பொது செய்தி

தமிழ்நாடு

வடதெருவுக்கு வாய்ப்பா; வினையா?

Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
டெல்டா மாவட்டங்களில் ஒன்றான, புதுக்கோட்டையில் உள்ள வடதெரு கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வெளியிட்டுள்ளது. இதற்கு, தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
 வடதெருவுக்கு வாய்ப்பா; வினையா?

டெல்டா மாவட்டங்களில் ஒன்றான, புதுக்கோட்டையில் உள்ள வடதெரு கிராமத்தில், ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான ஏல அறிவிக்கையை, மத்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை வெளியிட்டுள்ளது. இதற்கு, தமிழக கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த ஏல அறிவிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து, மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.


ஒப்பந்தம்வழக்கம் போல, 'ஹைட்ரோ கார்பன் எடுப்பதால், டெல்டா மண்டலமே சீரழிந்து விடும், விவசாயம் பொய்த்து விடும், மக்களது உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்' என்ற கருத்துகள், முன்வைக்கப்படுகின்றன. இந்த ஏல அறிவிக்கையை முழுமையாக படிக்கும் போது, பல்வேறு விபரங்கள் தெரிய வருகின்றன.முதலில், வடதெரு கிராம பகுதியின் கீழே, எண்ணெய் இயற்கை வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அதை துரப்பணம் செய்து பிரித்து எடுப்பதற்கான ஒப்பந்தம், 2007ம் ஆண்டே வழங்கப்பட்டு உள்ளது.

அது ஏதோ, இப்போது தான் வழங்கப்படுகிறது என்ற எண்ணம் வேண்டாம். அப்போது தமிழகத்தில், தி.மு.க., ஆட்சி தான் இருந்தது. 'கே.இ.ஐ., - ஆர்.எஸ்.ஓ.எஸ்., மேரிடைம் லிமிடெட்' என்ற, ஆந்திர பிரதேச நிறுவனத்துக்கு, இந்த ஒப்பந்தம் அப்போதே வழங்கப்பட்டு, பணிகள் நடந்து வருகின்றன. இது, 20 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் என்பதால், 2027 வரை செயல்பாட்டில் இருக்கும்.நிதி நெருக்கடி காரணமாக, இந்த நிறுவனமே திவாலாகி விட்டது.

தற்போது, இது திவால் சட்டத்தின் கீழ், வேறொரு நிறுவனத்தால் கையகப்படுத்துவதற்காக காத்துஇருக்கிறது என்பது, இந்த விஷயத்துக்குத் தொடர்பில்லை என்றாலும், தெரிந்து கொள்ள வேண்டிய கிளைக் கதை. இன்னமும், கே.இ.ஐ., - ஆர்.எஸ்.ஓ.எஸ்., நிறுவனத்திடம் தான், வடதெரு எண்ணெய் கிணறுகளை துரப்பணம் செய்வதற்கான ஒப்பந்தம் உள்ளது. அதனால், இப்போது புதிதாக எதற்கு ஏலம் விட மத்திய பெட்ரோலியத்துறை முயற்சி செய்ய வேண்டும்?அங்கே தான், ஏல அறிவிக்கையில் உள்ள வரைபடங்கள், விபரம் சொல்கின்றன. மேலும், எந்தப்பகுதி, எவ்வளவு ஏக்கர் ஏலத்துக்கு விடப்படுகிறது என்ற, விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளது.வாய்ப்பில்லைlatest tamil news
மொத்தம், 463.2 சதுர கிலோ மீட்டர் நிலம், ஹைட்ரோ கார்பன் துரப்பண மேம்பாட்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.அந்தக் கிராமம் இவ்வளவு பெரிய பகுதியாக இருக்க வாய்ப்பில்லை. அந்தப் பகுதியை ஒட்டியிருக்கும், கடற்கரையோரத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பது வரைபடத்தில் குறிக்கப்பட்டுள்ளது. ஏல அறிக்கையில், Cauvery / Tamilnadu & Cauvery Offshore என்று தான் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹைட்ரோ கார்பனுக்காக மேம்படுத்தப்பட வேண்டிய பகுதி, கடற்கரையோரம் உள்ள பகுதி என்ற கருத்தையே, இந்த ஏல அறிவிக்கை தருகிறது. பொதுவாக, இந்திய கடற்கரையோர பகுதிகள் பலவற்றில், எண்ணெய் வளம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, சிறு எண்ணெய் வயல்களை மேம்படுத்தும் திட்டம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. இந்த ஏலமும், அதுபோன்ற சிறுசிறு எண்ணெய் வயல்களை மேம்படுத்துவதற்காக, தனியாருக்கு ஏலம் விடும் முயற்சியே.மேலும், இந்த வடதெரு கிராமம், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் வருகிறது. அதனால், இங்கே ஹைட்ரோ கார்பன் பிரித்தெடுக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியாது என்ற, கருத்தும் சொல்லப்படுகிறது.


