மத பிரசாரத்தில் ஐ.எம்.ஏ., தலைவர்? நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு!| Dinamalar

மத பிரசாரத்தில் ஐ.எம்.ஏ., தலைவர்? நீதிமன்ற தீர்ப்புக்கு தடை விதிக்க மறுப்பு!

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (24)
Share
புதுடில்லி : ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய டாக்டர்கள் சங்கத் தலைவர் ஜே.ஏ. ஜெயலால், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில், கீழ் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க, டில்லிஉயர் நீதிமன்றம் மறுத்து உள்ளது.ஐ.எம்.ஏ., தலைவர் டாக்டர் ஜெயலாலுக்கு எதிராக, டில்லியைச் சேர்ந்த ரோஹித் ஜா என்பவர், டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவுக்கு
Indian Medical Association, IMA, Delhi HC

புதுடில்லி : ஐ.எம்.ஏ., எனப்படும் இந்திய டாக்டர்கள் சங்கத் தலைவர் ஜே.ஏ. ஜெயலால், கிறிஸ்துவ மதத்தை பரப்புவதாக தொடரப்பட்ட வழக்கில், கீழ் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க, டில்லிஉயர் நீதிமன்றம் மறுத்து உள்ளது.

ஐ.எம்.ஏ., தலைவர் டாக்டர் ஜெயலாலுக்கு எதிராக, டில்லியைச் சேர்ந்த ரோஹித் ஜா என்பவர், டில்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கொரோனாவுக்கு ஹோமியோபதி மருத்துவத்தைவிட அலோபதி மருத்துவம் தான் சிறந்தது என்பதை நிரூபிக்கும் முயற்சியில், ஹிந்து மதத்தை குறைத்து மதிப்பிட்டு, தான் சார்ந்த கிறிஸ்துவ மதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'கிறிஸ்துவ மதத்தை பரப்பும் முயற்சியில் ஈடுபடவில்லை என, டாக்டர் ஜெயலால் உறுதியளித்ததால், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, டில்லி நீதிமன்றம், தன் உத்தரவில் கூறியிருந்தது.


latest tamil news


இந்நிலையில், 'நான் மதப் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. டில்லி நீதிமன்றத்தில் எந்த உத்தரவாதத்தையும் அளிக்கவில்லை. உத்தரவாதம் அளித்ததாக கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, டில்லி உயர் நீதிமன்றத்தில், ஜெயலால் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.'கீழ் நீதிமன்றத் தீர்ப்பை முழுமையாக படிக்க வேண்டியுள்ளது. இதில் எந்த தடையும் தற்போதைக்கு விதிக்க முடியாது' என, உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X