பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜூன் 16, 1924மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில், 1924 ஜூன் 16ம் தேதி பிறந்தவர், மகாலிங்கம். 5வது வயதில் இருந்தே, நாடகங்களில் நடிக்கவும், பாடவும் செய்தார். 13வது வயதில், நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இவர் நடித்த, ஸ்ரீவள்ளி படம், பெரும் வெற்றி அடைந்து, 55 வாரங்கள் தியேட்டரில் ஓடியது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார்.உச்சத்தொனியில்

இதே நாளில் அன்று


ஜூன் 16, 1924



மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில், 1924 ஜூன் 16ம் தேதி பிறந்தவர், மகாலிங்கம். 5வது வயதில் இருந்தே, நாடகங்களில் நடிக்கவும், பாடவும் செய்தார். 13வது வயதில், நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இவர் நடித்த, ஸ்ரீவள்ளி படம், பெரும் வெற்றி அடைந்து, 55 வாரங்கள் தியேட்டரில் ஓடியது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார்.உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்றவர். 'செந்தமிழ் தேன்மொழியாள், ஆடைகட்டி வந்த நிலவோ, இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...' போன்ற பாடல்கள், இவரின் பெயரை பறைசாற்றும். பட தயாரிப்பில் இறங்கி, நஷ்டமடைந்தார்.
மீண்டும் நாடகங்களில் நடித்து, தன் திறமையை நிரூபித்தார். 'வள்ளி திருமணம், பவளக்கொடி' போன்ற நாடகங்கள், இவருக்கு பெரும் புகழை தந்தன. 1978 ஏப்., 21ம் தேதி தன், 52வது வயதில் காலமானார்.டி.ஆர்.மகாலிங்கம் பிறந்த தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
16-ஜூன்-202120:19:25 IST Report Abuse
RajanRajan திறமை மிக்க ஒரு கலைஞர் என்றென்றும் நினைவில் தவழும் இவர் பாடிய பாடல்கள். நினைத்தாலே மனதில் மலரும் மலர்கள்.
Rate this:
Cancel
karutthu - nainital,இந்தியா
16-ஜூன்-202117:58:47 IST Report Abuse
karutthu இவர் வறுமையில் இருந்தபோது மாலையிட்ட மங்கை படத்தில் கண்ணதாசன் இவரை வைத்து படம் எடுத்தார் இவரை எத்தனை பேர்கள் ஞாபகம் வைத்துள்ளனர் ???
Rate this:
Cancel
.Dr.A.Joseph - London,யுனைடெட் கிங்டம்
16-ஜூன்-202102:23:05 IST Report Abuse
.Dr.A.Joseph இவர் அந்த கால சூப்பர் ஸ்டார் .சூப்பர் ஸ்டார் என்பது காலத்துக்கு காலம் மாறுபடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X