அனுமதிடெல்டா மாவட்டங்களில், ஒரு சில குறிப்பிட்ட துறை சார்ந்த திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்படாது என்று தான் சட்டம் சொல்கிறதே தவிர, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்ட திட்டங்களை பற்றி, இந்தச் சட்டம் எந்த தெளிவையும் தரவில்லை. அதாவது, அதைத் தடுத்து நிறுத்தச் சொல்லவில்லை.பூமித்தாய் நமக்கு ஏராளமான வளங்களைக் கொடுத்து வாழ வைக்கிறாள். அரிசியும், ஹைட்ரோகார்பனும் அவள் கொடை தான். இதில் ஒன்றை ஏற்பதும், மற்றொன்றை விலக்குவதும் நம் அறியாமை தானே! - நமது நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S Bala - London,யுனைடெட் கிங்டம்
16-ஜூன்-202114:38:31 IST Report Abuse
S Bala தமிழ்நாடு எந்த வகையிலும் முன்னேறி விட கூடாது என்று நினைக்கும் தெலுங்கர்களும் இந்தியா முன்னேறி விட கூடாது என்று நினைக்கும் சிறு சிறுபான்மை கூட்டமும் இந்தியாவையே விற்க துடிக்கும் கான்-கிராஸ் அடிப்பொடிகளும்தான் இந்த திட்டத்தை எதிர்ப்பார்கள். கையக படுத்தும் நிலத்தையும் அதற்கு சுற்றிலும் ஐநூறு மீட்டர் அளவு நிலத்தையும் சந்தை மதிப்புக்கு நான்கு மடங்கு கொடுத்து வாங்கிக்கொள்ளட்டும். அந்த விவசாயிகள் அருகே உள்ள இடங்களில் அதே அளவு நிலத்தையும் வாங்கி வீடும் கட்டி கடன் இல்லாமல் வாழ்வார்கள். நெல் புல் எல்லாம் மற்ற இடங்களில் இருந்து வரவழைத்துக்கொள்ளலாம்
Rate this:
Cancel
Vittalanand -  ( Posted via: Dinamalar Android App )
16-ஜூன்-202113:35:47 IST Report Abuse
Vittalanand இதனால்பயிர்களுக்கோ நிலத்தடி நீருக்கோ பாதகம் எதுமயில்லை. ஆழ்துளை கழாய் காண சிறு நிலம் மட்டும் தேவை. துறப்பண வேலைகளுக்கு தாற்காலிகமாக சிறிது நிலம் தேவை. நமக்கு பெட்ரோல் வேண்டும் ஆனால் நம் பூமிக்கு அடியில் உள்ள கச்சா எண்ணெயை எடுக்கக்கூடயது. நல்ல திராவிடக்கொள்கை.. தமிழ்நாடு ஒன்றியம் அமைத்தால் பெட்ரோலுக்கு இது தேவை. துவரம் பருப்பு என்கிறங்கிருந்து வருகிறது என்று அறியாமல் திராவிட நாடோ சுடுகாடோ கேட்டவடர்களாயிற்றே
Rate this:
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
16-ஜூன்-202114:13:12 IST Report Abuse
Dhurveshஹா ஹா சரி 10 வருடம் உங்கள் அடிமை ஆட்சி தானே இருந்தது அப்போ எல்லாம் கழட்டாத நீங்கள் உங்கள் மோடியிடம் சொல்லி இவ்வளவு நல்ல super திட்டங்களை உங்கள் குஜராத்துக்கு கொண்டு போக வேண்டியது தானே அப்புறம் என்ன , மோடி ரொம்ப நல்லவர் , எல்லா நல்ல திட்டங்களை எல்லாம் எங்களுக்கே கொடுப்பார் அவ்வளவு பாசம் TN நாசமாக்கநும் என்கிற வெறி அவருக்கு......
Rate this:
Cancel
16-ஜூன்-202111:51:06 IST Report Abuse
theruvasagan கூடாதுன்னு டெல்லிக்கு கடுதாசு போட்டாச்சு. வரவரைக்கும் அப்பப்ப ஜெராக்ஸ் எடுத்து அனுப்பிச்சுகிட்டே இருக்கலாம். கைப்பட கடிதம் எழுதிய எங்கள் கண்மணி வாழ்க. கடமை முடிந்தது கையெழுத்து போட்ட மடலாக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X