கேட்ட மித்ரா, ''அதனை அந்த 'கந்தசாமி' கடவுளே பார்த்துப்பார்,'' என்றதும், ''ஓ.கே., மித்து, நான் மறுபடியும் கூப்டறேன்,'' என்றவாறு இணைப்பை துண்டித்தாள்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X