பஞ்சாப் முதல்வர் வீடு முற்றுகை: எதிர்க்கட்சி தலைவருக்கு வீட்டுக்காவல்| Dinamalar

பஞ்சாப் முதல்வர் வீடு முற்றுகை: எதிர்க்கட்சி தலைவருக்கு வீட்டுக்காவல்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (4)
Share
சண்டிகர்: பஞ்சாப் சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டை சிரோன்மணி அகாலிதளம் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எதிர்க்கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதலை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.பஞ்சாபில், கொரோனா தடுப்பூசியை முறைகேடாக தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்டதாகவும்,

சண்டிகர்: பஞ்சாப் சுகாதார அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி, முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டை சிரோன்மணி அகாலிதளம் கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, எதிர்க்கட்சி தலைவர் சுக்பீர் சிங் பாதலை வீட்டுக்காவலில் வைக்கப்பட்டார்.



latest tamil news



பஞ்சாபில், கொரோனா தடுப்பூசியை முறைகேடாக தனியார் மருத்துவமனைகளுக்கு விற்கப்பட்டதாகவும், இதற்கு மாநில சுகாதார அமைச்சர் பல்பிர் சிங் சித்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில முக்கிய எதிர்க்கட்சியான சிரோன்மணி அகாலிதளம் கட்சி வலியுறுத்தியது.


latest tamil news



இந்த விவகாரம் குறித்தும், கோவிட் பாதித்த குழந்தைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும், பல்பீர் சிங்கை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் சிரோன்மணி அகாலிதளம் கட்சியினர், தலைவர் சுக்பீர் சிங் பாதல் தலைமையில், பேரணியாக சென்று முதல்வர் அமரீந்தர் சிங் வீட்டை முற்றுகையிட சென்றனர்.


latest tamil news


இதனையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் சுக்பீர் சிங் பாதலை வீட்டுக்காவலில் வைத்தனர். முதல்வர் வீட்டை முற்றுகையிட்டவர்களை போலீசார் தண்ணீர் பீய்ச்சி அடித்து கலைத்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


latest tamil news


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X