அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும்: ராகுல் அறிவுரை

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (40)
Share
Advertisement
புதுடில்லி: பொதுமக்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 25.9 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என
Rahul, CovidVaccine, Everyone, Vaccinated, Request, Congress, MP, ராகுல், கோவிட், கொரோனா, தடுப்பூசி, அறிவுரை, காங்கிரஸ், ராகுல்

புதுடில்லி: பொதுமக்கள் அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் தற்போது 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் இதுவரை 25.9 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும், தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றன. இந்நிலையில், காங்., எம்.பி.,யும், முன்னாள் தலைவருமான ராகுலும் மக்களை தடுப்பூசி செலுத்திக்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.


latest tamil news


இது தொடர்பாக டுவிட்டரில் ராகுல் பதிவிட்டுள்ளதாவது: கோவிட் ஊரடங்குத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. எனினும் கோவிட் வைரஸ் பரவல் முழுவதுமாக விலகிவிடவில்லை. இதுபோன்ற அச்சுறுத்தலான சூழலில் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பு வழிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். கூடிய விரைவில் அனைவரும் தவறாமல் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-202111:59:42 IST Report Abuse
theruvasagan அப்ப சொன்னது நல்ல வாய். இப்ப சொல்றது நாற வாய் என்கிற வடிவேலு ஜோக் ஞாபகத்துக்கு வந்தால்.அதுக்கு நான் பொறுப்பு கிடையாது. ஆனா அதை இப்ப தலைகீழா மாத்தி பொருத்திப் பார்க்கவும். அப்பதான் ரசிக்க முடியும்.
Rate this:
Cancel
N V VENKAT - Chennai,இந்தியா
16-ஜூன்-202110:21:48 IST Report Abuse
N V VENKAT Tubelight இப்போதான் எரிய ஆரம்பித்தது போலும்
Rate this:
Cancel
Jit Onet - New York,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-202110:20:42 IST Report Abuse
Jit Onet இந்த ஞான சூன்யம் தானே நமது வாக்சீன "மோடி வாக்சீன், நம்ப மாட்டேன்' என்று சொல்லிய ஜென்மம்? பாவம், இந்த ராகுல் ஏன் இப்படி ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X