லோக் ஜன சக்தி கட்சியில் உச்சக்கட்ட மோதல் : சிராக் பஸ்வான் நீக்கம்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (2+ 8)
Share
Advertisement
பாட்னா :பீஹாரில் லோக் ஜன சக்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து, சிராக் பஸ்வானை, அதிருப்தி எம்.பி.,க்கள் அதிரடியாக நீக்கி யுள்ளனர். இதற்கு பதிலடியாக, ஐந்து எம்.பி.,க்களையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக சிராக் பஸ்வான் கூறியுள்ளார். லோக் ஜன சக்தி கட்சி தலைவரும், பீஹாரைச் சேர்ந்தவருமான ராம்விலாஸ் பஸ்வான், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு
லோக் ஜன சக்தி கட்சி, உச்சக்கட்டம், , தலைவர் பதவி,சிராக்

பாட்னா :பீஹாரில் லோக் ஜன சக்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து, சிராக் பஸ்வானை, அதிருப்தி எம்.பி.,க்கள் அதிரடியாக நீக்கி யுள்ளனர். இதற்கு பதிலடியாக, ஐந்து எம்.பி.,க்களையும் கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.

லோக் ஜன சக்தி கட்சி தலைவரும், பீஹாரைச் சேர்ந்தவருமான ராம்விலாஸ் பஸ்வான், பிரதமர் மோடி தலைமையிலான அரசில் அமைச்சராக இருந்தார். கடந்த ஆண்டு பீஹாரில் சட்டசபை தேர்தல் நடப்பதற்கு முன், உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்தார்.இதையடுத்து, கட்சியின் தலைவராக, அவரது மகன் சிராக் பஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பீஹார் சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமாரை கடுமையாக விமர்சித்து, அக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும், தன் கட்சி வேட்பாளர்களை சிராக் பஸ்வான் நிறுத்தினார். தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே லோக் ஜன சக்தி கட்சி வெற்றி பெற்றது. எனினும் சிராக் பஸ்வானின் இந்த நடவடிக்கையால், ஐக்கிய ஜனதா தளம் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. சிராக் பஸ்வானின் இந்த நடவடிக்கைகளுக்கு கட்சிக்குள் அதிருப்தி ஏற்பட்டது. நீறுபூத்த நெருப்பாக இருந்த இந்த அதிருப்தி, நேற்று முன்தினம் வெடித்தது.

லோக் ஜன சக்தி கட்சியில் சிராக் பஸ்வான் உட்பட, ஆறு எம்.பி.,க்கள் உள்ளனர். இவர்களில் ஐந்து எம்.பி.,க்கள் சேர்ந்து, ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரர் பசுபதிகுமார் பராசை, கட்சியின் பார்லிமென்ட் குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். இந்நிலையில் சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள ஐந்து எம்.பி.,க்களும், லோக் ஜன சக்தி கட்சி தலைவர் பதவியிலிருந்து சிராக் பஸ்வான் நீக்கப்பட்டுள்ளதாக நேற்று அறிவித்தனர். கட்சியின் தற்காலிக தலைவராக, சூரஜ் பான் சிங்கை தேர்ந்தெடுத்துள்ளனர்.

'ஐந்து நாட்களுக்குள் கட்சியில் தேர்தல் நடத்தி, புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டும்' என, அவரிடம், ஐந்து எம்பி.,க்களும் வலியுறுத்தி உள்ளனர். கட்சியின் தலைவராக, பசுபதி குமார் பராஸ் தேர்வு செய்யப்படுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, தனக்கு எதிராக போர்க்கொடி துாக்கியுள்ள ஐந்து எம்.பி.,க்களையும் கட்சியிலிருந்து நீக்கியுள்ளதாக சிராக் பஸ்வான் கூறியுள்ளார்.


துரோகம் செய்யக் கூடாது



கட்சி என்பது அனைவருக்கும் தாய் போன்றது. தாய்க்கு யாரும் துரோகம் செய்யக் கூடாது. ஜனநாயகத்தில் மக்கள் தான் நீதிபதிகள். என் மீது நம்பிக்கை வைத்துள்ள அனைவருக்கும் நன்றி.சிராக் பஸ்வான், தலைவர்,லோக் ஜன சக்தி

Advertisement




வாசகர் கருத்து (2+ 8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Loganathan Kuttuva - Madurai,இந்தியா
16-ஜூன்-202118:52:14 IST Report Abuse
Loganathan Kuttuva பாரதிய ஜனதா கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் காட்சிகளில் வாரிசு அரசியல் இல்லை .
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
16-ஜூன்-202111:30:32 IST Report Abuse
Lion Drsekar வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ எடுத்தவர்களுக்கு அந்த இடம் சொந்தமாவதுபோல் இன்று கட்சியும் ஆகிவிட்டது ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றி, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X