தேர்தல் வன்முறையில் பலாத்காரம்: மேற்கு வங்க பெண்கள் வழக்கு

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
புதுடில்லி : மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளின்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, மூன்று பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் பிரசாரம், ஓட்டுப் பதிவைத் தொடர்ந்து, ஓட்டு
WB Post Poll Violence, rape, Trinamool Congress workers, Supreme Court

புதுடில்லி : மேற்கு வங்கத்தில் தேர்தலுக்கு பிந்தைய வன்முறைகளின்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக, மூன்று பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில் வென்று, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. தேர்தல் பிரசாரம், ஓட்டுப் பதிவைத் தொடர்ந்து, ஓட்டு எண்ணிக்கைக்கு பின்னும், மாநிலத்தில் பரவலாக வன்முறை நடந்தது.

இதில், ஆளும் திரிணமுல் காங்.,கைச் சேர்ந்த தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. தேர்தலுக்கு பிந்தைய வன்முறை தொடர்பாக, எஸ்.ஐ.டி., எனப்படும் சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடக் கோரி, வழக்குகள் நிலுவையில் உள்ளன.


latest tamil newsஇந்நிலையில், தேர்தலுக்கு பிந்தைய வன்முறையின்போது, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தாக, மூன்று பெண்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். அதில், 60 வயது பெண் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:தற்போது மாநிலத்தில் எதிர்க்கட்சியாக உள்ள பா.ஜ.,வுக்கு, எங்களுடைய குடும்பத்தினர் ஆதரவு தெரிவித்தனர்.

அதனால், ஓட்டு எண்ணிக்கைக்கு பின், எங்கள் வீட்டை திரிணமுல் காங்., தொண்டர்கள் சூறையாடினர். என் மருமகளை கட்டி வைத்து அடித்தனர். என் 6 வயது பேரன் கண் முன்னே, திரிணமுல் காங்., தொண்டர்கள், என்னை பாலியல் பலாத்காரம் செய்தனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.அதேபோல், 16 வயது சிறுமி மற்றும் 19 வயது பெண்ணும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rsudarsan lic - mumbai,இந்தியா
15-ஜூன்-202114:48:27 IST Report Abuse
rsudarsan lic Why not media s their teams to assess?
Rate this:
Cancel
Ellamman - Chennai,இந்தியா
15-ஜூன்-202112:04:16 IST Report Abuse
Ellamman மேற்கு வங்கத்தில் 24 பீசப்பி எம் எல் ஏ க்கள் காணோமாம். அனைவரும் முகுல் ராய்க்கு நெருக்கமானவர்களாம். இது எப்பூடி? அவர்கள் ராஜினாமா செய்துவிட்டு திரிணமூல் காங்கிரஸ் சார்பாக மறுபடியும் போட்டி போட போகிறார்கள். இடை தேர்தல் நிச்சயம். மம்தா ஆட்டம் அற்புதம்.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
15-ஜூன்-202110:11:48 IST Report Abuse
RajanRajan ரோஹிங்கியா மாடல் வன்முறை அரங்கேறியுள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X