பொது செய்தி

இந்தியா

பாலியல் வன்கொடுமைக்கு எதிராக போராடிய கன்னியாஸ்திரி: கான்வென்டை விட்டு வெளியேற்றிய திருச்சபை

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (92)
Share
Advertisement
திருவனந்தபுரம்: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற கன்னியாஸ்திரி லூசி கலப்புராவை, கான்வென்டை விட்டு வெளியேறுமாறு பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை (எப்.சி.சி.,) உத்தரவிட்டுள்ளது. சீரோ மலபார் சபையில் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முலக்கல். இவர், 'கேரளாவில் உள்ள கான்வென்டில் தன்னை 2014 முதல் 2016

திருவனந்தபுரம்: கேரளாவில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பிஷப் பிராங்கோ முலக்கலுக்கு எதிரான போராட்டங்களில் பங்கேற்ற கன்னியாஸ்திரி லூசி கலப்புராவை, கான்வென்டை விட்டு வெளியேறுமாறு பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை (எப்.சி.சி.,) உத்தரவிட்டுள்ளது.latest tamil newsசீரோ மலபார் சபையில் ஜலந்தர் பிஷப்பாக இருந்தவர் பிராங்கோ முலக்கல். இவர், 'கேரளாவில் உள்ள கான்வென்டில் தன்னை 2014 முதல் 2016 வரை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார்' என, கன்னியாஸ்திரி ஒருவர் கடந்த ஆண்டு புகார் சொன்னார். இது நாட்டையே உலுக்கினாலும் பிராங்கோ முலக்கல் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் அவரை கைது செய்யக் கோரி கொச்சியில் கன்னியாஸ்திரிகள் தொடர் போராட்டம் நடத்தினர். வாடிகனுக்கும் புகார் அனுப்பிய நிலையில், பிராங்கோ தனது பிஷப் பதவியை ராஜினாமா செய்துவிட்டு போலீஸ் விசாரணைக்கு ஆஜரானார். பிறகு அவர் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தார்.


latest tamil newsஇந்த வழக்கில் அவருக்கு எதிராக சாட்சி சொன்ன பாதிரியார் குரியகோஸ் கட்டுத்தாரா மர்மமான முறையில் இறந்தார். இதைத்தொடர்ந்து பிராங்கோவுக்கு எதிராக 2019ம் ஆண்டின் துவக்கத்தில் திருச்சபையிலும் போராட்டம் வெடித்தது. போராட்டத்தை முன்னின்று நடத்திய அனுபமா என்ற கன்னியாஸ்திரியை இடமாற்றம் செய்தது சபை. போராட்டக் களத்தில் உடனிருந்த கன்னியாஸ்திரி லூசி களப்புராவை 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சபையை விட்டே நீக்கினர். இந்நிலையில் சபையில் தனக்கு நேர்ந்தது, தான் கண்டது என அனைத்தையும் 'கர்த்தாவின்டே நாமத்தில்' என்ற பெயரில் புத்தகம் ஆக்கியுள்ளார் லூசி.


latest tamil newsஇந்நிலையில் நேற்று, லூசி கலப்புராவிற்கு பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபை அனுப்பியிருக்கும் கடிதத்தில், 'உங்கள் பதவி நீக்கத்தை எதிர்த்து முறையீடு செய்யக் கத்தோலிக்க சபைக்குள் ஏந்தச் சட்ட வழிகளும் இனி இல்லை. எப்.சி.சி.,யின் உறுப்பினராக நீங்கள் தொடர்வதற்கான உரிமை உறுதியாவும் திரும்பப் பெற முடியாத வகையிலும் மறுக்கப்பட்டுள்ளது. இதனால் இனி நீங்கள் பிரான்சிஸ்கன் கிளாரிஸ்ட் சபையின் கான்வென்ட்களில் தங்குவது சட்ட விரோதமானது' எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

எப்சிசியின் இந்த முடிவுக்கு எதிராக கன்னியாஸ்திரி லூசி கலப்புரா விடுத்த வேண்டுகோளை, வாட்டிகன் தேவாலயம் மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (92)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
16-ஜூன்-202110:06:56 IST Report Abuse
RajanRajan தேவனின் மன்னிப்பு மறுக்கப்பட்டு விட்டது. இனி இந்த கூத்தாடிகளை தவிர்த்து விட்டு உங்கள் தாய் மதத்திற்கு திரும்புங்கள். மன அமைதி பெறுங்கள் வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Sampath Kumar - chennai,இந்தியா
16-ஜூன்-202109:37:11 IST Report Abuse
Sampath Kumar எங்கும் காமம் எல்லா மதத்திலும் காமம் இந்த மதவாதிகளை n அராஜகத்தை ஒழிக்க அவர்களின் கூடாரத்தை கழிக்கவேண்டும் அவர்களை அளித்து ஒழிக்கவேண்டும்
Rate this:
Cancel
anthony - kovalam,இந்தியா
16-ஜூன்-202109:25:14 IST Report Abuse
anthony சட்டம் பணத்துக்கு அடங்கி விட்டது. எது எதுக்கோ ஆர்ப்பாட்டங்கள் செய்யும் நல்லோர்கள் எல்லாம் தூங்கிவிட்டர்களா ? நீதித்துறையும் இந்த வழக்கில் பின் வாங்கியது ஏன் ? அந்த கடவுள்தான் நீதியை நிலைநாட்டவேணும். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X