விசாரணைக்கு ஆஜராக 'மாஜி' முதல்வர் மறுப்பு

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சண்டிகர் : பஞ்சாபில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆஜராக மாட்டார் என, அவரது அகாலி தளம் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த 2015ல், அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல், 93, பஞ்சாப் முதல்வராக இருந்தபோது, கொட்கபுரா என்ற இடத்தில்

சண்டிகர் : பஞ்சாபில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு, முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் ஆஜராக மாட்டார் என, அவரது அகாலி தளம் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



பஞ்சாபில், முதல்வர் அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. கடந்த 2015ல், அகாலி தளத்தின் பிரகாஷ் சிங் பாதல், 93, பஞ்சாப் முதல்வராக இருந்தபோது, கொட்கபுரா என்ற இடத்தில் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் இரண்டு பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் முறையாக விசாரணை நடத்த வேண்டும் என, 2018ல், சிலர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போதும் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தி, கூட்டத்தை கலைத்தனர்
.


latest tamil news




இந்த இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு விசாரணை நடத்தி வருகிறது. உரிய ஆவணங்களுடன், வரும் 16ல் விசாரணைக்கு ஆஜராகும்படி, முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதலுக்கு, 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், அவரின் உடல்நிலை சரியில்லாததால் சிறப்பு விசாரணைக் குழுவில் ஆஜராக மாட்டார் என, அகாலி தளம் கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kattus - chennai,இந்தியா
15-ஜூன்-202107:17:10 IST Report Abuse
kattus அந்த ஊரு கட்டுஸ்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X