ரூ.10 கோடி இழப்பீடு: இத்தாலி கடற்படையினர் வழக்கு முடித்து வைப்பு

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
புதுடில்லி :கேரள மீனவர்களை சுட்டுக் கொன்றதாக, இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் மீதான குற்ற வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த எண்ணெய் கப்பல், 2012ல் கேரள கடற்கரை அருகே வந்து கொண்டிருந்தது. துப்பாக்கி சூடுஅங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை, கடற்கொள்ளையர்கள் என நினைத்து, இத்தாலி கடற்படையினர்
இத்தாலி கடற்படை, வழக்கு ,முடித்து வைப்பு

புதுடில்லி :கேரள மீனவர்களை சுட்டுக் கொன்றதாக, இத்தாலியைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் மீதான குற்ற வழக்கை முடித்து வைப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடான இத்தாலியைச் சேர்ந்த எண்ணெய் கப்பல், 2012ல் கேரள கடற்கரை அருகே வந்து கொண்டிருந்தது.


துப்பாக்கி சூடு



அங்கு மீன்பிடித்து கொண்டிருந்தவர்களை, கடற்கொள்ளையர்கள் என நினைத்து, இத்தாலி கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், இரண்டு மீனவர் உயிரிழந்தனர். சிங்கப்பூரிலிருந்து எகிப்து நோக்கிச் சென்று கொண்டிருந்த அந்த கப்பல், லட்சத்தீவுகள் அருகே, நம் கடற்படையால் மறித்து, கொச்சி துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டது.

மீனவர்களை சுட்டுக் கொன்றதாக, அந்த கப்பலில் இருந்த, இத்தாலி கடற்படை வீரர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர்.இது தொடர்பான வழக்கை, நீதிபதிகள் இந்திரா பானர்ஜி, எம்.ஆர்.ஷா அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. இந்த வழக்கை முடித்து வைப்பதாக அமர்வு நேற்று அறிவித்தது. இது தொடர்பான உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:இந்திய மற்றும் இத்தாலி அரசுகள் இடையே ஏற்கனவே செய்யப்பட்ட உடன்பாட்டின்படி, இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது. இத்தாலிய கடற்படையினர் மீதான வழக்கு, இனி அந்த நாட்டில் விசாரிக்கப்படும்.


4 கோடி ரூபாய்



பாதிக்கப்பட்ட மீனவர் குடும்பத்துக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட இழப்பீட்டை தவிர, 10 கோடி ரூபாய் வழங்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, இத்தாலி அரசு அனுப்பிய பணம், உச்ச நீதிமன்றத்தின் கருவூலத்தில் உள்ளது.அது, கேரள உயர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்படும். உயிரிழந்த இரண்டு மீனவர் குடும்பத்தாருக்கு, தலா, 4 கோடி ரூபாயும், அவர்கள் பயணித்த மீன்பிடி படகின் உரிமையாளருக்கு, 2 கோடி ரூபாயும் வழங்க வேண்டும்.இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srivilliputtur S Ramesh - Srivilliputtur,இந்தியா
16-ஜூன்-202121:15:28 IST Report Abuse
Srivilliputtur S Ramesh இதே விஷயத்தை திரும்பிப்பார்ப்போம். கடலில், கப்பலில் போனது இந்திய கப்பல் மாலுமிகள் என்று வைத்துக்கொள்ளுவோம். அவர்கள், இத்தாலிய மீனவர்களை கடல் கொள்ளையர்கள் என்று தவறாக எண்ணி, துப்பாக்கியால் சுட்டுக்கொன்று விடுகின்றனர். அந்த இந்திய கடல் மாலுமிகளுக்கு இத்தாலிய நீதிமன்றம் என்ன தண்டனை தரும் ?
Rate this:
Cancel
16-ஜூன்-202120:09:41 IST Report Abuse
.Vittalanand ஒரு மீனவரின் உயிரின் விலை 4 லட்சம் என்று முடிவாகி உள்ளது.
Rate this:
Rajas - chennai,இந்தியா
16-ஜூன்-202121:57:30 IST Report Abuse
Rajas4 கோடி...
Rate this:
Cancel
visu - Pondicherry,இந்தியா
16-ஜூன்-202119:27:49 IST Report Abuse
visu அந்த மீனவர்கல் இழப்பீடாக அவர்கள் எதிர்பார்க்காத ஒரு தொகை வழங்கி முடித்து வைக்கப்பட்டுள்ளது என்ன இதை பல ஆண்டுகள் முன்பே செய்திருக்கலாம் நமது அரசியல் குழப்பங்களில் இது நீண்டு விட்டது இது ஒரு நாட்டு ராணுவம் சம்பந்தப்படும்போது செய்யப்படும் வழக்கமான முறைதான்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X