சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., முன் மோதல் தி.மு.க., - பா.ம.க.,வினர் 7 பேர் படுகாயம்

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
மேட்டூர்:ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., முன் நடந்த மோதலில், தி.மு.க., - பா.ம.க.,வினர் ஏழு பேர் காயம் அடைந்ததால், பதற்றம் நிலவுகிறது. சேலம் மாவட்டம், மேச்சேரி அடுத்த கரும்புசாலையூர் ரேஷன் கடையில், 600க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் இருந்தனர். அந்த கடையை பிரித்து, அருகில் உள்ள ஆரியகவுண்டனுாரில் பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டது.நிவாரண நிதிஇதில், 156 கார்டுதாரர்கள் உள்ளனர். சில நாட்கள்
 ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., முன் மோதல் தி.மு.க., - பா.ம.க.,வினர் 7 பேர் படுகாயம்

மேட்டூர்:ரேஷன் கடையில் எம்.எல்.ஏ., முன் நடந்த மோதலில், தி.மு.க., - பா.ம.க.,வினர் ஏழு பேர் காயம் அடைந்ததால், பதற்றம் நிலவுகிறது.

சேலம் மாவட்டம், மேச்சேரி அடுத்த கரும்புசாலையூர் ரேஷன் கடையில், 600க்கும் மேற்பட்ட கார்டுதாரர்கள் இருந்தனர். அந்த கடையை பிரித்து, அருகில் உள்ள ஆரியகவுண்டனுாரில் பகுதி நேர ரேஷன் கடை கட்டப்பட்டது.நிவாரண நிதிஇதில், 156 கார்டுதாரர்கள் உள்ளனர். சில நாட்கள் மட்டும் இயங்கிய நிலையில், இரு தரப்பினர் மோதலால் அக்கடை மூடப்பட்டது.

இந்நிலையில், பா.ம.க.,வின் மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், நேற்று ஆரியகவுண்டனுார் கடையை திறக்க செய்து, கொரோனா நிவாரண நிதி, 2,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை துவக்கி வைக்க சென்றார்.யார் துவக்கி வைப்பது என்பதில், பா.ம.க., - தி.மு.க.,வினர் இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கினர்.

தி.மு.க., தரப்பில், நால்வர், பா.ம.க., தரப்பில் மூவர் காயமடைந்தனர். அவர்கள் மேட்டூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.நிவாரண தொகை வழங்காமல் ரேஷன் கடை மூடப்பட்டது. அப்பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


தி.மு.க.,வினர் ரகளை



கள்ளக்குறிச்சி, ஏமப்பேர் பகுதியில் உள்ள ரேஷன் கடையில், இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி மற்றும் மளிகை தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. கள்ளக்குறிச்சி தொகுதி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., செந்தில்குமார், பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கினார்.

அங்கிருந்த தி.மு.க., வினர், 'எங்கள் கட்சியினருக்குத்தான் முதலில் வழங்க வேண்டும். உங்கள் கட்சி நபர்களைத் தேர்ந்தெடுத்து வழங்குகிறீர்கள். 10 ஆண்டுகளாக உங்கள் ஆட்சியில், நாங்கள் எந்த நிகழ்ச்சியிலாவது தலையிட்டோமோ? நீங்கள் எதற்கு வழங்குகிறீர்கள்' என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.இதனால், 'அப்செட்' ஆன செந்தில்குமார் அங்கிருந்து சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X