பொது செய்தி

இந்தியா

முதல் காலாண்டில் ஏற்றுமதி 70.1 சதவீதம் அதிகரிக்கும்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் மொத்த வணிக ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 70.1 சதவீதம் உயர்ந்து 6.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியான 'எக்ஸிம்' வங்கி தெரிவித்து உள்ளது.இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், எண்ணெய் அல்லாத பொருட்கள் ஏற்றுமதி 68.5

புதுடில்லி : நாட்டின் மொத்த வணிக ஏற்றுமதி, நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 70.1 சதவீதம் உயர்ந்து 6.37 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும் என, இந்திய ஏற்றுமதி - இறக்குமதி வங்கியான 'எக்ஸிம்' வங்கி தெரிவித்து உள்ளது.



latest tamil news



இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது: நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலத்தில், எண்ணெய் அல்லாத பொருட்கள் ஏற்றுமதி 68.5 சதவீதமாக உயர வாய்ப்பு இருக்கிறது.இந்த ஏற்றுமதி உயர்வுக்கு, பல காரணங்கள் அடிப்படையாக இருக்கின்றன. முதலாவது, கடந்த ஆண்டு இதே காலத்தில் ஏற்றுமதி மிக குறைவாகவே இருந்தது. அதனால், ஒப்பீட்டு அளவில் இப்போது மிகவும் அதிகரிப்பதாக தெரிகிறது.


latest tamil news



அடுத்து, உலகளவிலான கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததும், இந்த உயர்வுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. மூன்றாவதாக, வளர்ந்த நாடுகளில் பொருளாதார வளர்ச்சி அதிகரித்து, தேவைகள் உயர்ந்ததும் ஒரு முக்கியமான காரணமாகும்.கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம், கடந்த ஏப்ரலில் மிகவும் அதிகமாக இருந்தது, ஏற்றுமதியை ஓரளவு பாதித்துள்ளது. இவ்வாறு தெரிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
15-ஜூன்-202106:46:36 IST Report Abuse
Mirthika Sathiamoorthi லண்டனை சேர்ந்த Global think tank Overseas Development இன்ஸ்டிடியூட் கடந்தவாரம் ஒரு அறிக்கை விட்டிருக்கு, என்ன சொல்லுதுன்னா 2100 க்குள் இந்தியா ஆண்டுதோறும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ( GDP ) 3 முதல் 10 சதவிகிதம் வரை இழக்க நேரிடும், பருவநிலை மாற்றம் காரணமாக 2040 ஆம் ஆண்டில் அதன் வறுமை விகிதம் 3.5 சதவீதம் உயரக்கூடும்..அதாவது சுனாமி வெள்ளம் மழையின்மை புயல் இந்த மாதிரி இயற்க்கை சீற்றங்களால் ஏற்படும் இழப்பால் ஆண்டுக்கு ஆண்டு GDP கொறையும்ன்னு சொல்லுது..உள்ளூர் பத்திரிகைகள் அரசும் தொடர்ந்து பொருளாதாரம் வளரும் வறுமை போகும் கோவிட் கடவுளின் விளையாட்டு... கோவிட் முடிஞ்சவுடன் பாருங்கன்னு சொல்லிகிட்டே இருந்தாலும் வெளிநாட்டு மீடியாக்கள் அப்படியொண்ணும் நம்பத்தகுந்த தகவலை கூறாமல் தொடர்ந்து எச்சரிக்கின்றன எப்புடி கொரானா இரண்டாம் அலை வரும்ன்னு எச்சரிச்ச மாதிரி..
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
15-ஜூன்-202108:12:09 IST Report Abuse
கொக்கி குமாரு வெளிநாட்டு மீடியாக்கள் அப்படியொண்ணும் நம்பத்தகுந்த தகவலை கூறாமல் தொடர்ந்து எச்சரிக்கின்றன....சார் வெளிநாட்டு தேசவிரோத செய்திகளை மட்டும் படிப்பார் போல....
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
15-ஜூன்-202106:30:59 IST Report Abuse
மதுரை விருமாண்டி இப்போ பாதாளத்தை நோக்கி போயிக்கிட்டு இருக்கு. அதை மறைச்சிட்டானுங்க.
Rate this:
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
15-ஜூன்-202108:09:59 IST Report Abuse
கொக்கி குமாரு கட்டுமரம் கருணாநிதியின் திருட்டு திமுகவின் ஆட்சியில் தமிழ்நாட்டின் கஜானாவை சொல்கிறீர்களா?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X