அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : ஆளுங்கட்சியினர் விதிமீறலாமா?

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (30)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வேலியே பயிரை மேயும் கதை' தான், தமிழகத்தில் நடக்குது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் கோவில் வாசலில், தி.மு.க.,வினர் அசைவ பிரியாணி வினியோகம் செய்துள்ளனர். அதுவும்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வேலியே பயிரை மேயும் கதை' தான், தமிழகத்தில் நடக்குது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் கோவில் வாசலில், தி.மு.க.,வினர் அசைவ பிரியாணி வினியோகம் செய்துள்ளனர். அதுவும் ஊரடங்கு விதியை மீறி, மக்கள் கூட்டத்தை கூட்டி, கொரோனா பரவலுக்கு வித்திட்டுள்ளனர்.latest tamil news
திருச்சியில், நலத்திட்ட உதவி வழங்குவதற்காக, அமைச்சர் ஒருவர், 700க்கும் மேற்பட்டோரை திரட்டி, 'போட்டோ'விற்கு 'போஸ்' கொடுத்துள்ளார். அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசாரத்தால்
தான், கொரோனா இரண்டாவது அலையே உருவானது. ஆனால், இது குறித்து எந்த அரசியல்
வாதியும் வாய் திறக்கவில்லை. சமீபத்தில், கொரோனா தடுப்பு விதியை மீறி, அதிகளவில் நோயாளிகள் இருந்ததற்காக, ஒரு மருத்துவமனைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
டீக்கடை, மளிகை கடையில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என, அபராதம் விதிக்கப்படுகிறது.


latest tamil news
'மாஸ்க்' அணியாத மக்களிடமும், அபராதம் வசூலிக்கப்படுகிறது. எல்லாம் சரி... மக்கள்
கூட்டத்தை கூட்டிய அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அரசியல்வாதிகள், தங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக கூட்டம் கூட்டுகின்றனர். அவர்களை ஆளும் கட்சியினர் யாரும் தட்டி கேட்கவில்லை. கொரோனா பரவலை தடுக்க, மக்கள் கூடுவதை தவிர்ப்பது தான் ஒரே வழி. அதற்காக தான், ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஆட்சியாளர்களே, அந்த விதியை மீறுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
16-ஜூன்-202105:09:11 IST Report Abuse
Sathyanarayanan Subramanian நன்றாக அனுபவிக்க வேண்டும் தமிழ் மக்கள் ஐந்தாண்டு. இப்போது அவர்கள் ராஜ்யம் தான் பத்து வருடங்கள் கழித்து பதவிக்கு வந்திருக்கிறது திருடர்கள் கூட்டம்.. சுருட்டாமல் இருக்க மாட்டார்கள். எல்லாவற்றிலும் பணம் பண்ண வேண்டும். அவர்களுக்கு தகுந்த அதிகாரிகளை இடம் மாற்றம் செய்து பதவியில் வைத்திருக்கிறார்கள். விஞ்ஞான முறையில் ஊழல் செய்வதற்கு. ஓட்டு போட்ட தமிழக மக்கள் பாவம்
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
15-ஜூன்-202122:55:25 IST Report Abuse
Raj எங்கே அந்த நீதிமன்றம்? பார்த்து கொண்டு சும்மா இருக்க மாட்டோம் என்று கூவிய நீதிபதி. வெட்கம் வேதனை சோதனை
Rate this:
Cancel
Narayanan - chennai,இந்தியா
15-ஜூன்-202120:58:03 IST Report Abuse
Narayanan இவர்களின் அடாவடி அரசியல் தெரிந்துதான் நாம் பலமுறை அடித்துச் சொன்னோம் . தேர்தல் ஆணையமும் கேட்கவில்லை . இவர்களை ஆட்சியில் அமர்த்தினால் பணம் பண்ணமுடியும் பண்ணிவிட்டார்கள் . நாம் இன்று அவஸ்தை படுகிறோம் . கடந்த அரசு மத்திய அரசிடம் பேச சென்றால் அடிமை அரசு போகிறது என்று சொன்ன ஸ்டாலின் இன்று ஏன் வேண்டும் ? அடிமையாகித்தான் பிழைக்கமுடியும் . போயிவரட்டும் . கோ பேக் ஸ்டாலின் என்று அங்கே சொன்னால் ப்படி இருக்கும் ?உணர்ந்து செயல்படுங்கள் . திமுக : அவர்களின் சட்டமே வேற லெவல் . அவர்களை யாரும் கேள்வி கேட்க முடியாது . அது பொது மக்களானும் , நீதி மன்றமே ஆனாலும் அப்படித்தான் . கொண்டதே கோலம் அவர்களின் நிலைப்பாடு . இது ஆயிரத்தித்தொள்ளாயிரத்து அறுபத்தொன்பதில் தொடங்கியது . அப்போதெல்லாம் நீதிமன்றங்கள் நீதிக்காக வேலை பார்த்தார்கள் . இன்று அரசியல் செல்வாக்கு இருக்கும் ஆட்சியாளருக்குதான் நீதி வழங்கப்படுகிறது .கைப்புண்ணுக்கு கண்ணாடி வேண்டாமே அன்று அநாகரிகமாக பேசித்திரிந்த ஆ . ராஜாவிற்கு ஒரு தண்டனையும் அளிக்காத நீதித்துறை இன்று ஒருவரை திமுக வை ஏதோ இல்லாததை பேசிவிட்டதாக கருதி இரவு இரண்டு மணிக்கு கைது செய்து அந்தவேளையில் அந்த நீதிபதியும் தயாராக இருந்து நீதி வழங்கி இருக்கிறார் . வாழ்க ஜனநாயகம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X