அ.தி.மு.க.,வை வழிநடத்த ஓ.பி.எஸ்., சசிகலா ஆடியோ வெளியீடு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அ.தி.மு.க.,வை வழிநடத்த ஓ.பி.எஸ்., சசிகலா 'ஆடியோ' வெளியீடு

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (34)
Share
'அ.தி.மு.க.,வை வழிநடத்த, ஓ.பி.எஸ்.,சுடன் நீங்கள் இணைய வேண்டும்' என்று, சசிகலாவுக்கு, அக்கட்சி தொண்டர் ஒருவர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற சசிகலா, 'ஓ.பி.எஸ்., மட்டும் ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், அவரையே முதல்வராக்கி இருப்பேன்' என்று பதிலளித்ததுடன், இ.பி.எஸ்., மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். 'கட்சியை காப்பாற்ற விரைவில் வருவேன்' என உறுதி அளித்துள்ள சசிகலா, அது
அ.தி.மு.க.,  ஓ.பி.எஸ்., சசிகலா,  ஆடியோ

'அ.தி.மு.க.,வை வழிநடத்த, ஓ.பி.எஸ்.,சுடன் நீங்கள் இணைய வேண்டும்' என்று, சசிகலாவுக்கு, அக்கட்சி தொண்டர் ஒருவர் அழைப்பு விடுத்தார். அதை ஏற்ற சசிகலா, 'ஓ.பி.எஸ்., மட்டும் ராஜினாமா செய்யாமல் இருந்திருந்தால், அவரையே முதல்வராக்கி இருப்பேன்' என்று பதிலளித்ததுடன், இ.பி.எஸ்., மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.

'கட்சியை காப்பாற்ற விரைவில் வருவேன்' என உறுதி அளித்துள்ள சசிகலா, அது தொடர்பான 'ஆடியோ' பதிவையும் வெளியிட்டு, அ.தி.மு.க., வட்டாரத்தையே அதிர வைத்துள்ளார். அ.தி.மு.க.வில் இ.பி.எஸ்., தரப்பினர், ஓ.பி.எஸ்.,சை ஓரம் கட்டி வருகின்றனர். இதன் காரணமாக அவரும், அவரது ஆதரவாளர்களும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.


கடும் அதிர்ச்சிஇந்தச் சூழ்நிலையில் கட்சிக்குள் நுழைந்து, தலைமைப் பதவிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை, சசிகலா துவக்கி உள்ளார். கட்சி நிர்வாகிகளுடன் மொபைல் போனில் பேசி, ஆடியோக்களை வெளியிட்டார்.அதைத் தொடர்ந்து, சசிகலாவுடன் பேசிய நிர்வாகிகள், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டனர். அ.தி.மு.க.,வை விமர்சித்த பா.ம.க., இளைஞர் அணித் தலைவர் அன்புமணிக்கு, பதிலடி கொடுத்த புகழேந்தியும், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். இது, கட்சியினரிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதை சாதகமாக பயன்படுத்திக் கொள்ள சசிகலா முடிவு செய்துள்ளார். நேற்று மட்டும், கட்சியினர் பலரிடம் நிர்வாகிகள் நீக்கம் குறித்து பேசியதோடு, அடுத்தடுத்து ஆடியோக்களை வெளியிட்டார். இது, இ.பி.எஸ்., தரப்பை கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.


வருத்தம்சசிகலாவிடம், தேனியைச் சேர்ந்த சிவநேசன் பேசுகையில், 'நீங்கள், ஓ.பி.எஸ்., உடன் இணைந்து, கட்சியை நடத்த வேண்டும்' என, தெரிவித்தார். அதற்கு பதில் அளித்து, சசிகலா கூறியதாவது:நலமாக இருக்கிறேன். என்னை பொறுத்தவரை கட்சி நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். என் பக்கம் ஒன்றுமில்லை. நல்லது நடக்க வேண்டும்; கட்சி நன்றாக இருக்க வேண்டும். பேசுகிற தொண்டர்கள் எல்லாரும் வருத்தப்படுகின்றனர். நீங்கள் வந்தால் தான் கட்சி சரியாக இருக்கும் என்கின்றனர்; கஷ்டமாக உள்ளது.


