சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

மரபுகள் மாற்றக் கூடியவை அல்ல!

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
தி.மு.க., அரசு பதவியேற்றதும், ஹிந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் மனதில் சிறிது கலக்கம் தோன்றியது. ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்ற சேகர்பாபு, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றதும், கோவில் நிலங்கள் பற்றிய தரவுகள் கணினியில் தரவேற்றம் செய்யப்படும் என்றதும் அந்த பயம்கொஞ்சம் நீங்க ஆரம்பித்தது.ஆனால்,
ஹிந்து மதம், திமுக, கோவில்

தி.மு.க., அரசு பதவியேற்றதும், ஹிந்து மதத்தின் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர்கள் மனதில் சிறிது கலக்கம் தோன்றியது. ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக பதவியேற்ற சேகர்பாபு, ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றதும், கோவில் நிலங்கள் பற்றிய தரவுகள் கணினியில் தரவேற்றம் செய்யப்படும் என்றதும் அந்த பயம்கொஞ்சம் நீங்க ஆரம்பித்தது.

ஆனால், இவர் சமீபத்தில் வெளியிட்டிருக்கும் அறிவிப்புகள், ஹிந்துக்கள் பயந்தது போல நடந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.பெண்களும் பயிற்சி பெற்று, அர்ச்சகராக பணி புரியலாம் என்று அவர் அறிவித்துள்ளார். கிராம உதவியாளரில் ஆரம்பித்து, தலைமை செயலர் வரை பெண்கள் பதவியில் அமர்ந்து திறம்பட பணிபுரிந்து வருகின்றனர். 'பெண்கள் எல்லாவற்றிலும் முன்னேறிக் கொண்டிருக்க பெண்களை அர்ச்சகராக்கினால் என்ன தப்பு...' என, பெண்ணியம் பேசும் போராளிகள் கேட்கலாம்.ஹிந்து மதம் நிச்சயம் பெண்களுக்கு எதிரான மதம் அல்ல. அராஜகம் செய்யும் அசுரர்களை அழித்தது பெண் தெய்வங்கள் தான். கடவுளை யார் வேண்டுமானாலும் வழிபடலாம். ஆனால், அதை பூஜிக்க அதற்கென தயாரான ஒருவரால் தான் முடியும்.


துவேஷம்


ஒரு சாதாரணமாக எம்.பி.பி.எஸ்., மட்டும் படித்த டாக்டர் எப்படி சிக்கலான மூளை ஆப்பரேஷனை செய்ய முடியாதோ, அதே மாதிரி அர்ச்சகருக்கு படித்ததால் மட்டும் ஒருவர் இறை சக்தியை பூஜிக்க முடியாது. அர்ச்சகர் என்பது எழுத்தர் பணிப் போன்ற சாதாரண பணி கிடையாது. வெறும் பயிற்சியை வைத்து, பூஜை செய்ய முடியாது. ஹிந்து மதத்தில் மட்டுமல்ல உலகின் பெரிய மதங்களாக கிறிஸ்துவ மதத்திலும், போப் போன்ற பதவிகளில் பெண்கள் அமர்ந்தது கிடையாது.

இஸ்லாமிய மதத்திலும் மதகுருக்களாக பெண்கள் இருப்பது இல்லை. புத்த மதத்திலும் புத்த பிட்சிணிகளாக பெண்கள் இருந்தாலும், தலாய்லாமா போன்ற மதத்தலைவர்களாக பெண்களை நியமிப்பது இல்லை. ஏனென்றால் மதம் என்பது அவரவர்கள்நம்பிக்கையை சார்ந்தது.இவை எல்லாவற்றையும் விட அர்ச்சகராக வேண்டும் என்று முன் வரும் பெண்கள் நிச்சயம் கடவுளிடம் பக்தி கொண்ட பெண்களாக இருக்க மாட்டார்கள். எப்படி, சபரிமலை கோவிலுக்கு அதன் புனிதத்தை கெடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வீம்புக்காக கடவுள் மீது நம்பிக்கை இல்லாத பெண்கள் போனார்களோ அதுபோல, ஏதோ பணிக்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் வருகின்றனர்களாகத் தான் இருப்பர்.

