மத பிரசாரத்தில் ஐ.எம்.ஏ., தலைவர்? நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு!

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (24)
Share
Advertisement
புதுடில்லி : ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய டாக்டர்கள் சங்கத் தலைவர் ஜே.ஏ. ஜெயலால், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில், கீழ் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க, டில்லிஉயர் நீதிமன்றம் மறுத்து உள்ளது.ஐ.எம்.ஏ., தலைவர் டாக்டர் ஜெயலாலுக்கு எதிராக, டில்லியைச் சேர்ந்த ரோஹித் ஜா என்பவர், டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவுக்கு
Indian Medical Association, IMA, Delhi HC

புதுடில்லி : ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய டாக்டர்கள் சங்கத் தலைவர் ஜே.ஏ. ஜெயலால், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில், கீழ் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க, டில்லிஉயர் நீதிமன்றம் மறுத்து உள்ளது.

ஐ.எம்.ஏ., தலைவர் டாக்டர் ஜெயலாலுக்கு எதிராக, டில்லியைச் சேர்ந்த ரோஹித் ஜா என்பவர், டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவுக்கு ஹோமியோபதி மருத்துவத்தைவிட அலோபதி மருத்துவம் தான் சிறந்தது என்பதை நிரூபிக்கும் முயற்சியில், ஹிந்து மதத்தை குறைத்து மதிப்பிட்டு, தான் சார்ந்த கிறிஸ்துவ மதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'கிறிஸ்துவ மதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபடவில்லை என, டாக்டர் ஜெயலால் உறுதியளித்ததால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, டில்லி நீதிமன்றம், தன் உத்தரவில் கூறியிருந்தது.


latest tamil news


இந்நிலையில், 'நான் மதப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. டில்லி நீதிமன்றத்தில் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. உத்தரவாதம் அளித்ததாக கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில், ஜெயலால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'கீழ் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டியுள்ளது. இதில் எந்த தடையும் தற்போதைக்கு விதிக்க முடியாது' என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (24)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
15-ஜூன்-202113:31:59 IST Report Abuse
siriyaar இவர்களுக்கு இது ஒரு தொழில்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
15-ஜூன்-202112:13:26 IST Report Abuse
Sridhar ஜெயபால் மதமாற்ற வெளிகளில் ஈடுபட்டால் என்ன தவறு? IMA என்றால் Indian Medical Association என்றவுடன் இது எதோ ICMR மற்றும் NMC போன்ற அதிகார பூர்வமான அரசு அமைப்பு என நாமே தவறாக நினைத்துக்கொண்டு, அத்தகைய அமைப்புகளில் இருந்துகொண்டு எப்படி மதமாற்ற வேலைகளில் ஈடுபடலாம் என கேள்வி எழுப்பிய நம்மீதல்லவா அணைத்து தவறும்?
Rate this:
Cancel
GANESUN - Delhi,இந்தியா
15-ஜூன்-202111:57:57 IST Report Abuse
GANESUN பல தொண்டு நிறுவனங்களுக்கு ஆப்பு வச்ச மாதிரி இந்த IMA, HALAL, அரசாங்க உருப்பினர் அல்லாத விளையாட்டு மட்டுமல்லாது இதுபோன்ற கம்பெனிகளுங்கும் ஆப்பு தேவை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X