'டொனால்டு டிரம்ப் ஓர் அறிவாளி' - விளாடிமிர் புடின்..!

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
மாஸ்கோ: அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலின்போது ரஷ்யா தங்கள் நாட்டு ஹேக்கர்களின் உதவியுடன் அமெரிக்காவின் அரசு ரகசியங்களை திருடுவதாக முன்னதாக குற்றம் சாட்டப்பட்டது.கடந்த 2016ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்தக் குற்றச்சாட்டு உண்டு. அமெரிக்க வாக்கு எண்ணிக்கையை மாற்ற ரஷ்ய அரசு மறைமுகமாக செயல்படுகிறது என

மாஸ்கோ: அமெரிக்க நாடாளுமன்ற தேர்தலின்போது ரஷ்யா தங்கள் நாட்டு ஹேக்கர்களின் உதவியுடன் அமெரிக்காவின் அரசு ரகசியங்களை திருடுவதாக முன்னதாக குற்றம் சாட்டப்பட்டது.latest tamil newsகடந்த 2016ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்திலிருந்தே இந்தக் குற்றச்சாட்டு உண்டு. அமெரிக்க வாக்கு எண்ணிக்கையை மாற்ற ரஷ்ய அரசு மறைமுகமாக செயல்படுகிறது என கூறப்பட்டது.

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ரஷ்ய அரசு மறுத்து வந்தது. இதனையடுத்து தற்போது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இதுகுறித்து தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ஆதாரமற்ற நம்பகத்தன்மை இல்லாத ஓர் தகவலை அமெரிக்க அரசு மீண்டும் மீண்டும் பரப்பி வருகிறது. ரஷ்யா எந்த சட்டவிரோத ஹாக்கிங் செயலிலும் ஈடுபடவில்லை என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் இதுகுறித்து முன்னதாக ரஷ்யாவை குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டை மறுத்த விளாடிமிர் புட்டின், குற்ற செயல்களில் ஈடுபட்டு அமெரிக்க சிறைகளில் உள்ள ரஷ்ய குற்றவாளிகளை ரஷ்யாவிடம் ஒப்படைக்கக் கோரியுள்ளார்.


latest tamil newsசட்டவிரோத ஆயுத டீலர் விக்டர் போட் மற்றும் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளி கென்ஸ்டான்பெயின் யாரோசென்கோ ஆகியோரை மீண்டும் ரஷ்யாவிடம் ஒப்படைக்க கோரினார். ஆனால் இதற்கு அமெரிக்கா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.

விளாடிமிர் புடின் ரஷ்ய சைபர் குற்றவாளிகளை தங்கள்வசம் ஒப்படைக்கக் கோரவில்லை என்று ஜாக் சுல்லிவான் கூறி மறைமுகமாக அவரை விமர்சித்திருந்தார். சமீபத்தில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டிலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்கா வசம் உள்ள ரஷ்ய சைபர் குற்றவாளிகள் குறித்துப் பேட்டி அளித்திருந்தார்.

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காலத்தில் அமெரிக்க-ரஷ்ய உறவு வண்ணமயமாக இருந்ததாகவும் தற்போது ஜோ பைடன் ஆட்சியில் கடந்த ஆண்டுகளில் இருந்த அளவுக்கு சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்றும் விளாடிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் ஓர் அறிவாளி என்றுள்ளார்..!

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijay D Ratnam - Chennai,இந்தியா
15-ஜூன்-202115:49:14 IST Report Abuse
Vijay D Ratnam டொனால்ட் ட்ரம்பின் அருமை இனிமேல்தான் உலகத்துக்கு தெரியும். அமெரிக்காவில் இருக்கும் ஆர்.எஸ்.பி மீடியாக்கள் செய்த அயோக்கியத்தனம் கொஞ்சநஞ்சமல்ல. ஒரு ஆண்டுகள் தொடர்ந்து திட்டமிட்டு ட்ரம்பின் இமேஜை காலி செய்து அவரை காமெடியன் போல, கோமாளி போல சித்தரித்து கறுப்பர்களுக்கு எதிரானவர் என்ற பிம்பத்தை கட்டமைத்து, உலக பொருளாதாரத்தை நாசமாக்க வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காக சீனா வூஹானில் இருந்து உருவாக்கி திட்டமிட்டு பரப்பிய கொரோனா வைரஸை சரியாக்க கையாளவில்லை என்று பிரச்சாரம் செய்து ட்ரம்ப்பை காலி செய்ததன் பலனை இனி அமேரிக்கா அனுபவிக்கும். வயசான காலத்தில் மோட்டுவளையத்தை பார்த்துக்கிட்டு மூலையில் முடங்கி கிடந்த முதியவரை சீனாவின் ஸ்லீப்பர் செல்லாக்கி இப்போது அமெரிக்காவின் அதிபர் ஆக்கியிருக்கிறது சீனா என்றால், அதற்கு எவ்வளவு பெரிய கிரவுண்ட் ஒர்க் செய்து இருப்பார்கள், ஆளுக்கு தகுந்தாற் போல எலும்புத்துண்டுகளை வீசி மீடியாக்களை வளைத்து, சமூக வலைத்தளங்களை வளைத்து, WHOவை அடிமையாக்கி வளைத்து அடேங்கப்பா சீன அதிபர் உண்மையில் பெரிய ஆள்தான். என்ன மற்ற நாட்டு தலைவர்களை முட்டாள்கள் என்று நினைக்கிறார்.
Rate this:
Cancel
Balamurugan - Andipatty,இந்தியா
15-ஜூன்-202114:45:47 IST Report Abuse
Balamurugan உண்மையில் ட்ரம்ப் தனது தேசத்திற்கு உண்மையான வராக இருந்தார் . அவரது தோல்வி அமெரிக்கர்களைப்பற்றிய பல அபிப்ராயங்களை மாற்றியது
Rate this:
Cancel
mindum vasantham - madurai,இந்தியா
15-ஜூன்-202112:01:39 IST Report Abuse
mindum vasantham in Ameria big corporates like microsoft ,apple , google acts like a cartel
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X