லோக் ஜனசக்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வான் நீக்கம்

Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
பாட்னா: பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது சித்தப்பா பசுபதிகுமார் பஸ்வான் தலைமையில் கட்சி வந்தது.பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சியை 2000ம் ஆண்டு ராம்விலாஸ் பஸ்வான் துவக்கினார். மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் அவர் உடல்நலக்குறைவால்
Chirag Paswan, Removed, Lok Janshakti Party, Chief, Bihar, பீஹார், சிராக் பஸ்வான், லோக் ஜனசக்தி, தலைவர், நீக்கம்

பாட்னா: பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் பதவியிலிருந்து சிராக் பாஸ்வான் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து அவரது சித்தப்பா பசுபதிகுமார் பஸ்வான் தலைமையில் கட்சி வந்தது.

பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சியை 2000ம் ஆண்டு ராம்விலாஸ் பஸ்வான் துவக்கினார். மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து இக்கட்சி தலைவராக ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கட்சிக்கு லோக்சபாவில் சிராக் பஸ்வானுடன் சேர்த்து 6 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 5 எம்.பி.,க்கள் திடீரென சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர்.


latest tamil news


அதிருப்தி எம்.பி.,க்கள் சேர்ந்து ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரும், சிராக் பஸ்வானின் சித்தப்பாவுமான பசுபதிகுமார் பஸ்வானை, பார்லிமென்ட் குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். பின்னர், லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை சந்தித்து இந்த தகவலை தெரிவித்தனர். இந்நிலையில், இன்று (ஜூன் 15) லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வான் நீக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து பசுபதிகுமார் பஸ்வான் தலைமையின் கீழ் லோக் ஜனசக்தி கட்சி வந்தது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
16-ஜூன்-202100:29:07 IST Report Abuse
மதுரை விருமாண்டி நிதிஷின் பொருமலை பாருங்கள். “ The JD(U) won 43 seats (15.39 per cent of the vote share), RJD (75 seats and 23.11 per cent vote share) and the BJP that got 74 seats and 19.4 per cent of votes. We did not lose this election, we were tactically defeated by those with us and those against us. The LJP’s campaign, which could not have happened without a tacit understanding of the BJP, defeated 46 of our candidates,” a JD(U) leader said. 90 சீட் வெற்றியுடன் முதலிடத்தில் இருந்திருக்க வேண்டிய கட்சி மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது பீஜேபிகளின் துரோகம் ன்னு பொருமியிருக்கிறார்.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
16-ஜூன்-202100:24:02 IST Report Abuse
மதுரை விருமாண்டி அமீத் சா செய்த தந்திரம் இப்போ பூமராங் போல பீஜேபிகளை நோக்கி வந்து கொண்டிருக்கிறது. நிதிஷ் குமாரின் ஆட்டம் ஆரம்பம்.
Rate this:
Cancel
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
16-ஜூன்-202100:23:15 IST Report Abuse
மதுரை விருமாண்டி நிதிஷ் குமாரின் ஆட்டம். பீஜேபிகளுக்கு தனது பலத்தை காட்டுகிறார் நிதிஷ்.. தனக்கு ஆப்பு வைக்க ஆட்டம் போட்ட பீஜேபிகளுக்கு தான் யார் என்பதை காட்டுகிறார் போலும்.. அடுத்து பீகார் சட்டமன்றத்திலும் இது எதிரொலிக்கும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X