வூஹான் பரிசோதனை கூடத்துக்கு பி-4 அந்தஸ்து; சீன விஞ்ஞானி விளக்கம்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (9)
Advertisement
வூஹான்: சீனாவின் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் உலகுக்குப் பரவியது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இங்குள்ள வைரஸ் பரிசோதனைக் கூடத்தில் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட வவ்வால் இறகு சாம்பல் கழிவில் கலந்து அது அருகிலிருந்த இறைச்சி மார்க்கெட்டுக்கு சென்று அதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.இதற்கு 'லேப் லீக் தியரி' என்று பெயர். இந்த கோட்பாட்டை
வூஹான், பரிசோதனை,  சீன விஞ்ஞானி, விளக்கம்

வூஹான்: சீனாவின் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் உலகுக்குப் பரவியது அனைவருக்கும் தெரிந்த விஷயம். இங்குள்ள வைரஸ் பரிசோதனைக் கூடத்தில் குளிர்சாதனப் பெட்டியில் பாதுகாக்கப்பட்ட வவ்வால் இறகு சாம்பல் கழிவில் கலந்து அது அருகிலிருந்த இறைச்சி மார்க்கெட்டுக்கு சென்று அதன் மூலமாக கொரோனா வைரஸ் பரவியதாக கூறப்படுகிறது.

இதற்கு 'லேப் லீக் தியரி' என்று பெயர். இந்த கோட்பாட்டை சிலர் ஏற்றுக் கொள்கின்றனர். மற்ற சிலரோ மறுக்கின்றனர். சீன வைரஸ் ஆராய்ச்சி விஞ்ஞானிகளின் அஜாக்கிரதை காரணமாகவே கொரோனா வைரஸ் வெளியே பரவியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் நடைபெற்று கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஆனால் இன்னமும் வூஹான் பரிசோதனைக் கூடத்தில் உலக சுகாதார அமைப்பு தொடங்கி பல விஞ்ஞானிகள் வைரஸ் எவ்வாறு வெளியானது என்று ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த ஆராய்ச்சியை நீட்டிக்க அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. லேப் லீக் தியரியை சீன விஞ்ஞானிகள் சிலர் மறுத்து வருகின்றனர்.


latest tamil news


இதனைத்தொடர்ந்து தற்போது பிரபல பெண் விஞ்ஞானியும், வூஹான் வைரஸ் பரிசோதனைக் கூடத்தில் பணிபுரிந்து வருபவருமான ஜி ஷெங்க்லி அமெரிக்க இதழான நியூயார்க் டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி: வைரஸ் தங்களது பரிசோதனைக் கூடத்தில் இருந்து பரவியது என்பதற்கு எந்தவித நம்பத்தகுந்த ஆதாரங்களும் இல்லை.

எதுவும் தெரியாத அப்பாவி விஞ்ஞானிகள்மீது இதுகுறித்து தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. என்னுடைய பேச்சுக்கு ஆதாரம் இருக்கிறதா என்று பலர் கேள்வி எழுப்புகின்றனர். ஆதாரமற்ற ஒரு சம்பவம் நிகழ்ந்ததாக பலர் கூறும் நிலையில் அதற்கு நான் எங்கு போய் ஆதாரத்தை தேடுவது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், வூஹான் பரிசோதனைக் கூடத்துக்கு சீன அரசு p4 தரச் சான்றிதழ் வழங்கியுள்ளது. பரிசோதனைக் கூடங்களில் அதீத சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு கடைப்பிடிக்கப்பட்டால்தான் இந்த சான்றிதழைப் பெற முடியும். அதன்படி பார்த்தால் பரிசோதனை கூட்டத்துக்குள் பரிசோதிக்கப்படும் எந்த ஒரு சாம்பலும் கூடத்தைவிட்டு வெளியே செல்ல வாய்ப்பில்லை.

கடந்த 2018ஆம் ஆண்டு 42 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் வூஹான் பரிசோதனைக் கூடம் கட்டப்பட்டது. இதற்கு p4 அந்தஸ்து வழங்கப்பட்டது. உலகின் மிக ஆபத்தான வைரஸ்கள் குறித்த ஆராய்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக இந்த பரிசோதனை கூடத்தில் நடைபெற்றுள்ளது.

இதனாலேயே அங்கு பணியாற்றும் விஞ்ஞானிகளுக்கு கவச உடை, மாஸ்க் உள்ளிட்ட பல கட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டு மிகப் பாதுகாப்பாக அவர்கள் ஆராய்ச்சி மேற்கொண்டு வருகின்றனர். இதனால் விஞ்ஞானிகளின் அஜாக்கிரதை காரணமாக இந்த பரிசோதனை கூடத்தில் இருந்த வவ்வால் இறகு சாம்பிள் கழிவில் கலக்க வாய்ப்பே இல்லை என்வும் ஜி ஷெங்க்லி உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டு சயின்டிபிக் அமெரிக்கன் என்கிற விஞ்ஞான இதழுக்கு அவர் பேட்டி அளித்து இருந்தார். அப்போதும் இதே கருத்தை வலியுறுத்தி இருந்தார். கொரோனா வைரஸின் ஜீன் மாதிரி வூஹான் பரிசோதனைக் கூடத்தின் சாம்பள்களின் மாதிரியுடன் ஒத்துப்போகவில்லை என்று அவர் தெரிவித்திருந்தார்.

Advertisement
வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thonipuramVijay - Chennai,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-202107:15:39 IST Report Abuse
thonipuramVijay அமெரிக்கா, ப்ளீஸ் ஒரு ஏவுகணை போட்டு இந்த சீனாவை இல்லாமல் செய்யவும்
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
16-ஜூன்-202100:22:23 IST Report Abuse
blocked user இடையில் இந்தியாவில் இருந்துதான் வூகான் வைரஸ் பரவியது என்ற புது தியரியைக்கூட இவர்கள் ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டுள்ளனர்... ஹாங்காங்குக்கு அருகில் அணுவுலையில் விபத்து வேறு நடந்திருக்கிறது... உலகை அழிக்காமல் விடமாட்டான்கள் போல இருக்கிறது.
Rate this:
Cancel
Nallavan Kettavan - Madurai,இந்தியா
15-ஜூன்-202122:53:04 IST Report Abuse
Nallavan Kettavan Should take strick action on Chinese govt and It spoiled the entire world.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X