அப்படி எந்த பெண்ணாவது இதுபோல, தானும் சாதிக்க வேண்டும் என நினைத்தால் அதற்கு எத்தனையோ துறைகள் இருக்கின்றன. கல்பனா சாவ்லா மாதிரி விண்வெளியில் சாதிக்கட்டும். ராணுவத்தில் ஆண்களுக்கு போட்டியாக எதிரியை வெல்ல கிளம்பட்டும். இரண்டாவது விவகாரம், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பது. கிராமங்களில் எதுவும் தெரியாமல், எல்லாம் தெரிந்த மாதிரி பேசும் நபர்களை, 'ஆலிலை புளிய இலைப் போல வேலியில் படர்ந்திருக்கும்னு இவன் சொல்லுவான்'னு கிண்டல் பண்ணுவர்.

அதாவது அந்த நபருக்கு ஆலிலையும் தெரியாது; புளிய இலையும் தெரியாது. அது மாதிரி அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என அறிக்கை விடுபவர்களுக்கு, ஆகம விதிகள் என்றால் என்னவென்றோ, அர்ச்சகர் பணி என்னவென்றோ தெரியாது.அர்ச்சகர் என்பவர் ஏதோ பூக்கள் மட்டும் துாவி அர்ச்சனை பண்ணக்கூடியவர் அல்ல. மேலும் அர்ச்சகர் என்றால் அவர்கள், பிராமணர்கள் மட்டும் தான் என்ற எண்ணம் இருப்பதால் ஏற்பட்ட விளைவு தான் இது. வழக்கமான பிராமண துவேஷத்தின் காரணமாக இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.


அவசியம்


முதலில் எல்லா கோவில்களிலும் அர்ச்சகர்களாக பிராமணர்கள் இருப்பதில்லை என்பதை புரிந்து கொள்ளட்டும். சில கோவில்களில் சிவாச்சாரியர்கள் பூஜை செய்வர். சிதம்பரம் மாதிரியான கோவில்களில் தீட்சிதரகள் பூஜை செய்வர். மேல்மலையனுாரில் பர்வத ராஜகுலத்தினர் தான் பூஜை செய்ய முடியும்.நாடார்கள், வெள்ளாளர்கள், தேவர்கள் என வெவ்வெறு குலத்தினர் அர்ச்சகர்களாக இருக்கும் கோவில்கள் தமிழகத்தில் உள்ளன. அதாவது, ஆகம விதிப்படி கட்டப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டு, அதன்படி பூஜை செய்யப்படும் கோவில்களில் அதற்கான தகுதியைப் பெற்ற நபர்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும்.அவர்கள் பிராமணர்களாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இந்த மாதிரி கோவில்களில் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும், அவர் கருவறைக்கு வெளியே தான் நிற்க வேண்டும்; நுழைய முடியாது.

உள்ளே நுழைவது ஆகம விதியை மீறுவது ஆகும். ஆகம விதிகள் பின்பற்றாமல் கட்டப்படும் கோவில்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது. அப்படிப்பட்ட கோவில்களிலும் அந்தந்த கோவில்களுக்கு பாத்தியப்பட்ட நபர்கள் தான் அர்ச்சகராக இருப்பர்.பிராமணர் பிரிவில் உள்ளவர்களில் நிறைய பேருக்கு கிராமங்களில் அம்மன்கள் குல தெய்வமாக இருக்கின்றன. அங்கே அனைத்து பிரிவினரும் அர்ச்சகராக இருக்கின்றனர். தலித் பிரிவைச் சேர்ந்தவர்களும் அர்ச்சகர்களாக இருப்பது உண்டு.அங்கே செல்லும் பிராமணர், 'நானும் ஒரு கோவிலில் அர்ச்சகராக இருக்கிறேன். அதனால் நான் கருவறைக்குள் வருவேன்' என்று நுழைய முடியாது.

