பொது செய்தி

இந்தியா

தனியாருக்கு அதிக விலை ஏன்? தடுப்பூசி நிறுவனம் விளக்கம்!

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஐதராபாத்:'மத்திய அரசுக்கு ஒரு, 'டோஸ்' 150 ரூபாய்க்கு வழங்குவது கட்டுப்படியாகவில்லை; அதை ஈடு செய்யவே, தனியாருக்கு அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தெரிவித்துள்ளது. இலவசம் கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவற்றின் மொத்த உற்பத்தியில், 75 சதவீதத்தை மத்திய அரசு
தனியார் அதிக விலை, தடுப்பூசி , நிறுவனம் விளக்கம்!

ஐதராபாத்:'மத்திய அரசுக்கு ஒரு, 'டோஸ்' 150 ரூபாய்க்கு வழங்குவது கட்டுப்படியாகவில்லை; அதை ஈடு செய்யவே, தனியாருக்கு அதிக விலைக்கு விற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது' என, 'பாரத் பயோடெக்' நிறுவனம் தெரிவித்துள்ளது.


இலவசம்



கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசிகளை இந்தியாவில் இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கின்றன. அவற்றின் மொத்த உற்பத்தியில், 75 சதவீதத்தை மத்திய அரசு விலைக்கு வாங்கி, மாநிலங்களுக்கு இலவசமாக வழங்குகிறது. மீதமுள்ள, 25 சதவீதத்தை, தனியார் மருத்துவமனைகள் வாங்கிக் கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.தனியாருக்கு வழங்கப்படும் தடுப்பூசிக்கான விலை அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாதைச் சேர்ந்த, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரிக்கும், 'கோவாக்சின்' தடுப்பூசிக்கு அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


நான்கு கோடி தடுப்பூசி



இதற்கு, பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி யில் கூறப்பட்டுள்ள தாவது:இதுவரை நான்கு கோடி தடுப்பூசிகளை வழங்கியுள்ளோம். மத்திய அரசுக்குஒரு டோஸ், 150 ரூபாய்க்கு தருவது நீண்டகாலத்துக்கு கட்டுப்படியாகாது.தயாரிப்பு செலவு, நிர்வாக செலவு, பராமரிப்பு செலவு என, எல்லா செலவும் அதிகமாக உள்ளது. நஷ்டத்தை ஈடு செய்யவே, தனியாருக்கு 1,200 ரூபாய்க்கு விற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.மற்ற தடுப்பூசிகளை, மற்ற நிறுவனங்களைவிட மிகக் குறைந்த விலைக்கே வழங்கி வருகிறோம். ஆனால், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு செலவு அதிகமாக உள்ளது. இந்த தடுப்பூசி தயாரிப்பதற்காக, 500 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளோம். இது போன்ற காரணங்களாலேயே, தனியாருக்கு அதிக விலைக்கு விற்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-202116:51:01 IST Report Abuse
ஆரூர் ரங் மருந்து கம்பெனிகள் அரசு டெண்டர்க்கு குறைந்த👎 விலை, பிராண்டுடன் வெளி விற்பனைக்கு கூடுதல் விலை👍 என்பது 60, 70 ஆண்டுகளாக உள்ளதுதான்
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
16-ஜூன்-202113:44:51 IST Report Abuse
Sridhar தனியார் ஆஸ்பத்திரிகளுக்கு கொடுக்கும் விலை பற்றி விளக்கமளிக்க தேவையில்லை. காசுகொடுத்து ஊசி போட்டுக்கொள்பவன் அதன் விலையை மற்ற தடுப்பூசிகளோடு கம்பேர் செய்துதான் போட்டுக்கொள்வான். இறக்குமதி செய்த தடுப்பூசிகளை விட விலை கம்மியாக இருந்தால்தான் கோவாக்ஸினை தேர்ந்தெடுப்பான். ஆகவே, தனியார் சப்ளை செய்வது வியாபாரம். அதில் தலையிட வெளிஆட்களுக்கு உரிமை இல்லை.
Rate this:
Cancel
S MURALIDHARAN - delhi,இந்தியா
16-ஜூன்-202110:42:47 IST Report Abuse
S MURALIDHARAN தமிழ் நாட்டில் எல்லாம் இலவசமா கொடுக்கவேன்டும். ஒட்டு மட்டும் காசுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X