மொத்த விலை பணவீக்கம் 12.94 சதவீதமாக உயர்வு

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த மே மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் 12.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு, கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்தி பொருட்கள் விலை அதிகரித்தது காரணமாக அமைந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம்,

புதுடில்லி : நாட்டின் மொத்த விலை பணவீக்கம், கடந்த மே மாதத்தில் இதுவரை இல்லாத வகையில் 12.94 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வுக்கு, கச்சா எண்ணெய் மற்றும் உற்பத்தி பொருட்கள் விலை அதிகரித்தது காரணமாக அமைந்துள்ளது என, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.



latest tamil news



மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: கடந்த ஆண்டு மே மாதத்தில் மொத்தவிலை பணவீக்கம், மைனஸ் 3.37 சதவீதமாக இருந்தது. இந்த மிக குறைந்த அடிப்படை நிலையும் தற்போது மே மாதத்தில் அதிகமாக இருப்பதாக காட்டுகிறது.கடந்த 5 மாதங்களாகவே தொடர்ந்து மொத்த விலை பணவீக்கம் அதிகரித்து வருகிறது. கடந்த ஏப்ரலில் 10.49 சதவீதமாக, இரட்டை இலக்கத்துக்கு உயர்ந்தது. தற்போது மே மாதத்தில் 12.94 சதவீதமாக மேலும் உயர்ந்துள்ளது. இந்த மொத்த விலை பணவீக்க அதிகரிப்புக்கு முக்கிய காரணம் கச்சா எண்ணெய், உற்பத்தி பொருட்கள் ஆகியவற்றின் விலை அதிகரித்தது ஆகும்.


latest tamil news



எரிபொருட்கள் பணவீக்கம் 37.61 சதவீதம் அதிகரித்துள்ளது. உற்பத்தி பொருட்கள் பணவீக்கம் 10.83 சதவீதம் அதிகரித்து உள்ளது.இருப்பினும், உணவு பொருட்கள் பிரிவில் பணவீக்கம், வெங்காயம் விலை அதிகரித்த போதிலும், ஓரளவு குறைந்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vottalanand -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-202114:17:00 IST Report Abuse
Vottalanand அரசு உளழியர்களுக்கு பஞ்சப்படி நி ருத்தப்பட்டு ஓராண்டு ஆகியது.J
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
15-ஜூன்-202111:49:44 IST Report Abuse
Srinivas.... இப்போது உள்ளதைவிட பல மடங்கு அதிகரிக்கும்...இதுதான் பீஜேபி ஆட்சியின் வளர்ச்சி.....
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
15-ஜூன்-202111:26:53 IST Report Abuse
Srinivas.... பக்கோடா அடிமை எவனாவது வருகிறானா என்று பார்த்தால் ஒரு பய வரமாட்டான். இதுதான் பீசப்பியின் வளர்ச்சி.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X