பிற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் | Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிற நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (4)
Share
சென்னை :'கொரோனா தொற்று அல்லாத, பிற நோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக காத்திருப்போருக்கு, அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளார்.அவரது அறிக்கை:கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், அரசு
கொரோனா ,பிற நோயாளிகள், சிகிச்சை, ஓ.பி.எஸ்.,

சென்னை :'கொரோனா தொற்று அல்லாத, பிற நோய்களால் பாதிக்கப்பட்டு, சிகிச்சைக்காக காத்திருப்போருக்கு, அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை அளிக்க, விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்து உள்ளார்.

அவரது அறிக்கை:கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், கொரோனா அல்லாத பிற நோய்களால் பாதிக்கப்பட்ட ஏழை மக்கள், அரசு மருத்துவமனைகளில், அந்த நோய்களுக்கான சிகிச்சை பெற மிகுந்தசிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. கடந்த சில மாதங்களாக, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவாக, அரசு மருத்துவமனைகளில், பிற நோயாளிகளுக்கான படுக்கைகள், கொரோனா நோயாளிகளுக்காகமாற்றப்பட்டுள்ளன.




சிறுநீரக பாதிப்பு



இதனால் அறுவை சிகிச்சைக்காக, பிற நோயாளிகள் நீண்ட காலம் காத்திருக்கும் சூழ்நிலை உருவாகி உள்ளது. சென்னை ராஜிவ் காந்தி மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை போன்றவற்றிலும், இதுபோன்ற நிலை உள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படாதோருக்கு, தனி வளாகம் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அங்கு சாலை விபத்தில் காயமடைந்தவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு மட்டுமே சிகிச்சை அளிக்கப்படுகிறது.இதய நோய், சிறுநீரக பாதிப்பு உட்பட பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோர், டயாலிசிஸ் சிகிச்சை தேவைப்படுவோர், உள் நோயாளியாக அனுமதிக்கப்படுவதில்லை. அதற்கு இன்னமும் சிறிது காலமாகும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்ததாக, செய்திகள் வருகின்றன.


வழி வகை



இதனால், கொரோனா தொற்று அல்லாதோரின் உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே, கொரோனா தொற்று அல்லாத, பிற நோய்களால் பாதிக்கப்பட்டோருக்கும், அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வழிவகை செய்ய வேண்டும். முதல்வர் இதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு ஓ.பி.எஸ்., தெரிவித்துள்ளார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X