இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இன்றைய க்ரைம் ரவுண்ட்அப்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021
Share
தமிழக நிகழ்வுகள்1. மாணவிகளை மிரட்டும் கும்பல்; தனிப்படை போலீசார் விசாரணைகோவை : கல்லுாரி மாணவிகளை குறிவைத்து பழகி, புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து, தனிப்படை அமைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்த 19 வயது கல்லுாரி பெண், காளப்பட்டி ரோட்டிலுள்ள, தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு நவ இந்தியா

தமிழக நிகழ்வுகள்
1. மாணவிகளை மிரட்டும் கும்பல்; தனிப்படை போலீசார் விசாரணை
கோவை : கல்லுாரி மாணவிகளை குறிவைத்து பழகி, புகைப்படம் எடுத்து மிரட்டி பணம் பறிக்கும் கும்பல் குறித்து, தனிப்படை அமைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.

கோவை, சிங்காநல்லுாரை சேர்ந்த 19 வயது கல்லுாரி பெண், காளப்பட்டி ரோட்டிலுள்ள, தனியார் கல்லுாரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு நவ இந்தியா சந்திப்பு அருகே உள்ள, தனியார் கல்லுாரி ஒன்றில், மூன்றாம் ஆண்டு படித்த கேசவகுமார்(எ) விஜய சேதுபதி,23 என்ற நபருடன், பஸ்சில் சென்று வரும்போது பழக்கம் ஏற்பட்டது.இருவரும் மொபைல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர். ஒன்றாக போட்டோ எடுத்துள்ளனர். மாணவியிடம் அவ்வப்போது பணம், நகைகளை கேட்டு பெற்று வந்த வாலிபர் மீது, சந்தேகம் ஏற்பட்டதால், மாணவி அவரை தவிர்த்தார்.ஆத்திரமடைந்த வாலிபர் மற்றும் அவரது நண்பர்கள், கேட்கும் பணம், நகைகளை கொடுக்காவிட்டால் தங்களுடன் இருக்கும் படங்களை, ஆபாசமாக மாற்றி வெளியிடுவோம் என, மிரட்டியுள்ளனர்.

மாணவியின் பெற்றோருக்கும், போன் மூலம் மிரட்டல் விடுத்து வந்தனர். இந்த கும்பலின் சுயரூபம் தெரிந்த மாணவி, மனவேதனையில் தற்கொலை செய்து கொண்டார். அதற்கு முன் இது குறித்து தனது நெருங்கிய தோழியிடம், 'இன்ஸ்டாகிராம்' வாயிலாக புலம்பியுள்ளார். இதற்கான ஆதாரத்தை கைப்பற்றியுள்ள சிங்காநல்லுார் போலீசார், வழக்கு பதிவு செய்து, தலைமறைவாக உள்ள கேசவகுமாரை, தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.இந்த கும்பலிடம் பல்வேறு மாணவிகள், இளம்பெண்கள் சிக்கியிருக்கலாம் என, சந்தேகிக்கப்படுகிறது.latest tamil newsஅது தொடர்பாக, போலீஸ் ஸ்டேஷன்களில் புகார்கள் பதிவாகி உள்ளதா என்றும் விசாரித்து வருகின்றனர்.பின்னணியில் பெண்!இந்த கும்பலில், ஒரு வாலிபரின் தாயும் இருப்பதாகவும், தற்கொலை செய்த மாணவியின் வீட்டுக்கே சென்று பணம், நகைகளை கேட்டு மிரட்டியதாகவும் மாணவியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.அப்போது, 'எங்கள் மீது போலீசில் புகார் அளித்தாலும் ஒன்றும் செய்ய முடியாது, ஏற்கனவே மூன்று முறை சிறை சென்றுள்ளோம்; உன்னை போன்று பல பெண்கள் எங்களிடம் சிக்கியுள்ளனர்' என, மிரட்டி உள்ளனர்.இந்த தகவல்களை சேகரித்து, தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.

2. 1200 லி., சாராய ஊறல் கோவையில் பறிமுதல்
தொண்டாமுத்தூர்: கோவை, ஆலாந்துறை அருகே ஒரு வீட்டில், கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஆலாந்துறை இன்ஸ்பெக்டர் பாஸ்கரன், மது விலக்கு இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. இதற்காக வைத்திருந்த, 1,200 லிட்டர் கள்ளச்சாராய ஊறல், 10 லிட்டர் கள்ளச்சாராயம், ஒரு ஸ்கார்பியோ கார், காஸ் ஸ்டவ், 2 சிலிண்டர், 210 கிலோ நாட்டு சக்கரை, ஒரு கிலோ கடுக்காய், ஒரு கிலோ ஜாதிக்காய், ஒரு கிலோ அதிமதுரம், 90 காலி வாட்டர் பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். போளுவாம்பட்டி சேர்ந்த சம்பத்குமார், 38 என்பவர், வீட்டை வாடகைக்கு எடுத்து, கள்ளச்சாராயம் காய்ச்சியது தெரியவந்தது. சம்பத் குமாரை போலீசார் தேடி வருகின்றனர்.


