இது உங்கள் இடம் : ஆளுங்கட்சியினர் விதிமீறலாமா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : ஆளுங்கட்சியினர் விதிமீறலாமா?

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (30)
Share
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் : எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வேலியே பயிரை மேயும் கதை' தான், தமிழகத்தில் நடக்குது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் கோவில் வாசலில், தி.மு.க.,வினர் அசைவ பிரியாணி வினியோகம் செய்துள்ளனர். அதுவும்

உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

எம்.கலைவாணி, அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வேலியே பயிரை மேயும் கதை' தான், தமிழகத்தில் நடக்குது. முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளை முன்னிட்டு, சென்னையில் கோவில் வாசலில், தி.மு.க.,வினர் அசைவ பிரியாணி வினியோகம் செய்துள்ளனர். அதுவும் ஊரடங்கு விதியை மீறி, மக்கள் கூட்டத்தை கூட்டி, கொரோனா பரவலுக்கு வித்திட்டுள்ளனர்.



latest tamil news




திருச்சியில், நலத்திட்ட உதவி வழங்குவதற்காக, அமைச்சர் ஒருவர், 700க்கும் மேற்பட்டோரை திரட்டி, 'போட்டோ'விற்கு 'போஸ்' கொடுத்துள்ளார். அரசியல்வாதிகளின் தேர்தல் பிரசாரத்தால்
தான், கொரோனா இரண்டாவது அலையே உருவானது. ஆனால், இது குறித்து எந்த அரசியல்
வாதியும் வாய் திறக்கவில்லை. சமீபத்தில், கொரோனா தடுப்பு விதியை மீறி, அதிகளவில் நோயாளிகள் இருந்ததற்காக, ஒரு மருத்துவமனைக்கு 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
டீக்கடை, மளிகை கடையில் சமூக இடைவெளியை பின்பற்றவில்லை என, அபராதம் விதிக்கப்படுகிறது.


latest tamil news




'மாஸ்க்' அணியாத மக்களிடமும், அபராதம் வசூலிக்கப்படுகிறது. எல்லாம் சரி... மக்கள்
கூட்டத்தை கூட்டிய அமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி பிரமுகர்கள் மீது ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை? அரசியல்வாதிகள், தங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக கூட்டம் கூட்டுகின்றனர். அவர்களை ஆளும் கட்சியினர் யாரும் தட்டி கேட்கவில்லை. கொரோனா பரவலை தடுக்க, மக்கள் கூடுவதை தவிர்ப்பது தான் ஒரே வழி. அதற்காக தான், ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. ஆட்சியாளர்களே, அந்த விதியை மீறுவது மிகவும் கண்டிக்கத்தக்க செயல்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X