130 அடி ஆழ ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் உயிருடன் மீட்பு

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்றரை வயது சிறுவன், எட்டு மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டான்.உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. ஆக்ரா அருகேயுள்ள தரியாய் கிராமத்தில் சோட்டேலால் என்பவர் மகன் நேற்று காலை, வீட்டு வாசலில் விளையாடினான். அருகில் இருந்த 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை
130 அடி ஆழ ஆழ்துளை கிணறு,சிறுவன்   மீட்பு

ஆக்ரா: உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா அருகே 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த மூன்றரை வயது சிறுவன், எட்டு மணி நேர போராட்டத்துக்குப் பின் மீட்கப்பட்டான்.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது.
ஆக்ரா அருகேயுள்ள தரியாய் கிராமத்தில் சோட்டேலால் என்பவர் மகன் நேற்று காலை, வீட்டு வாசலில் விளையாடினான். அருகில் இருந்த 130 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். ராணுவம், மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்புப்படை வீரர்கள் விரைந்து வந்து மீட்புப் பணியைத் துவக்கினர்.


latest tamil news



எட்டு மணி நேர போராட்டத்துக்குப் பின், மாலையில் சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டான். சிறுவனின் தந்தை சோட்டேலால் கூறுகையில், ''நான் மிகுந்த அதிர்ஷ்டசாலி. என் குழந்தையை
மீண்டும் உயிருடன் பார்த்து விட்டேன். குழந்தையை மீட்டுக் கொடுத்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rasheel - Connecticut,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-202111:53:56 IST Report Abuse
Rasheel எவ்வளவு நடந்தாலும் திருந்தாத கூட்டம். நாடு முழுவதும் மாதத்திற்கு ஒரு சம்பமாவது நடக்காமல் இல்லை.
Rate this:
Cancel
Soundarapandian - Trichy,இந்தியா
15-ஜூன்-202112:11:45 IST Report Abuse
Soundarapandian கிணறு 130 அடி. குழந்தை எந்த ஆழத்தில் இருந்தது. விபரம் முழுமையாக இல்லையே.
Rate this:
Cancel
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
15-ஜூன்-202110:34:49 IST Report Abuse
பெரிய ராசு ராணுவம் மிகசிறந்த உதாரணம் இந்தியாவிற்கு ..ஆயிரம் சலூட் ஜெய்ஹிந்து
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X