latest tamil news3. பணம் கொள்ளை
பனைக்குளம் : பனைக்குளம் மேற்கு தெருவை சேர்ந்தவர் முகமது ஆசாத் அலி 43. இவர் ரெகுநாதபுரத்தில் ஓட்டல் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு ஓட்டலை மூடிவிட்டு டூவீலரில் பனைக்குளம் சென்றார்.தெற்கு காட்டூர் வழியாக படைவெட்டி வலசை பகுதியில் சென்ற போது பின்னால் டூவீலரில் வந்த வாலிபர் முகமது ஆசாத் அலியின் டூவீலரை மறித்தார். கத்தியை காட்டி மிரட்டி ரூ.11,500 பணம், ஒரு அலைபேசியை பறித்துகொண்டு தப்பினார்.


latest tamil news


Advertisement


4. தந்தையை கொன்ற மகன் கைது
நாகப்பட்டினம் : தந்தையை காலால் மிதித்து கொலை செய்த மகனை, போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம், அபிஷேக கட்டளை என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன், 55; மகன் பழனிவேல், 28; விவசாய கூலி தொழிலாளிகள். பழனிவேல் மனைவிக்கு நாகை அரசு மருத்துவமனையில், நான்கு நாட்களுக்கு முன் ஆண் குழந்தை பிறந்தது.நேற்று மனைவி மற்றும் குழந்தையை பார்த்து வீடு திரும்பிய பழனிவேல், அப்பகுதியில் நடந்த உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது, நண்பர்களுடன் மது அருந்தியுள்ளார்.


latest tamil newsஅங்கு வந்த ராஜேந்திரன், பழனிவேலுவிடம், 2,000 ரூபாய் கேட்டுள்ளார். 'பிறந்த பேரனை பார்க்க வராத உனக்கு ஏன் பணம் தர வேண்டும்' எனக் கேட்டு, ராஜேந்திரனிடம் பழனிவேலு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.ஒரு கட்டத்தில், தந்தையை கீழே தள்ளி கழுத்தில் காலை வைத்து அழுத்தியுள்ளார். இதில் ராஜேந்திரன் இறந்தார். திட்டச்சேரி போலீசார், பழனிவேலுவை கைது செய்து விசாரிக்கின்றனர்.

5. மூதாட்டியிடம் செயின் பறிப்பு
தேவதானப்பட்டி, : குள்ளப்புரம் தெற்குதெருவைச் சேர்ந்த வீரப்பன் மனைவி பாண்டியம்மாள் 64. தோட்டத்தில் வேலை செய்துவிட்டு கட்டிலில் துாங்கிக்கொண்டிருந்தார். 20 வயதுடைய நபர் பாண்டியம்மாள் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் செயினை பறித்துள்ளார். அவர் போராடி ஒரு பவுன் செயினை பிடித்துக்கொண்டதால் அந்தநபர் 2 பவுன் செயினை பறித்து தப்பியோடினார். அவரை ஜெயமங்கலம் போலீசார் தேடிவருகின்றனர்.


latest tamil newsஇந்தியாவில் குற்றம் :
தாக்குதல் நடத்தியவர் கைது
காசியபாத்: உத்தர பிரதேசத்தின் காசியாபாத் மாவட்டத்தில், சமீபத்தில் அப்துல் சமது என்பவரை ஆட்டோவில் கடத்திச்சென்ற சிலர், ஜெய் ஸ்ரீராம் மற்றும் வந்தே மாதரம் என கோஷமிடும்படி தாக்குதல் நடத்தியதுடன், அவரது தாடியை வெட்டியதாக குற்ற்சாட்டு எழுந்தது. இந்த 'வீடியோ' சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், பிரவேஷ் குஜ்ஜார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.


latest tamil newsஉலக நடப்பு
நடிகைக்கு பாலியல் தொந்தரவு வங்கதேச தொழிலதிபர் கைது
டாக்கா : வங்கதேசத்தில் பிரபல நடிகையை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தொழிலதிபரை, போலீசார் கைது செய்தனர்.

நம் அண்டை நாடான வங்கதேசத்தைச் சேர்ந்த பிரபல நடிகை ஷம்சுன்னஹர் ஸ்மிருதி, 26. இவர், போரி மோனி என ரசிகர்களால் அழைக்கப்படுகிறார்.கடந்த ஆண்டு அமெரிக்காவின் 'போர்ப்ஸ்' பத்திரிகை வெளியிட்ட ஆசியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பட்டியலில், இவரது பெயரும் இருந்தது.இவர், வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனாவிடம், 'தொழிலதிபரால் பாதிக்கப்பட்ட எனக்கு, நீதி வழங்க வேண்டும்' என, நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்தார். பதிவில், பிரதமரை அம்மா என அழைத்துள்ள அவர், 'பாதிக்கப்பட்ட நான் நீதியை எங்கே தேடுவது? நான் கூறுவதை எல்லாரும் கேட்கின்றனர்: ஆனால் ஒருவரும் உதவவில்லை' என, கூறி உள்ளார்.


latest tamil newsஇதற்கிடையே, தன்னை பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை செய்ய முயன்றதாக. டாக்கா 'போட் கிளப்' கலாசார பிரிவு செயலரும், ரியல் எஸ்டேட் அதிபருமான நசீர் யு.மஹ்மூத் மற்றும் அவருக்கு உதவியதாக நால்வர் மீது, நேற்று போலீசில் புகார் செய்தார். வழக்கு பதிவு செய்த போலீசார், நசீர் உட்பட ஐந்து பேரையும் கைது செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X