பொது செய்தி

இந்தியா

நாடு தழுவிய தன்னார்வ சேவைகள்: பா.ஜ., புதிய திட்டம்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரங்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உட்பட நாடு தழுவிய தன்னார்வ சேவைகளை பா.ஜ., துவக்கி உள்ளது.கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்த நேரத்தில், மத்திய பா.ஜ., அரசு தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் கோட்டைவிட்டதாக, எதிர்கட்சிகள்
BJP, New Plan, Bharatiya Janata Party,

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு பிரசாரங்கள், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது உட்பட நாடு தழுவிய தன்னார்வ சேவைகளை பா.ஜ., துவக்கி உள்ளது.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை தீவிரமாக இருந்த நேரத்தில், மத்திய பா.ஜ., அரசு தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் கோட்டைவிட்டதாக, எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டின.இதையடுத்து, தடுப்பூசியின் அவசியம் குறித்த விழிப்புணர்வு பிரசாரங்கள், நிவாரணங்கள், மருத்துவ தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளித்தல் உள்ளிட்ட சமூக பணிகளில், பா.ஜ., தொண்டர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என, அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.


latest tamil news


தடுப்பூசி பிரசாரத்தில் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசியை கட்டாயம் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. மேலும், 18 - 44 வயது வரையிலான, தொற்று எளிதில் பாதிக்கப்பட கூடிய பணி செய்பவர்கள், உடனடியாக தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர். வீடு வீடாகச் சென்று பொருட்களை வினியோகிப்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், வீட்டு பணி செய்பவர்கள், செய்தி தாள் மற்றும் சமையல் எரிவாயு வினியோகிப்பவர்கள் அவசியம் தடுப்பூசி போட்டுக் கொள்ள, பா.ஜ., தொண்டர்கள் அறிவுறுத்தும்படி, கட்சி தலைமை வலியுறுத்தி உள்ளது.

மூன்றாவது அலை, குழந்தைகளை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுவதால், 12 வயதுக்கு குறைவான சிறார்களின் பெற்றோர், அவசியம் தடுப்பூசி செலுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவது குறித்து, கிராமப்புறங்களில் உள்ள மருத்துவ தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்க, மாநில அளவில் குழுக்களை பா.ஜ., நியமித்துள்ளது. இரண்டாம் அலையின் போது, மத்திய அரசு குறித்து எழுந்த விமர்சனங்களை சரி செய்ய, மக்கள் நலப் பணிகளில் கட்சி தொண்டர்களை ஈடுபடும்படி, பா.ஜ., அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் தேசிய மயமாக்கப் பட்ட வங்கியில் கணக்கு தொடங்க போனால் செல்போனிலேயே தொடங்கலாமென்றார்கள் ஒரு மணி நேரமாய் சுற்றுகிறது ஒன்றும் முடியவில்லை அவர்களே என் செல்போனை வாங்கி ஆளாளுக்கு முயன்று தோற்று ஒரு ஆறு பக்க விண்ணப்பம் தந்தார்கள் முன்பக்கமெல்லாம் இந்தி பின்பக்கமெல்லாம் ஆங்கிலம் பூர்த்தி செய்த்த்து கொடுத்தால் வாங்கி கொண்டு "ஒரு வாரத்தில் உங்களுக்கு sms வருமென்று"சொல்லி அனுப்பி விட்டார்கள் எங்க ஒரு கணக்கு தொடங்க ஒரு வாரமா இதுதான் மோடியின் டிஜிட்டல் இந்தியாவான்னு நான் அவர்களிடம் கேட்க முடியுமா? அதே வாங்கி 1976 இல் நானிருந்த கிராமத்தில் கிளை திறந்த அன்று இருபத்தேழு பேரை அழைத்து சென்று கணக்கு தொடங்கி வங்கி வேலைநேரத்துக்குளாக பணம் போட்டு பாஸ் புக்குடன் வந்தோம் எல்லாம் லெட்ஜ்ர் பேனா பதிவு நாடு ரொம்ம்ம்ப முன்னேறிடுச்சு
Rate this:
Cancel
Sankar Ramu - Carmel,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-202111:11:18 IST Report Abuse
Sankar Ramu நல்லது சீனாகாரன் இன்னும் என்ன கைவசம் வச்சிருக்கானோ. எதற்கும் தயாராக வேண்டும்.
Rate this:
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன்எதற்கும் தயாராக வேண்டுமா? அப்படியானால் இந்த வார்த்தைகளை தெரிந்து கொள்ளணும் AUTONOMOUS REGION, PROVINCE, PREFECTURE, INTERNMENT....
Rate this:
Cancel
sahayadhas - chennai,பஹ்ரைன்
15-ஜூன்-202111:04:53 IST Report Abuse
sahayadhas இன்னும் ராம், ராம் எடுபடாது முருகனு சொல்ல பழகு. ஜனங்க அடிப்பது உறுதி. சிறப்பு பாதுகாப்பு படை இருக்குதே பயப்பட வேண்டாம்.
Rate this:
blocked user - blocked,மயோட்
15-ஜூன்-202111:40:51 IST Report Abuse
blocked userஅல்லேலுயா சொல்லுறனவனுக்கு முருகனா இருநால் என்ன பெருமாளா இருந்தா என்ன கேடு?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X