இதே நாளில் அன்று| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இதே நாளில் அன்று

Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (3)
Share
ஜூன் 16, 1924மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில், 1924 ஜூன் 16ம் தேதி பிறந்தவர், மகாலிங்கம். 5வது வயதில் இருந்தே, நாடகங்களில் நடிக்கவும், பாடவும் செய்தார். 13வது வயதில், நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இவர் நடித்த, ஸ்ரீவள்ளி படம், பெரும் வெற்றி அடைந்து, 55 வாரங்கள் தியேட்டரில் ஓடியது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார்.உச்சத்தொனியில்

இதே நாளில் அன்று


ஜூன் 16, 1924



மதுரை மாவட்டம், சோழவந்தானை அடுத்துள்ள தென்கரை என்ற ஊரில், 1924 ஜூன் 16ம் தேதி பிறந்தவர், மகாலிங்கம். 5வது வயதில் இருந்தே, நாடகங்களில் நடிக்கவும், பாடவும் செய்தார். 13வது வயதில், நந்தகுமார் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார்.இவர் நடித்த, ஸ்ரீவள்ளி படம், பெரும் வெற்றி அடைந்து, 55 வாரங்கள் தியேட்டரில் ஓடியது. தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார்.உச்சத்தொனியில் பாடும் திறமை பெற்றவர். 'செந்தமிழ் தேன்மொழியாள், ஆடைகட்டி வந்த நிலவோ, இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...' போன்ற பாடல்கள், இவரின் பெயரை பறைசாற்றும். பட தயாரிப்பில் இறங்கி, நஷ்டமடைந்தார்.
மீண்டும் நாடகங்களில் நடித்து, தன் திறமையை நிரூபித்தார். 'வள்ளி திருமணம், பவளக்கொடி' போன்ற நாடகங்கள், இவருக்கு பெரும் புகழை தந்தன. 1978 ஏப்., 21ம் தேதி தன், 52வது வயதில் காலமானார்.டி.ஆர்.மகாலிங்கம் பிறந்த தினம் இன்று!

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X