பஞ்சாப் முதல்வர் வீடு முற்றுகை: எதிர்க்கட்சி தலைவருக்கு வீட்டுக்காவல்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டை சிரோன்மணி அகாலிதளம் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எதிர்க்கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதலை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.பஞ்சாபில், கொரோனா தடுப்பூசியை முறைகேடாக தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்டதாகவும்,

சண்டிகர்: பஞ்சாப் சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டை சிரோன்மணி அகாலிதளம் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எதிர்க்கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதலை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.latest tamil newsபஞ்சாபில், கொரோனா தடுப்பூசியை முறைகேடாக தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்டதாகவும், இதற்கு மாநில சுகாதார அமைச்சர் பல்பிர் சிங் சித்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முக்கிய எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம் கட்சி வலியுறுத்தியது.


latest tamil newsஇந்த விவகாரம் குறித்தும், கோவிட் பாதித்த குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பல்பீர் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியினர், தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையில், பேரணியாக சென்று முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டை முற்றுகையிட சென்றனர்.


latest tamil news


இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் சுக்பீர் சிங் பாதலை வீட்டுக்காவலில் வைத்தனர். முதல்வர் வீட்டை முற்றுகையிட்டவர்களை போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kattus - chennai,இந்தியா
15-ஜூன்-202121:50:08 IST Report Abuse
kattus முன்ன பார்டர், இப்போ கேப்டன் ஊடு, சர்தார் saab kya hogayaa?? Congress is corrupt lekin captain tho nationalist, uski upper shak karna sharam ki baat hai, சங்கியின் வேண்டுகோள் அனைவரையும் கைது செய்து சிறையில் அடையுங்க
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
15-ஜூன்-202120:59:45 IST Report Abuse
sankaseshan Prakash singh badal and sukbir badal are involved in drug trafficking case ,involved in curroption. These people are changing against Amrindar CM .
Rate this:
Cancel
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
15-ஜூன்-202114:58:30 IST Report Abuse
 N.Purushothaman பஞ்சாபில் இப்படி ஒரு பிரச்சனை ...இதாவது பரவாயில்லை ....அங்கு மின்சாரமே ஆறு மணி நேரம் தான் கொடுப்பதால் விவசாயிகள் கடும் மன சோர்வு அடைந்து உள்ளார்கள் .... ஏ என் ஐ செய்தி நிறுவனத்தில் இந்த செய்தி வெளியாகி உள்ளது ... ஆனால் விவசாய சங்கமோ மத்திய அரசுக்கு எதிரான போராட்டத்துல திசை தெரியாமல் நிக்கு ...பீஹாருல காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம் எல் ஏ க்கள் நிதிஷின் கட்சிக்கு தாவ தயாராகி உள்ளனர் ....ராஜஸ்தானில் கேலாட்டுக்கு ஆதரவாக செயல்பட்ட பகுஜன் கட்சி எம் எல் ஏ க்கள் தங்களுக்கு இன்னமும் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வில்லைன்னு போர்க்கொடி தூக்கி உள்ளார்கள் ...அதோட சச்சின் பைலட் மற்றும் ஆதரவாளர்கள் மீண்டும் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர் ... காங்கிரஸ் தலைமை எடை பற்றியும் கவலைப்படமால் எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர் ...ராவுளுக்காக கட்சியையே நிர்மூலமாக்கி விட்டனர் ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X