கேட்பாரற்று கிடக்கும் தி.மு.க., அலுவலகம்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (55)
Share
Advertisement
பார்லிமென்டில் தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம் பராமரிப்பு இல்லாமலும், பணிகளை கவனிப்பதற்கு அலுவலர்கள் நியமிக்கப்படாமலும் கேட்பாரற்று கிடப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், பார்லிமென்ட் கீழ் தளத்தில் தி.மு.க.,வுக்கு என அலுவலகம் ஒதுக்கப்பட்டது. நியமிக்கப்படவில்லைஇரு சபைகளுக்கும் வெகு எளிதாக செல்லும் வகையில், மைய
பார்லி., கேட்பாரற்று , தி.மு.க., அலுவலகம்

பார்லிமென்டில் தி.மு.க.,வுக்கு ஒதுக்கப்பட்ட அலுவலகம் பராமரிப்பு இல்லாமலும், பணிகளை கவனிப்பதற்கு அலுவலர்கள் நியமிக்கப்படாமலும் கேட்பாரற்று கிடப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலுக்குப் பின், பார்லிமென்ட் கீழ் தளத்தில் தி.மு.க.,வுக்கு என அலுவலகம் ஒதுக்கப்பட்டது.


நியமிக்கப்படவில்லை



இரு சபைகளுக்கும் வெகு எளிதாக செல்லும் வகையில், மைய மண்டபத்திற்கு மிக அருகிலேயே இந்த அலுவலகம் உள்ளது. இந்த இடத்துக்கு பல கட்சிகளும் போட்டி போட்ட நிலையில், தி.மு.க.,வின் எண்ணிக்கை பலத்திற்காக இந்த அறை தரப்பட்டது. ஆனாலும் அந்த அறையை பராமரிப்பதற்கு என, கட்சியின் சார்பில் பணியாளர் எவரும் நியமிக்கப்படவில்லை. தினமும் பல கடிதங்கள் வரும். சபாநாயகர் அலுவலகத்திலிருந்து முக்கிய தகவல் பரிமாற்றங்களும் கூட இருக்கும்.ஆனால், இவற்றை கவனிப்பதற்கு அங்கு யாருமே இல்லை.


latest tamil news


அ.தி.மு.க.,வுக்கு அதே லாபியில் சிறிய அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு எந்த நேரமும் இரண்டு அலுவலர்கள் இருப்பர். தினமும் அறை திறக்கப்பட்டு, அங்கு வரும் கடிதம் மற்றும் போன் தகவல் பெறப்படுகின்றன.ஆனால், தி.மு.க., அலுவலகம் பூட்டப்பட்டு கிடக்கிறது. அலுவலகம் ஒதுக்கப்பட்ட போதே, பராமரிப்பு மற்றும் அலுவலர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட செலவுகளுக்கு என்ன செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டது.எம்.பி.,க்கள் ஒவ்வொருவரும் 1 லட்சம் ரூபாய் போட்டு, அதை வைத்து இச்செலவுகளை மேற்கொள்ளலாம் என தீர்மானிக்கப்பட்டது.இதன்படி, எம்.பி.,க்களிடம் தொகை வசூலிக்கப்பட்டது. துவக்கத்தில் ஒருவர், அலுவலராக பணி அமர்த்தப்பட்டு 13 நாட்களே அந்த பணியில் இருந்தார். சொற்ப சம்பளம் காரணமாக, அவர் பணியிலிருந்து நின்று விட்டார்.




ஆச்சரியம்



தொடர்ந்து கொரோனா பிரச்னையும் வந்து சேரவே, அந்த அலுவலகம் பூட்டியே கிடக்கிறது.அருகில் உள்ள அ.தி.மு.க., அலுவலகத்தில் பணியில் உள்ளவர்களுக்கு, சென்னை தலைமை அலுவலகத்திலிருந்தே சம்பளம் தரப்பட்டு, முறையாக பல ஆண்டுகளாக நிர்வாகம் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில், போதுமான அலுவலர்கள் இல்லாமலும், முறையாக கவனிக்கப்படாமலும், ஆளும் கட்சியான தி.மு.க.,வின் அலுவலகம் கிடப்பது ஆச்சரியமாக உள்ளது.- நமது டில்லி நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (55)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
20-ஜூன்-202105:22:52 IST Report Abuse
meenakshisundaram இதுக்கு காரணம் என்னான்னா -நம்ம திமுக எம்பீக்கள் அங்கே ரொம்ம்ம்ம்ப பிசி ?
Rate this:
Cancel
sankar - chennai,இந்தியா
16-ஜூன்-202108:39:44 IST Report Abuse
sankar மோடி எதிர்ப்புக்காகத்தான் எம்பியை தேர்தெடுத்தார்கள் மக்கள் சேவைக்காக இல்லையே அப்போ ஆபீஸ் தேவை இல்லையே
Rate this:
Cancel
RG RG - Chennai,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-202103:59:02 IST Report Abuse
RG RG இதுல தப்பு என்னனா எம் பி க்கள் ஓரொருவரும் ஒரு லட்ச ரூபா குடுக்கணும் னு சொன்னது தான் . பணம் செலவு பண்ணா clean ஆ வேல நடக்கும் . அவ்வளோதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X