பொது செய்தி

தமிழ்நாடு

மளிகை தொகுப்புடன் ரூ.2,000; ரேஷனில் வினியோகம் துவங்கியது

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை : ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கான கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான, தலா 2,000 ரூபாயும், 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும், இன்று (ஜூன் 15) முதல் வினியோகம் செய்யப்பட்டன.முதல்வர் ஸ்டாலின், 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, தலா 4,000 ரூபாய் வழங்க, மே மாதம் உத்தரவிட்டார். முதல் தவணையான, தலா 2,000 ரூபாய் வழங்கும் பணி, மே 15 முதல்,
Rs 2000, Covid Relief, Free Grocery Gift

சென்னை : ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கான கொரோனா நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான, தலா 2,000 ரூபாயும், 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பும், இன்று (ஜூன் 15) முதல் வினியோகம் செய்யப்பட்டன.

முதல்வர் ஸ்டாலின், 2.09 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு கொரோனா ஊரடங்கு கால நிவாரணமாக, தலா 4,000 ரூபாய் வழங்க, மே மாதம் உத்தரவிட்டார். முதல் தவணையான, தலா 2,000 ரூபாய் வழங்கும் பணி, மே 15 முதல், ரேஷன் கடைகளில் துவங்கியது. அம்மாதம் நிவாரண தொகை வாங்காதவர்கள், இம்மாதம் வாங்கி கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை 2.40 லட்சம் பேர் மட்டுமே முதல் தவணையை வாங்காமல் உள்ளனர்.

நிவாரண தொகையின் இரண்டாவது தவணையான, தலா 2,000 ரூபாயுடன், கோதுமை மாவு உள்ளிட்ட, 14 வகை பொருட்கள் அடங்கிய மளிகை தொகுப்பு, இன்றுமுதல் வழங்கப்பட்டது. அவற்றை வாங்க எந்த தேதி, நேரத்தில், ரேஷன் கடைகளுக்கு வர வேண்டும் என்ற விபரம் அடங்கிய டோக்கனை, கார்டுதாரர்களின் வீடுகளில் இம்மாதம் 11ம் தேதி முதல், நேற்று வரை ரேஷன் ஊழியர்கள் வழங்கியிருந்தனர்.


latest tamil news




நிவாரண தொகையை, மாநில தலைமை கூட்டுறவு வங்கி, மாவட்ட வாரியாக பிரித்து, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் கணக்குகளில் செலுத்தியுள்ளது. அந்த தொகையை ரேஷன் கடைகளை நடத்தும் கூட்டுறவு சங்கங்கள் எடுத்து, தயார் நிலையில் வைத்துள்ளன.

மேலும், ரேஷன் கடைகளுக்கு, மளிகை தொகுப்பும் அனுப்பப்பட்டு தயாராக வைக்கப்பட்டது. இதையடுத்து, ரேஷன் கடைகளில் கார்டுதாரர்களுக்கு, தலா 2,000 ரூபாயுடன், மளிகை தொகுப்பு வழங்கும் பணி, இன்று காலை துவங்கியது. ஒவ்வொரு கடையிலும் தினமும் 200 கார்டுதாரர்களுக்கு குறையாமல் வழங்கப்பட்டது.


'எடை குறைவாக சப்ளை'


இது குறித்து ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:அத்தியாவசிய பொருட்களை கொள்முதல் செய்து, ரேஷன் கடைகளுக்கு 'சப்ளை' செய்யும் பணியை, தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மேற்கொள்கிறது. அரிசி, சர்க்கரை போன்றவை மூட்டைக்கு 2 கிலோ வரை குறைவாகவே சப்ளை செய்யப்படுகிறது. அந்த இழப்பை ஈடுகட்டவே, சில ஊழியர்கள், கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கும் போது எடையில் தில்லுமுல்லு செய்கின்றனர்.

சரியான எடையில் வழங்குமாறு, வாணிப கழக அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுப்பதில்லை. தற்போது, மளிகை தொகுப்பும் மூட்டைக்கு 3 கிலோ முதல், 4 கிலோ வரை எடை குறைவாக சப்ளை செய்யப்படுகிறது. இதனால், அவற்றை கார்டுதாரர்களுக்கும் குறைத்து வழங்க நேரிடும். இழப்பு தொகையை ஊழியர்கள் ஏற்கும் நிலை ஏற்படும். எனவே, ஒவ்வொரு கடையிலும் ஊழியர்கள் முன்னிலையில், மளிகை தொகுப்பை சரியாக எடைபோட்டு வழங்க, அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Shankar - Hawally,குவைத்
15-ஜூன்-202111:09:54 IST Report Abuse
Shankar எப்படியும் இந்த இரண்டாயிரம் ஓவா திரும்பவும் (டாஸ்மாக்) அரசு கஜானாவுக்கு தானே வரப்போகுது???
Rate this:
Cancel
Raj - Coimbatore,இந்தியா
15-ஜூன்-202110:59:01 IST Report Abuse
Raj Kadhurungada
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-202107:29:11 IST Report Abuse
ram ஐயா முதல்வர் அவர்களே... மக்களுக்கு இலவசங்களை அள்ளிக் கொடுக்குறீங்க. அது உங்களோட நல்ல மணசு, மக்களோட கஷ்ட்டங்களை புரிந்து உதவி செய்யுற முதல்வர் அப்படின்னு வச்சுப்போம். ..ஆனால் இந்த இலவசங்களுக்கு செலவாகும் நிதி எப்படி சரிபன்னுவீங்கன்னு மக்களுக்கு வெளிப்படையாக அறிக்கை விட்டீங்கன்னா.. மக்களுக்கு உங்களோட ஆட்சித்திறமை நன்றாக புறியுமே.. அப்புறமென்ன தேர்தல் நேரத்துலே கூட்டம் போட்டு தொண்டை வறண்டுபோக கத்தவேண்டிய அவசியமே இல்லேயே... மக்களுக்கும் தெளிவாக புரிந்துடுமே.. இலவசம் யார் பணத்துலே இருந்து கொடுக்கப்படுது.. யார்க்கிட்டே இருந்து பணத்தை எடுத்து அதை நாங்க இலவசமா பண்றோமென சொல்றீங்க.. மக்களுக்கு புரிந்துணர்வு வந்துடுமேன்னு பயப்படுரீங்களா முதல்வரே.. இலவசம் தருவொம் என சொல்லி ஓட்டு கேட்ப்பவங்கள் எல்லோரும் விறட்டப்படும் காலம் வெகுதொலைவில் இல்லேன்றதை புரிந்துக்கனும் முதல்வர் அவர்களே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X