பொது செய்தி

இந்தியா

20 வீரர்களின் உயிர் தியாகத்தை மறக்க முடியாது

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதன் முதலாண்டு நினைவு தினம்,நேற்று அனுசரிக்கப்பட்டது. 'இந்த தாக்குதலில் சீனாவுக்கு எதிராக தைரியமாக போராடி, எல்லையைபாதுகாப்பதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த 20 வீரர்களை நாட்டு மக்களால் மறக்க முடியாது' என,இந்திய ராணுவம் சார்பில் உருக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையில் உள்ள கல்வான்
20 வீரர்கள், உயிர் தியாகம் , உருக்கம்

புதுடில்லி :லடாக் எல்லையில் சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியதன் முதலாண்டு நினைவு தினம்,நேற்று அனுசரிக்கப்பட்டது. 'இந்த தாக்குதலில் சீனாவுக்கு எதிராக தைரியமாக போராடி, எல்லையைபாதுகாப்பதற்காக தங்கள் உயிரை தியாகம் செய்த 20 வீரர்களை நாட்டு மக்களால் மறக்க முடியாது' என,இந்திய ராணுவம் சார்பில் உருக்கமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில், கடந்த ஆண்டு ஜூன் 14ல் சீன ராணுவத்தினர் அத்துமீறி தாக்குதல் நடத்தினர். இதற்கு நம் ராணுவ வீரர்கள் சரியான பதிலடி கொடுத்தனர். இதில், நம் வீரர்கள் 20 பேர் உயிர் தியாகம் செய்தனர். சீன தரப்பில் 43க்கும் அதிகமானோர் இறந்தனர். இதை முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த சீனா, பின் தங்கள் வீரர்கள் இறந்ததை ஒப்புக் கொண்டது.


பதற்றம்



இந்த தாக்குதலை தொடர்ந்து, லடாக் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இரு நாடுகளும் படைகளை குவித்தன.பதற்றத்தை குறைக்க, இந்திய - சீன ராணுவ கமாண்டர்கள் அளவில் பல சுற்று பேச்சு நடந்தது. இதில் தீர்வு ஏற்பட்டதையடுத்து, லடாக் எல்லையிலிருந்து இரு நாடுகளும் படைகளை திரும்ப பெற்றன.

எனினும், கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இருந்து படைகளை திரும்ப பெறாமல், சீனா முரண்டு பிடிக்கிறது. இதனால் அப்பகுதியில் நம் வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். 'படைகளை சீனா முழுமையாக திரும்ப பெற்றால் தான், லடாக் எல்லையில் அமைதி ஏற்படும்' என, இந்தியா தொடர்ந்து தெரிவித்து வருகிறது. இந்நிலையில், லடாக் தாக்குதலின் முதலாண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. லடாக் மோதலில் வீரமரணமடைந்த வீரர்களுக்கு, ராணுவம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில், லடாக் எல்லையில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்துாண் பகுதியில், ராணுவத்தின் 'பயர் அண்டு ப்யூரி' பிரிவின் தளபதி ஆகாஷ் கவுசிக் தலைமையில், ராணுவ அதிகாரிகள் மற்றும் வீரர்கள் அஞ்சலி செலுத்தினர்.


முதலாண்டு நினைவு தினம்



இதையொட்டி, இந்திய ராணுவம் சார்பில் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவுகளில் கூறப்பட்டுள்ளதாவது: லடாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலின் முதலாண்டு நினைவு தினத்தை, நாடு இன்று அனுசரிக்கிறது. சீன ராணுவத்தை எதிர்த்து தைரியமாக போராடியதில் 20 வீரர்கள் செய்த உயிர் தியாகத்தை, நாட்டு மக்களால் ஒரு போதும் மறக்க முடியாது.
எல்லையை பாதுகாக்க, அவர்கள் செய்த தியாகம் மதிப்பு மிக்கது. அந்த வீரர்களுக்கு, தலைமை தளபதி நரவானே உட்பட ராணுவத்தினர் அனைவரும் தங்களின் அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.லடாக் தாக்குதலில் நம் ராணுவத்தின் வலிமையை சீனா மட்டுமின்றி பல நாடுகளும் புரிந்து கொண்டன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தியாகம் வீணாக கூடாது சோனியா அறிக்கை



காங்., தலைவர் சோனியா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:லடாக் எல்லையில் சீனாவுக்கு எதிரான போராட்டத்தில் நம் வீரர்கள் உயிர் தியாகம் செய்து, ஓராண்டு நிறைவு பெற்றுள்ளது. எல்லையில் பதற்றம் முழுமையாக குறையவில்லை. நம் வீரர்கள் செய்த உயிர் தியாகம் வீணாகிவிடக் கூடாது. சீனாவின் அத்துமீறல் பற்றி, பிரதமர் மோடி இதுவரை எதுவும் கூறவில்லை. எல்லையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி, மத்திய அரசு இதுவரை உண்மையைச் சொல்லவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.Purushothaman - Cuddalore,மலேஷியா
16-ஜூன்-202118:07:32 IST Report Abuse
 N.Purushothaman உயிர் நீத்த வீரர்களுக்கு வீர வணக்கங்கள் ......
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
16-ஜூன்-202107:58:54 IST Report Abuse
blocked user நம் வீரர்கள் தைரியமானவர்கள். அவர்களின் தியாகம்தான் நாட்டிலுள்ளவர்கள் நிம்மதியாக வாழ அடிப்படைக்காரணம். அப்படி இருந்தும் கூட அவர்களை கேவலப்படுத்தும் விதத்தில் காங்கிரஸ் கட்சி நடந்து கொண்டது கண்டனத்துக்கு உரியது. தேசப்பற்று குறைவதால் வந்த பிரச்சினை அது. அதை சரி செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.
Rate this:
Cancel
16-ஜூன்-202105:29:29 IST Report Abuse
மனுநீதி மைனவோ சோனியா அவர்களே தியாகம் வீணாகக்கூடாது என்று சொல்வதற்கு கொலைகார சீனாவுடன் பரிந்துணர்வு ஒப்பந்தம் போட்ட நீங்கள் சொல்வது வெறும் நாடகம்... நம் ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X