அங்கு அவர் ஒரு பக்தர் அவ்வளவு தான்.இன்னும் சொல்லப் போனால் ஹிந்து மக்கள் வணங்கும் ராமர், கிருஷ்ணர், சிவன், பெருமாள், அம்மன், அனுமார் என எந்த தெய்வமும் பிராமண சமூகத்தை இனத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது.கோவில்களில் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்கள் என்ற எண்ணத்துடன் எதையும் புரிந்து கொள்ளாமல், பார்ப்பன வெறுப்பு என்ற கண்ணாடியை அணிந்தபடி, இ.என்.டி., டாக்டரை கண்ணுக்கு ஆப்பரேஷன் பண்ண சொல்வது போல, யார் வேண்டுமானாலும் எந்த கோவிலுக்கும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்கின்றனர்.


இரட்டை கிளவி


அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்று சொல்லிக் கொண்டிருப்பவர்கள், கடவுளின் மீது பக்தியோ அல்லது ஹிந்து மதத்தின் பெருமையைப் பற்றியோ தெரிந்தவர்கள் அல்ல. இன்னும் சொல்லப் போனால், கோவிலில் கால் எடுத்து வைக்கக் கூட விருப்பம் இல்லாதவர்கள்.யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்று ஆரம்பிப்பர். பின், 'இந்த மார்டன் உலகத்தில் அர்ச்சகர்கள் எதற்கு வேட்டி கட்ட வேண்டும்; மார்பில் துணி இல்லாமல் இருக்க வேண்டும்... பேன்ட், ஷர்ட் போட்டால் நல்லது தானே' என்பர். பின், 'கோவிலில் எதற்கு சர்க்கரை பொங்கல் கொடுக்க வேண்டும்' என்று ஆரம்பித்து, பிரியாணியை பிரசாதமாக கொடுக்கச் சொல்வர்.

ஒரு நாட்டை சிதைக்க வேண்டு மானால், முதலில் அவர்கள் கலாசாரத்தை அழிக்க வேண்டும். இங்கு மதமும் கலாசாரமும் பிரிக்க முடியாத இரட்டை கிளவி. அதனால் தான் அதில் விபரீத பரீட்சை மேற்கொள்ள வேண்டாம். அடுத்தது கோவில்களில் பூஜை செய்யும் போது சமஸ்கிருதம் பயன்படுத்தக் கூடாது; தமிழில் தான் அர்ச்சனை செய்ய வேண்டும் என்று கூறப்படுகிறது. பூஜையில் உச்சரிக்கப்படும் சமஸ்கிருத மந்திரங்கள் எல்லாம், உச்சரிப்பின் அடிப்படையில் அதிர்வலைகளை ஏற்படுத்தக் கூடியவை.

அவற்றின் உச்சரிப்பு மாறும் போது பொருளே மாறி விடும். கடவுளை வேண்டுவதற்கு மொழி வேண்டுமா என்றால், கடவுளை வேண்ட மொழி வேண்டாம். மனதிற்குள் நினைத்தாலே போதும். ஆனால் ஆகம விதிகளின் படி கட்டப்பட்ட கோவிலில் நடக்கும் பூஜைகளுக்கு, கண்டிப்பாக அதற்கென உரிய மந்திரங்களை சொல்ல வேண்டும்.

ஒவ்வொரு மதத்திற்கும் ஒவ்வொரு விதமான வழிபாடு முறைகள் உள்ளன. மசூதிகளில் உள்ள வழிபாடுகள் அரேபிய மொழியில் இருப்பதை காணலாம். கிறிஸ்துவ ஆலயங்களில் லத்தீன் மொழியில் உள்ளது.எல்லாவற்றையும் விட கடவுள் நம்பிக்கையே இல்லாதவர்கள் கடவுள் வழிபாட்டில் தலையிடுவதற்கு காரணம் என்ன... எந்த மொழியில் வழிபாடு நடத்தினால் அவர்களுக்கு என்ன... தமிழை வளர்ப்பதற்காக தமிழில் வழிபாடு வேண்டும் என சப்பைக்கட்டு கட்டுபவர்களுக்கு, தமிழை வளர்க்கஎத்தனையோ வழிகள் இருக்கிறதே.

