பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் நலமடைவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: இந்தியாவில், கடந்த 75 நாட்களுக்கு பின்னர், நேற்று ஒரே நாளில் 60,571 பேருக்கு கோவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,95,70,881 ஆனது.மேலும், 1,17,525 பேர் நலமடைந்து வீடு
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கொரோனா, உயிரிழப்பு, கொரோனாவைரஸ், சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: இந்தியாவில் கோவிட்டில் இருந்து மீள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளதாவது: இந்தியாவில், கடந்த 75 நாட்களுக்கு பின்னர், நேற்று ஒரே நாளில் 60,571 பேருக்கு கோவிட் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,95,70,881 ஆனது.

மேலும், 1,17,525 பேர் நலமடைந்து வீடு திரும்பியதால், கோவிட்டில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 2,82,80,471 ஆக உயர்ந்தது. தற்போது, 9,13,378 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 2,726 பேர் வைரஸ் காரணமாக உயிரிழந்தனர். இதனால், கோவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3,77,031 ஆனது.


latest tamil news



தற்போது வரை, 25,90,44,072 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது.
இந்தியாவில், கோவிட்டில் இருந்து மீள்பவர்களின் விகிதம் 95.64 சதவீதமாக உள்ளது. தொற்று உறுதி செய்யப்படுபவர்களின் விகிதம் 5ல் இருந்து 4.39 சதவீதமாக குறைந்தது.

தினசரி பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 3.45 சதவீதமாக உள்ளது. தொடர்ந்து 8 நாளாக இந்த விகிதம் 5 சதவீதத்திற்கு கீழ் உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வெளியிட்ட அறிக்கையில், இந்தியாவில் நேற்று மட்டும் 17,51,358 மாதிரிகள் கோவிட் பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்டன. இதனையடுத்து பரிசோதனைக்கு எடுத்து கொள்ளப்பட்ட மொத்த மாதிரிகளின் எண்ணிக்கை 38,13,75,984 ஆனது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramasamy - Chennai,இந்தியா
15-ஜூன்-202119:04:30 IST Report Abuse
Ramasamy நல்ல செய்தி தான். ஆனால் இது பின்னால் அஜாக்கிரதைக்கு வழி வகுக்கக்கூடாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X