மாணவியரை சீரழித்த சாமியார் சிவசங்கர் பாபா : கைது வேட்டை தீவிரம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாணவியரை சீரழித்த சாமியார் சிவசங்கர் பாபா : கைது வேட்டை தீவிரம்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (74)
Share
சென்னை :பள்ளி மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சிவசங்கர் பாபா டேராடூனில் தலைமறைவாக உள்ளார். அவரின் பாலியல் பலாத்காரம் தொடர்பான வீடியோ சிக்கியுள்ளதால் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ளது 'சுஷில் ஹரி இன்டர் நேஷனல்' பள்ளி. அதை நடத்தி வரும் சிவசங்கர் பாபா என்பவர்
 மாணவியர், சாமியார்,  சிவசங்கர் பாபா  வீடியோ   கைது வேட்டை தீவிரம்

சென்னை :பள்ளி மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கிய சிவசங்கர் பாபா டேராடூனில் தலைமறைவாக உள்ளார். அவரின் பாலியல் பலாத்காரம் தொடர்பான வீடியோ சிக்கியுள்ளதால் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் முடுக்கி விட்டுள்ளனர்.

சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ளது 'சுஷில் ஹரி இன்டர் நேஷனல்' பள்ளி. அதை நடத்தி வரும் சிவசங்கர் பாபா என்பவர் அங்கேயே ஆசிரமும் அமைத்துள்ளார். அவர் தான் நடத்தும் பள்ளியில் படிக்கும் மாணவியரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் கூறியதாவது: சிவசங்கர் பாபாவின் ஆசிரம பள்ளியில் படிக்கும் மாணவியர் முன்னாள் மாணவியர் ஆசிரியர்கள் மற்றும் ஏற்கனவே பள்ளியில் வேலை பார்த்தவர்கள் என பலரிடமும் விசாரணை நடத்தினோம். தந்தையை இழந்த ஏழை பிள்ளைகளை அவர்களின் தாயாருடன் சிவசங்கர் பாபா தன் ஆசிரமத்தில் சேர்த்து அவர்களை அங்கேயே தங்க வைப்பார். தாய்மார்கள் ஆசிரமத்தில் இருக்க அருகில் இருக்கும் பாபாவின் பள்ளியில் அவர்களின் பிள்ளைகள் படித்து வருகின்றனர்.


latest tamil news



தந்தையை இழந்த இப்படிப்பட்ட மாணவியர் தான் சிவசங்கர் பாபாவின் இலக்காக இருந்துள்ளனர். அமாவாசை மற்றும் பவுர்ணமி நாட்களில் நடக்கும் பூஜைகளில் இந்த மாணவியரை பங்கேற்க வைத்துள்ளார். அப்போது பாலியல் துன்புறுத்தல்கள் நடைபெற்றுள்ளன.
சிவசங்கர் மீதான பாலியல் குற்றச்சாட்டுக்கள் உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் வீடியோவும் கிடைத்துள்ளது. அதில் இருக்கும் காட்சிகள் எல்லாம் ஆபாசத்தின் உச்சமாக உள்ளன.

பாபாவின் ஆசிரமத்தில் இருப்போர் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவியருக்கு 'பாபா தான் உங்கள் பாதி; பாபா தான் உங்களுக்கு எல்லாமே. பாபா எதைச் செய்தாலும் அது உங்கள் நன்மைக்கானது. சொல்லப் போனால் பாபா மட்டுமே உங்களுக்கான கடவுள். அதனால் பாபா எதைச் செய்தாலும் அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட நன்மைக்கானது' என்று அவ்வப்போது போதித்து ஏமாற்றியுள்ளனர்.இதனால் பாலியல் ரீதியாக பாபா தொந்தரவு கொடுத்த போதெல்லாம் 'கடவுள் நமக்கு செய்யும் நன்மை' என்று கருதி பலரும் அதை வெளியில் சொல்லாமல் இருந்துள்ளனர். இதுதான் பாபாவுக்கு வசதியாகப் போய் விட்டது.

எங்கள் கைகளில் சிக்கி இருக்கும் ஆபாச வீடியோ ஒரு ஆண்டுக்கு முன் எடுக்கப்பட்டது. ஒரு பவுர்ணமி நாளில் எடுக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த வீடியோ கிடைத்த பிறகே சிவசங்கர் பாபா எங்கிருந்தாலும் விடக்கூடாது என முடிவெடுத்தோம். அவர் டேராடூனில் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. விரைவில் அவரை கைது செய்வோம்.
இவ்வாறு போலீசார் கூறினர். சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முன் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான வன்கொடுமை தடுப்பு பிரிவு போலீசார் சிவசங்கர் மீதான புகார்களை விசாரித்தனர். அத்துறையை சேர்ந்த பெண் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பாதிக்கப்பட்ட இளம் பெண்கள் கூறியதை கேட்ட போது ரத்தம் கொதித்தது. ஒரு மாணவிக்கு ஏற்பட்ட நிகழ்வு குறித்து அந்தப் பெண்ணின் தோழி ஒருவர் கூறினார். அதாவது அந்த மாணவி 9ம் வகுப்பு படிக்கும் போதே சிவசங்கரால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அதை கேட்டதும் இதயமே வெடித்து விடும் போல இருந்தது. பாதிக்கப்பட்ட மாணவியிடமும் விசாரித்தோம். இப்படி பல பெண்களின் வாழ்க்கையோடு சிவசங்கர் விளையாடி இருக்கிறார். பாதிக்கப்பட்டது எல்லாம் ஏழை பிள்ளைகள். வெளியில் சொல்லவே அஞ்சுகின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


'லுக்அவுட்' நோட்டீஸ்



மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கேளம்பாக்கம் சாமியார் சிவசங்கர் பாபா மீது 'போக்சோ' உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர். உடல்நலக்குறைவு எனக்கூறி உத்தரகண்ட் மாநிலம் டேராடூன் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா அனுமதிக்கப்பட்டுள்ளார்.டி.எஸ்.பி. குணவர்மன் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர் எஸ்.ஐ. ஸ்டீபன் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு டேராடூன் சென்றனர். அங்கு சிவசங்கர் பாபாவிடம் விசாரணையை துவக்கி உள்ளனர். இ

ந்நிலையில் சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாமல் இருக்க குடியுரிமைத்துறை அதிகாரிகளிடம் 'லுக் அவுட்' நோட்டீசை சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழங்கியுள்ளனர். மேலும் தரைமார்க்கமாக நேபாளத்திற்கு தப்பி செல்லாமல் இருக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X