முதலில் கோவில்களில் தேவராம், திருவாசகம் வகுப்புகளை ஆரம்பிக்கட்டும். அந்தப் பகுதியில் உள்ள ஹிந்து மக்கள் எல்லாரும் அந்த வகுப்பில் பங்கேற்க வேண்டும் என்று சொல்லட்டும்.தமிழில் அர்ச்சனை பண்ண வேண்டும் என்று கூப்பாடு போடும் அரை வேக்காடுகள் எல்லாவற்றையும், முழுக்க தமிழில் மாற்ற முடியாது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இன்று நாம் வழக்கில் பயன்படும் எண்களில் பல அரேபிய எண்கள். தமிழ் படுத்துகிறேன் என்று அந்த எண்களை தமிழில் எழுத முடியுமா?


தாத்பரியம்


அறிவியல் பெயர்கள், விஞ்ஞானம் மற்றும் பொறியியலில் உள்ள தொழில் நுட்ப பெயர்கள், கணிதத்தில் உள்ள 'அல்ஜிப்ரா' விதிகள் என எல்லாமே, பிற மொழிகளில் தான் உள்ளன. இவற்றை எல்லாம் முழுக்க, தமிழுக்கு மாற்ற முடியுமா? அவை எல்லாம் அதற்குரிய மொழியில் இருந்தால் தான் படிக்க முடியும். அது போலத் தான் கோவிலில் பூஜையில் பயன்படுத்தும் சமஸ்கிருதமும். பிறநாட்டு மொழியை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு, நம் நாட்டு மொழியான சமஸ்கிருதத்தின் மீது ஏன் இந்த வெறுப்பு?ஒரு வேளை பூஜைக்கு கூட வழியில்லாமல், எத்தனையோ கோவில்கள் விளக்கேற்றாமல் இருண்டு, பராமரிப்பு இல்லாமல் பாழடைந்து கொண்டிருக்கின்றன.

முதலில் அவற்றை சரிபண்ணட்டும்.எல்லாவற்றிற்கும் மேலே இது மதசார்பற்ற நாடு. எந்த மதங்களுக்கும் சார்பாகவோ, எதிராகவோ இருக்கக் கூடாத நாடு. ஆனால், அதன் தாத்பர்யத்தை புரிந்து கொள்ளாமல், ஹிந்து மக்களுக்கு எதிராக ஏதாவது செய்வது தான், மதசார்பற்ற தன்மை என இந்த அரசு எண்ணி விட்டதோ என்ற கேள்வி எழுகிறது. ஹிந்து மதத்தை எவ்வளவு தான் இழிவுபடுத்திய நபர்கள் தலைவர்களாக இருக்கும்பட்சத்தில், கோவிலுக்கு வந்தால் அவர்களுக்கு பூரண கும்ப மரியாதை கொடுத்து வரவேற்பது இங்குள்ள வழக்கமாக போய் விட்டது. இந்த மரியாதை தொடர்வது ஆட்சியாளர்களின் கையில் தான் இருக்கிறது!

- செல்வா, சமூக ஆர்வலர்
தொடர்புக்கு: இ - மெயில்: kumar.selva3470@gmail.com

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkat - Fremont,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-202120:47:37 IST Report Abuse
Venkat செல்வா அவர்களுக்கு , நெத்தியடி . தொடர்ந்து எழுதவும் . கோவிலை விட்டு அறநிலைய துறையை விரட்டும்வரை நீங்கள் ஓயக்கூடாது .
Rate this:
Cancel
Tamilan - Trichy,இந்தியா
16-ஜூன்-202120:08:25 IST Report Abuse
Tamilan மாற்று மதத்தான் இங்க வந்து சங்கு ஊதி காட்டுவான்.
Rate this:
Cancel
T.sthivinayagam - agartala,இந்தியா
16-ஜூன்-202119:52:31 IST Report Abuse
T.sthivinayagam மரபு என்பது ஒரு சிலருக்காக அல்ல பெரும்பாலான இந்துக்களின் பழக்க வழக்கங்கள் மதிக்க படவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X