பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆண்டுகளில் 7 இலக்குகளை நிறைவேற்ற வேண்டும்: கலெக்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (43)
Share
Advertisement
சென்னை: ஏழு இலக்குகளை பத்தாண்டு காலத்தில் நிறைவேற்றுவதற்கு கலெக்டர்கள் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.சென்னை, தலைமை செயலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் மற்றும் துறை செயலர்கள், மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில்
சிறப்பான ஆட்சியை அளிக்க அரசுக்கு ஒத்துழைப்பு: கலெக்டர்களுக்கு ஸ்டாலின் அறிவுரை

சென்னை: ஏழு இலக்குகளை பத்தாண்டு காலத்தில் நிறைவேற்றுவதற்கு கலெக்டர்கள் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம் என முதல்வர் ஸ்டாலின் கூறி உள்ளார்.

சென்னை, தலைமை செயலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் மற்றும் துறை செயலர்கள், மூத்த அமைச்சர்கள் பங்கேற்றனர்.

இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: கல்வி, வேலைவாய்ப்பு, சமூக பொறுப்புகள் என அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க கலெக்டர்கள், பதவியை பயன்படுத்தி தங்களது கடமையை ஆற்ற வேண்டும்.
*வளரும் வாய்ப்புகள்- வளமான தமிழகம்
*மகசூல் பெருக்கம், மகிழும் விவசாயி
*குடிமக்கள் அனைவருக்கும் குறையாத தண்ணீர்
*அனைவருக்கும் உயர் தரக் கல்வி மற்றும் உயர்தர மருத்துவம்
*எழில்மிகு மாநகரங்களின் மாநிலம்
*உயர்தர ஊரக கட்டமைப்பு, உயர்ந்த வாழ்க்கை தரம்
*அனைவருக்கும் அனைத்துமான தமிழகம் ஆகிய ஏழு இலக்குகளை பத்தாண்டு காலத்தில் எட்டிட கலெக்டர்கள் ஒத்துழைப்பு அரசுக்கு அவசியம்.

பொது விநியோக திட்டத்தை முறையாக செயல்படுத்திட வேண்டும். அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் கிடைத்திடவும், போலி அட்டைகளை ஒழித்திடவும் வழங்கப்படும் உணவு பொருட்கள் சுத்தமானதாக தரமானதாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மக்கள் அளிக்கும் மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும், நீதிமன்றங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளை நடைமுறைப்படுத்திடவும், அரசின் இலக்குகளை தங்களது இலக்குகளாக கொள்ள வேண்டும்.


latest tamil news


நகர்ப்புற வளர்ச்சியும், ஊரக வளர்ச்சியும் தான் நாட்டின் வளர்ச்சிக்கான அடையாளங்கள். காலி பணியடங்களை தகுதியானவர்களை கொண்டு நிரப்பிட நடவடிக்கை எடுப்பதுடன், மாநில அரசும், மத்திய அரசும் ஒதுக்கும் நிதியை முறையாக செலவு செய்து திட்டங்களை நிறைவேற்றிட வேண்டும். அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோரோடு கலெக்டர்கள் இணைந்து பணியாற்றி, சிறப்பான ஆட்சியை மக்களுக்கு அளிக்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். தனது அரசு, உத்தரவு போடும் அரசு அல்ல, கலெக்டர்களின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் கேட்கும் அரசு. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றி வளம் நிறைந்த தமிழகத்தை உருவாக்குவோம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (43)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Karthik - Dindigul,இந்தியா
16-ஜூன்-202119:02:38 IST Report Abuse
Karthik 10 ஆண்டுகளுக்கு இவருக்கு நாற்காலி ஆசை இருக்கிறதை வெளிப்படியிருக்கிராரு. ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்புக் கொடுத்தாலே பல நல்ல வேலைகளும் முன்னேற்றங்களும் நாட்டில் ஏற்படும். இங்கே, ஆட்சியாளர்கள் அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பும் தருவதில்லை, அடிபணியவும் செய்ய வைக்கிறார்கள்.
Rate this:
Cancel
Thirumurugan - Kuala Lumpur,மலேஷியா
16-ஜூன்-202100:44:31 IST Report Abuse
Thirumurugan 10 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்ய தமிழக மக்கள் திமுகவை தேர்தெடுத்து உள்ளார்களா?
Rate this:
Cancel
Mohan - Thanjavur ,இந்தியா
15-ஜூன்-202123:23:27 IST Report Abuse
Mohan 10 ஆண்டு 7 இலக்கு. அதுக்கு இருக்கணுமே. Luck Luck.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X