பொது செய்தி

தமிழ்நாடு

கோவில்களை நிறுவனமாக்கிய அரசு: ஆன்மிகவாதிகள் கடும் அதிருப்தி

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (80)
Share
Advertisement
சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறையின் இணைய தளத்தில், கோவில்களை நிறுவனங்களாக மாற்றி, பதிவேற்றம் செய்துள்ளதற்கு, ஆன்மிகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அறநிலையத்துறை சுறுசுறுப்பு அடைந்துள்ளது. கோவில்களின் நில ஆக்கிரமிப்பு அகற்றம், நிர்வாக முறைகளில் மாற்றம்; டிஜிட்டல் மயம் என, பல செயல்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன.
HRCE, Temples, Hindu Religious and Charitable Endowments

சென்னை: ஹிந்து சமய அறநிலையத் துறையின் இணைய தளத்தில், கோவில்களை நிறுவனங்களாக மாற்றி, பதிவேற்றம் செய்துள்ளதற்கு, ஆன்மிகவாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின், அறநிலையத்துறை சுறுசுறுப்பு அடைந்துள்ளது. கோவில்களின் நில ஆக்கிரமிப்பு அகற்றம், நிர்வாக முறைகளில் மாற்றம்; டிஜிட்டல் மயம் என, பல செயல்பாடுகள் தீவிரம் அடைந்துள்ளன. அறநிலையத்துறை இணையதளத்திலும், மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. சொத்து விவரங்கள், பக்தர்கள் புகார் பதிவிடும் பகுதி உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இணைக்கப்பட்டு உள்ளன.

அதேநேரம், இணைய தள பதிவில், 'நிர்வாகம்' என்ற பிரிவில், கோவில்கள், 'நிறுவனங்கள்' என, பதிவிடப்பட்டுள்ளன. இது, ஆன்மிக வாதிகளிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. கோவில்களை நிறுவனங்களாக கருதி, அரசு வெளியிட்டுள்ள இந்த செயலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.


latest tamil news



இதுகுறித்து, ஆன்மிக நல விரும்பிகள் கூறியதாவது: கோவில்களின் மத ரீதியான, நிர்வாக ரீதியான செயல்பாடுகளில், அறநிலையத்துறை அதிக உரிமை எடுத்து வருகிறது. அது, தன்னுடைய எல்லையை மீறாமல் செயல்படுவது நல்லது.மக்கள் மன அமைதிக்காகவும், நிம்மதிக்காகவும் கோவில்களை நாடி வருகின்றனர். ஆனால், கோவில்களை வியாபார மையமாகவே அறநிலையத்துறை மாற்றி வருகிறது.

தற்போது, அது உண்மை என்பதை நிரூபிக்கும் வகையில், அறநிலையத்துறை தன் இணைய தளத்தில், கோவில்களை நிறுவனங்களாகவே மாற்றி விட்டது. இது, கண்டனத்துக்குரியது. எனவே, இணையத்தில் அந்த பதிவு உடனடியாக மாற்றப்பட வேண்டும். இவ்வாறு அவர்கள்கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (80)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SexyGuy . - louisville,யூ.எஸ்.ஏ
19-ஜூன்-202123:21:42 IST Report Abuse
SexyGuy . இந்த ஆன்மீக வாதிகள் மைலாப்பூர் கோவில் சொத்துக்கள் ஆக்கிரமிப்பில் இருந்த போது , ஆணி புடிங்கி கொண்டு இருந்தார்களா?. கோவில் அரசாங்கத்தின் கையில் இல்லாமல் இந்த ஆன்மிகவாதிகள் கையில் இருந்த பொது தான் , தேவதாசி முறை அயோக்கியத்தனத்தை நோக்கி சென்றது. அப்போதும் என்ன செய்தார்கள்?. கோவில் மக்கள் சொத்து , அதை பாதுகாக்க வேண்டியது அரசாங்க கடமை. இந்த ஆன்மிகவாதி போர்வையில் இருக்கும் நபர் யார்?. ஆண்மை உள்ள ஆன்மிகவாதி முகத்தை காட்டலாமே.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
16-ஜூன்-202100:03:29 IST Report Abuse
மதுரை விருமாண்டி திஸ் நியூஸ் இஸ் ஸ்பான்சர்ட் பை "ஜெலுசில் மற்றும் பர்னால்".. குடித்தால் குளுகுளு, தடவினால் சுகம்..
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
16-ஜூன்-202100:02:55 IST Report Abuse
மதுரை விருமாண்டி முதலை வாயில் சிக்கிய இந்தச் சொத்துகளை ஒவ்வொன்றாக மீட்பதற்கு நீதிமன்றத்துக்கு அலைந்து கொண்டிருக்கிறார்கள் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X