அகிலேசுடன் மாயாவதி கட்சி எம்எல்ஏ.,க்கள் சந்திப்பு: உபி., அரசியலில் பரபரப்பு

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
லக்னோ: உ.பி., சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேசை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.உ.பி., சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ்
சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், அகிலேஷ், மாயாவதி

லக்னோ: உ.பி., சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேசை சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உ.பி., சட்டசபைக்கு அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அனைத்து கட்சிகளும் ஈடுபட்டு உள்ளன. கடந்த சட்டசபை தேர்தலில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி 19 இடங்களில் வெற்றி பெற்றது. பின்னர் நடந்த இடைத்தேர்தலில் ஒரு இடத்தில் தோல்வியடைந்து 18 எம்எல்ஏக்கள் உள்ளனர். அதில் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 11 எம்.எல்.ஏ.,க்களை மாயாவதி கட்சியில் இருந்து நீக்கினார்.

இதனால், சட்டசபையில் பகுஜன் சமாஜ் கட்சி பலம் 7 ஆக குறைந்தது. இருப்பினும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ.,க்கள், தகுதி நீக்கம் செய்யப்படாததால், அவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,க்களாக தொடர்கின்றனர். தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்களில், லால்ஜி வர்மா, ராம் அசல் ராஜ்பார் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் முக்கியமானவர்கள். அதில் வர்மா, பகுஜன் சமாஜ் எம்.எல்.ஏ.,க்கள் குழு தலைவராக இருந்தார். ராஜ்பர், மாயாவதி ஆட்சியின் போது அமைச்சராகவும், மாநில தலைவராகவும் பதவி வகித்து உள்ளார்.


latest tamil news


இந்நிலையில், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சில எம்எல்ஏ.,க்கள், சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேசை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. எதற்காக அவர்கள் சந்தித்தார்கள் என்ற தவகல் வெளியாகவில்லை. மாநிலத்தில் ஆளும் பா.ஜ.,வுக்கு முக்கிய எதிர்க்கட்சியாக சமாஜ்வாதியை முன்னிறுத்தும் முயற்சியில் அகிலேஷ் ஈடுபட்டு உள்ளநிலையிலும், சட்டசபை தேர்தல் நெருங்கும் நேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் சந்தித்து பேசியது சமாஜ்வாதி கட்சிக்கு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திருஞான சம்பந்த மூர்த்திதாச ஞானதேசிகன் அகிலேஷுடன் மாயாவதி "அனைத்திலும்" 50:50 என கை கோர்க்க வேண்டும்
Rate this:
Cancel
Elango - Kovai,இந்தியா
15-ஜூன்-202120:38:46 IST Report Abuse
Elango யோகியை நீக்கினால் பிஜேபி மீண்டும் வாய்ப்பு உள்ளது, இல்லாவிட்டால் சமாஜவாதி கடும் பொடியை தரும். காங்கிரஸ் செல்லா காசு, மாயாவதி கட்சி அழிவு பாதையில்
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
15-ஜூன்-202119:01:55 IST Report Abuse
kattus சமாஜ்வாதி வெற்றி, பிஜேபி 10 to 20 சீட், அகிலஷ் 420 to 440 சீட், காங்கிரஸ் 0 to 2 சீட், மாயவதி 5 to 15 சீட், தலைவர் வாரணசியில் வெற்றி மோடி டெபாசிட் இழந்தார், momatha பிரதமர் ஆனார், தகளீவர் ஜனாதிபதி ஆனார், கீசோறு வெளி உறவு துறை அமைச்சர் ஆனார், பாவார் ராணுவ அமையுச்சர், கனி அக்கா நிதி அமைச்சர் ஆனார், ஹிந்துக்கள் ஒழித்து கட்ட தகளீவர் சபதம் ஏற்று கொண்டார், வாழ்த்துக்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X