பிரசாந்த் கிஷோரின் நிறுவனத்துடன் ஒப்பந்தம்: 2026 வரை நீட்டித்தது திரிணமுல்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின், 'ஐபேக்' நிறுவனத்துடன், மேற்கு வங்கத்தில் ஆளும், திரிணமுல் காங்.,கின் ஒப்பந்தம், 2026ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் தமிழகத்தில் தி.மு.க., மற்றும் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல்
 பிரசாந்த் கிஷோர், ஒப்பந்தம், 2026 நீட்டிப்பு, திரிணமுல்

புதுடில்லி: பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின், 'ஐபேக்' நிறுவனத்துடன், மேற்கு வங்கத்தில் ஆளும், திரிணமுல் காங்.,கின் ஒப்பந்தம், 2026ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கு, சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது. இதில் தமிழகத்தில் தி.மு.க., மற்றும் மேற்கு வங்கத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்.,குக்கு, பிரசாந்த் கிஷோர் தேர்தல் வியூகங்களை வகுத்து தந்தார்.இந்த இரு கட்சிகளும் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளன.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோரின், ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை திரிணமுல் காங்., நீட்டித்துள்ளது. வரும், 2026ல் மேற்கு வங்க சட்டசபை தேர்தல் உட்பட பல தேர்தல்களில் கட்சிக்கு வியூகங்களை வகுத்து தருவதற்காக இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.


latest tamil newsவரும், 2024 லோக்சபா தேர்தலில், பா.ஜ.,வுக்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கவும், தேசிய அளவில் பெரும் தலைவராக தன்னை நிலைநிறுத்த மம்தா ஆர்வமாக உள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்தே, ஐபேக் நிறுவனத்துடனான ஒப்பந்தம், 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
16-ஜூன்-202112:16:16 IST Report Abuse
thamodaran chinnasamy இது மக்கள் நலனுக்காக என்று சொல்ல முடியாத ஒன்று . சுய லாபத்திற்க்காகவும் தன்னலத்திற்க்காகவுமே இந்த ஒப்பந்தம் .இப்படி ஒரு நிறுவனம் , வூரை ஏமாற்றிய வளர்கிறது . இக்கதை தேர்தல் ஆணையம் அறியாததா , ஆணையம் என்ன செய்கிறது , அவர்களுக்கே வெளிச்சம்.
Rate this:
Cancel
Marai Nayagan - Chennai,இந்தியா
16-ஜூன்-202111:15:21 IST Report Abuse
Marai Nayagan குடும்ப ஊழல் கட்சிகள் காசாசை செலவழித்தால் ஜெயித்து ஆட்சியைப் பிடித்து மீண்டும் மக்கள் பணத்தை கொள்ளை அடிக்க ஒரு கேடு கெட்ட மார்க்கெட்டிங் கம்பெனி. அதற்கு ஒரு தலைவன். இவன் அழிவு நெருக்கி விட்டது
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜூன்-202111:02:29 IST Report Abuse
Lion Drsekar மக்களுக்காக யாருமே இல்லை என்பது நிரூபணமாகிவிட்டது, தேர்தல் வரை சக்கர நாற்காலி, அடுத்து என்னவெல்லாம் நடக்கப்போகிறதோ? அவரவர்கள் செய்த சாதனைகள் எது என்று அவரவர்களுக்கே நினைவில்லை இல்லாத நிலையில் தரகர் ஒருவர் நாட்டை கூறு போட வந்திருப்பது பாராட்டுக்குரியது, வாழ்க சுதந்திரம் , வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X