அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
சென்னை :'கொரோனா தொற்று அல்லாத, பிற நோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக காத்திருப்போருக்கு, அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், அரசு
கொரோனா ,பிற நோயாளிகள், சிகிச்சை, ஓ.பி.எஸ்.,

சென்னை :'கொரோனா தொற்று அல்லாத, பிற நோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக காத்திருப்போருக்கு, அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், அரசு மருத்துவமனைகளில், அந்த நோய்களுக்கான சிகிச்சை பெற மிகுந்தசிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவாக, அரசு மருத்துவமனைகளில், பிற நோயாளிகளுக்கான படுக்கைகள், கொரோனா நோயாளிகளுக்காகமாற்றப்பட்டுள்ளன.




சிறுநீரக பாதிப்பு



இதனால் அறுவை சிகிச்சைக்காக, பிற நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை போன்றவற்றிலும், இதுபோன்ற நிலை உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதோருக்கு, தனி வளாகம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அங்கு சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதய நோய், சிறுநீரக பாதிப்பு உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர், உள் நோயாளியாக அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு இன்னமும் சிறிது காலமாகும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக, செய்திகள் வருகின்றன.


வழி வகை



இதனால், கொரோனா தொற்று அல்லாதோரின் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா தொற்று அல்லாத, பிற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும். முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
16-ஜூன்-202112:45:28 IST Report Abuse
Dhurvesh நீங்க ரெண்டு பேரும் ஒன்னா வேல பார்த்திருந்தீங்கன்னா இந்த நெலம வந்திருக்குமா ?
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
16-ஜூன்-202112:06:14 IST Report Abuse
Srinivas.... அடித்து வாய்த்த பல ஆயிரம் கோடி கையில இருக்கே...அதை என்ன செய்யப்போறே? மவனோட சேர்ந்து ஏதாச்சும் தொழில் ஆரம்பிச்சு பாக்கியிருக்கிற காலத்தை தள்ளு. அடிபொடி உன்னை தனிமைப்படுத்தி ஓரம்கட்டிட்டான்....இனிமே நீ தனியா இருந்து ஒன்னும் செய்யமுயடியாது.....
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
16-ஜூன்-202112:04:22 IST Report Abuse
Srinivas.... ஓபிசு...அடிப்பொடி உன்னைய ஓரம்கட்டிவிட்டதாக அடிமைகள் சொல்றானுங்களே உண்மையா? தனியா நின்னு ஆவர்த்தனம் செய்யப்போறியா? இல்லை அதர்மயுத்தம் செய்யப்போறியா? அடிப்பொடி எல்லாத்துக்கும் துணிஞ்ச ஆள். எந்த கீழ்மட்டத்துக்கும் போகக்கூடியவன். நீ அதற்கெல்லாம் சரிப்பட்டு வருவியா? ஆயாம்மா காலில் போயி விழுந்தது. அவனுங்க பின்னாலேயே வருவானுங்க.....ஆயம்மாதான் அடிமைக்கும்பலை அடக்கி வைத்து நிர்வாகம் செய்யபோகுது....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X