பொதுவான கட்சிஎதிர்க்கட்சியாக இருக்கும் போது, கட்சியை எப்படி கொண்டு போக வேண்டும் என்பது கூட தெரியவில்லை. கட்சியில் இருக்கிறவர்களை நீக்கிக் கொண்டே போனால் எப்படி? அந்த சமயத்தில், ஓ.பி.எஸ்., போய் விட்டார். இல்லையென்றால், அவரை தான் உட்கார வைத்திருப்பேன்.'ரொம்ப ஜாதி ரீதியாக போய்க்கிட்டு இருக்காங்க' என, அனைத்து பகுதிகளில் இருந்தும் பேசுகிறவர்கள் கூறுகின்றனர். ஈரோடு, சூலுாரில் இருந்து பேசியவர்கள் கூட வருத்தப்பட்டனர். அனைவரும் முதல் புகாராக இதைக்கூறி, 'நீங்கள் வந்து கட்சியை காப்பாற்ற வேண்டும்' என்கின்றனர்.

இது, பொதுவான கட்சி. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலத்தில், பொதுவான கட்சியாக இருந்ததை, இந்த அளவுக்கு கொண்டு போய் விட்டனரே என்று தான் வருத்தம். இதே நிலை தொடர்ந்தால், என்னவாகும் என்பது, எல்லாருக்கும் தெரியும். ஆட்சி மீண்டும் வந்திருக்கும். அதற்கு, அவர்கள் தரப்பில் ஒத்துழைப்பு இல்லை. என் பக்கம் எதுவும் கூற முடியாது. அனைவரும் ஒன்று சேர்ந்து இருந்தால் தான், கட்சியை நன்றாக கொண்டு செல்ல முடியும். அதுவே இல்லை என்றால் எப்படி?
இதை நினைத்து தான் தொண்டர்கள் கவலைப்படுகின்றனர். அவர்களுக்கு தாயாக, நான் என்ன சொல்ல முடியும்? நான் அவர்களை கட்டுப்படுத்தி வருகிறேன். அவர்கள் அனைவரும் நொந்து போய் விட்டனர். யார் போன் செய்தாலும் வருத்தப்படுகின்றனர்.

அனைத்து ஜாதியினரும், இதை பேசுகின்றனர். ஜெ., கூறியபடி 100 ஆண்டுகள் நம் ஆட்சி நடக்கும் என்பதை நிலைநாட்டி காண்பிக்க வேண்டும். சிரமப்பட்டு வளர்த்த கட்சி, கண்முன் வீணாவதை பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அவர்கள் வெற்றி பெற்று காட்டுகிறேன் எனக் கூறியதால், ஒதுங்கி இருந்தேன். தற்போது, தொண்டர்கள் மனக்குமுறலோடு இருக்கும் போது, நான் எப்படி பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியும்; எனவே, சந்திக்க வருகிறேன் என தெரிவித்தேன்.

அவர்களை கட்சியிலிருந்து நீக்கியதால், எல்லாரும் இதுகுறித்து பேசுகின்றனர். ஓரிருவர் சுய நலத்திற்காக, தொண்டர்களை பலிகடாக்குவதா; இது, கட்சி நடத்துகிறவர்களுக்கு அழகா; தொண்டர்கள் கட்சிக்கு விசுவாசமாக உழைத்தது தப்பா?என் முதுகில் குத்தி குத்தி, முதுகில் குத்த இடமே இல்லை. அந்த அளவுக்கு செய்து விட்டனர். இப்போது, தொண்டர்களையும் செய்யும்போது, எப்படி பார்த்துக் கொண்டிருக்க முடியும்; கஷ்டப்பட்ட காலத்தில், கட்சியை நிமிர்த்தி கொண்டு வர, ஜெயலலிதா எவ்வளவு பாடுபட்டார்; அவருடன் நானும் எவ்வளவு பாடுபட்டேன். இப்போது, வேடிக்கை பார்த்து கொண்டிருக்க முடியாது.

தொண்டர்கள் நினைப்பதை செய்து காட்டுவேன்.எனக்கு என்று எதுவும் இல்லை; தொண்டர்கள் தான். அவர்களோடு கடைசி வரை இருந்துவிட்டு போகிறேன். தற்போது, தொண்டர்கள் பேச்சை கேட்டு, மிகுந்த வருத்தத்தில் உள்ளேன்.அவர்கள், 'என்னை சேர்த்துக் கொள்ள முடியாது. தேர்தலில், நாங்களே வந்து காட்டுவோம்' என்றனர். சரி என்று, ஒதுங்கி இருந்தேன். நான் அப்படி கூறவில்லை. கட்சியை காப்பாற்ற, நான் உறுதியாக வருவேன்; வந்தே தீருவேன். எனக்கு அடிமட்ட தொண்டர்கள் தான் முக்கியம். அதற்கான நேரம் வந்து விட்டது. நிச்சயம் நல்லது நடக்கும். கவலைப்பட வேண்டாம். ஊரடங்கு காலம் முடிந்ததும், எல்லாரையும் சந்திக்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X